சிறுநீரகம் பலம் பெற உணவு

சிறுநீரகம் பலம் பெற உணவுகள்

நமது உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உடலில் இருந்து பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் வேலையைச் செய்வது சிறுநீரகங்களாகும்.

இந்த சிறுநீரகங்கள் பழுதடைந்துவிட்டால் வெளியேற்றப்படாத கழிவு நீர் உடலின் கை, கால், முகம் மட்டுமல்லாது உள்ளுறுப்புக்களான நுரையீரல், இதயம் போன்றவற்றைச் சுற்றியுள்ள ஜவ்வுக்களிலும் தேங்கத் தொடங்கும்.

இதனால் மூச்சு விடுவதில் சிரமம், நடப்பதில் சிரமம் எனத் தொடங்கி உயிர் ஆபத்து வரை பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

பொதுவாகச் சிறுநீரகப் பிரச்சினை சக்கரை நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடற்பருமனானவர்கள் போன்றவர்களை எளிதில் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

நோய் வந்த பின்பு என்ன செய்வது என்று தவிர்ப்பதைவிட நோய் வரும் முன் பாதுகாப்பது சிறந்தது. அந்தவகையில் சிறுநீரகங்கள் பலம்பெறத் தேவையான உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

சிறுநீரகம் பலம் பெற உணவுகள்

பூண்டு

பூண்டு பல நன்மைகளை நமக்கு அளிக்கின்றது. தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டுவருவதால் சிறுநீரகம் மட்டுமன்றி உடலின் ஏனைய உறுப்புக்களும் பாதுகாக்கப்படும். பூண்டானது சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் சிறுநீரகக் குழாய்களில் ஏற்படும் தொற்றுக்களையும் நீக்கும். எனவே தினமும் ஒரு பல் பூண்டைப் பச்சையாக உண்பது நல்லது.

கொத்தமல்லி

கொத்தமல்லியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி ஆறிய பின்னர் அதனை ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் சிறுநீரகங்களில் உள்ள ப்ரோக்சின்கள் அனைத்தும் வெளியேறி சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம்.

திராட்சை

திராட்சையில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்து இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். மேலும் ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு தேவையான முக்கிய கூறுகளில் இதுவும் ஒன்றாகும். சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதையும் தடுக்கின்றது.

இஞ்சி

சிறிது இஞ்சியை தேல் சீவி நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி அதில் எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் கலந்து இரண்டு முறை வாரத்தில் குடிக்கலாம். இஞ்சியிலுள்ள ஆண்டி ஆக்சிடென்ட் சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு சிறந்தது. ரத்தம் மற்றும், சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் சக்தியையும் கொண்டது.

எலுமிச்சை

இயற்கையான அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சை சாறு சிறுநீரில் சிற்றின் அளவை அதிகரிக்க செய்கின்றது. இதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்பை குறைக்கின்றது. எனவே தினமும் கால் லிட்டர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து குடித்து வரலாம்.

எனினும், அதிகப்படியான வைட்டமின் C யை எடுத்துக் கொள்வது ஆபத்தையும் தரும். வைட்டமின் C ஆக்சலைட்டாக மாறி சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கலாம்.

மஞ்சள்

வாரத்தில் மூன்று முறை தண்ணீர் கலந்த பாலில் மஞ்சள், மிளகு, நாலு பூண்டுப் பற்கள் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.

சின்ன வெங்காயம்

தினமும் மூன்று சின்ன வெங்காயத்தைப் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடலாம். சின்ன வெங்காயம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை கொண்டது. வெங்காயத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் கனிமச் சத்துக்கள் படிவத்தைத் தடுத்து சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்கும்.

Read More: ஓமவல்லி இலை பயன்கள்

மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள்