இஞ்சி குடும்பத்தைச் சார்ந்ததுதான் சித்தரத்தை ஆகும். இது கிழக்காசிய நாடுகளில் “சீன இஞ்சி” என்று அழைக்கப்படுகின்றது. சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. சித்தரத்தை, பேரரத்தை என்பதாகும். இந்தியாவில் இவை பயிரிடப்படுகின்றன. இதன் வேர் பல மருத்துவ குணங்கள் கொண்டது.
சித்தரத்தை பயன்கள்
ஆஸ்துமா, இளைப்பு, இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தும். மூச்சடைப்பு ஏற்படும் நபர்களுக்கு சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு இவை அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துப் பொடியாக்கி அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
எலும்புகளை பலப்படுத்தும். சித்தரத்தை அமுக்கிரா கிழங்கை இடித்து பொடியாக்கி 48 நாட்கள் இரண்டு வேளை சாப்பிட்டு வர எலும்பு பலம் பெறும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும். இது நிறைய வகையான புற்று நோய்களை குணப்படுத்தக்கூடியது. குறிப்பாக குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும். இதிலுள்ள ப்ளோனாய்டுகள், என்சைம் செயற்பாட்டை சரிசெய்து புற்று நோயை விரட்டுகிறது.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடம்பில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றுகின்றது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. திசுக்களுக்கு ஊட்டம் அளிக்கின்றது.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஜீரண அமிலத்தை சரியாகச் சுரக்கச் செய்து உமிழ் நீரைச் சுரக்கச் செய்து உணவை ஜீரணமாக்க உதவுகின்றது.
அனாஸியா மற்றும் அடி வயிற்று வலியை சரிசெய்கின்றது.
இதயம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குணமாகி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.
புழுக்கடித் தொந்தரவு, வயிற்று மந்தம், வயிற்றுப் போக்கு போன்றவற்றை குணப்படுத்தும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை இவற்றை சரி செய்கின்றது.
கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு போன்றவை உடலில் தங்காமல் பாதுகாக்கிறது. இதிலுள்ள ப்ளோனாய்டுகளான காம்பெர்போல் கவெர்செடின் மற்றும் கேலானில் போன்ற பொருட்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் உப்பின் அளவை குறைத்துக் கொழுப்பு அமிலங்கள் விளைவை எதிர்த்துப் போராடும்.
ஆண்மையை அதிகரிக்க செய்கின்றது. விந்துக்கள் எண்ணிக்கைகளை அதிகரிக்கவும் செய்கிறது. சித்தரத்தை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும். 2014 ஆம் ஆண்டு ஈரானிய ஜர்னல் நடத்திய ஆய்வின்படி மூன்று மடங்கு விந்தணுக்களை பெருக்க உதவுவதாக கூறியுள்ளனர்.
அறிவாற்றலை அதிகரிக்கிறது. சித்தரத்தையிலுள்ள அசிட் டோக்ஸிக்கியோகிகல் அசண்டோட் என்ற பொருள் அறிவாற்றலை அதிகரிக்கும். வயதான காலங்களில் நினைவாற்றல் இழப்பைத் தடுத்து மூளையின் ஆரோக்கியத்தை பேண உதவுகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகப்படுத்துகின்றது.
காய்ச்சலைக் குணப்படுத்த உதவுகின்றது. பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்புத் தன்மை காய்ச்சலை குறைக்க பயன்படுகின்றது.
உடலில் உள்ள உடல் உபாதைகளைக் குணமாக்கும். காலை எழுந்ததும் குமட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்றவற்றை குணமாக்கும். காலை எழுந்தவுடன் ஒரு துண்டு சித்தரத்தையை வாயில் போட்டு மென்றால் இப்பிரச்சினைகள் நீங்கும்.
Read more: நிலாவரை சூரணம் பயன்கள்