சேமிப்பு எதிர்கால உயிர்நாடி கட்டுரை

semippu ethirkala uyirnaadi katturai in tamil

சேமிப்பு எதிர்கால உயிர்நாடி கட்டுரை

சேமிப்பு என்பது நமது முன்னேற்றத்தின் உயிர் நாடியாக இருப்பதனால் நாம் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்வில் உயர் நிலைகளை அடைய வேண்டும்.

சேமிப்பு எதிர்கால உயிர்நாடி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அவசியம்
  • கடினமான காலங்கள்
  • சேமிக்க வேண்டியவை
  • நன்மைகள்
  • முடிவுரை

முன்னுரை

“சிறுதுளி பெருவெள்ளம்” என்ற ஒரு பழமொழியை நாம் கேட்டிருப்போம் அது நமக்கு ஒரு ஆழமான கருத்தை தருகின்றது.

அதாவது சிறுசிறுக நாங்கள் சேமிக்கும் விடயங்களே ஒரு பெரிய தொகையாக நமக்கு அவசியம் ஏற்படும் நேரங்களில் உதவும் என்பதனால் தான் நமது முன்னோர்கள் அதனை நமக்கு வலியுறுத்தினார்கள்.

இத்தகைய சேமிப்பு பழக்கமே நமது நாட்டிற்கும், நமக்கும் நலன் தருவதனால் தான் இந்த பழக்கத்துக்கு அதிக முக்கியத்துவமானது கொடுக்கப்படுகிறது.

அவசியம்

பொதுவாக மனித வாழ்வில் இளமை, முதுமை ஆகியன இயல்பானவை இளமை பருவத்தில் எமக்கு கடினமாக உழைக்க கூடிய ஆற்றலானது இருக்கும்.

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது போல நாம் இளமை காலத்தில் கடுமையாக உழைத்து எமது பிற்காலத்துக்கும் சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.

இதனால் தான் முதுமையிலும் எம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும். இதனையே இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான் என்று கூறுவார்கள்.

கடினமான காலங்கள்

வாழ்வில உயர்வு தாழ்வுகளும் மேடு பள்ளங்களும் மாறி மாறி வருவது இயற்கை என்பதனால் மனிதர்கள் எப்பொழுதும் கடினமான சூழ்நிலைக்கு தயாராக இருக்க வேண்டும். இதனை முன்னாயத்தம் என்று கூறலாம்.

உதாரணமாக நோய் வாய்ப்படுகின்ற நேரங்களில் எம்மால் எந்த வேலைகளையும் செய்ய முடியாது மற்றும் அசாதாரணமான காலநிலை நிலவும் காலங்களில் நாம் இங்கே பிழைத்திருக்க எமக்கு சேமிப்பு மிகவும் அவசியமானதாக உள்ளது.

இவற்றிக்கு ஏற்றாற்போல் தன்னை தயார்படுத்தி கொள்ளும் மனிதனே இங்கு வெற்றியாளனாய் விளங்குவான்.

சேமிக்க வேண்டியவை

சேமிக்க வேண்டியவை இந்த உலகத்தில் ஏராளம் உள்ளன. நாம் அனைவரும் அதிகம் சேமிப்பது பணம் என்பதை தான் அதனை தாண்டியும் நாம் சேமித்து வைத்திருக்க வேண்டியது எம்மை வாழ்விக்கும் மீள உருவாக்க முடியாத இயற்கை வளங்களையும் தான்.

சுத்தமான காற்று, தூய்மையான காடுகள், நாம் உண்ணும் உணவு பொருட்கள், கடல் வளங்கள், இயற்கை வளங்கள் போன்றவை அவை அருகி செல்வதனால் மனித வாழ்க்கையானது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக மாறி வருகின்றது ஆகவே நாம் அவற்றையும் சேமிக்க வேண்டும்.

நன்மைகள்

சேமிப்பின் வாயிலாக நாம் பல எண்ணற்ற நல்ல விடயங்களை பெற்று கொள்ளலாம். சுயமாக சேமிக்க கூடிய ஒருவரால் பிறரை தங்கி இராமல் வாழ்வில் இலகுவாக முன்னேறி விட முடியும்.

கடினமான சூழ்நிலைகளை சமாளித்து முன்னேற நமக்கு சேமிப்பு ஒரு உதவிகரமான விடயமாக இருக்கின்றது.

இதனால் சிறுபிள்ளைகளுக்கு சிறுபராயத்தில் இருந்தே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பெற்றோர்கள் விரும்புகின்றனர். இதன் நன்மைகள் எதிர்காலத்தில் நமது சமூகத்தை பாதுகாக்க மிகவும் உதவிகரமானதாக அமையும்.

முடிவுரை

இன்றைய காலகட்டத்தில் வறுமையில் நிலையிலோ அல்லது இடைத்தர நிலையிலோ வாழ்கின்ற மக்கள் அதிகளவான சவால்களை வாழ்வில் எதிர்கொள்ள காரணமாக இருப்பது அவர்களிடம் போதியளவான சேமிப்பு பழக்கமானது காணப்படுவதனாலேயே ஆகும்.

ஆகவே சேமிப்பு என்பது நமது முன்னேற்றத்தின் உயிர் நாடியாக இருப்பதனால் நாம் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்வில் உயர் நிலைகளை அடைய வேண்டும்.

Read more: சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு கட்டுரை