கண்டக சனி என்றால் என்ன என்பதை விரிவாக இந்த பதிவில் காண்போம்.
நம் வாழ்க்கையில் அதிக கஷ்டங்கள் வந்தால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது சனி பகவான் அந்த அளவுக்கு நம் வாழ்க்கையை ஆட்டி வைப்பவர் சனி பகவான்.
கண்டக சனி என்றால் என்ன
கண்டம் என்றால் கழுத்து கழுத்தை பிடிக்கும் சனி என்று கூறலாம். குரல் வளையை இறுக்க பிடித்தால் எப்படி நாம் திணறுகிறமோ.
அதே போல் 7ஆம் இடத்திற்கு வரும் சனியால் இடர்பாடுகள் வரும் என்பதே கண்டக சனியின் முதல் குறிப்பு.
அதாவது சந்திரன் இருக்கும் இடத்தினை ராசி என்று சொல்லுகிறோம்.
சந்திரினுக்கு முன்னும் பின்னும் அல்லது சந்திரனோடு இணைந்தோ சனி சஞ்சாரம் செய்தால் அதற்கு ஏழரை சனி என்று பெயர்.
அதே போல் சந்திர ராசியில் 7ஆம் இடத்தில் கோச்சார சனி வந்தால் அதை கண்டக சனி என்பார்கள்.
அதாவது சனிதேவர் ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் நிலையே கண்டக சனி ஆகும்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியாக நடக்காது ஜாதக அமைப்பு, நடப்பு திசை மற்றும் ஜாதகரின் வயதெல்லையை பொறுத்தும் சனி பகவானின் செயல்பாடுகள் இருக்கும்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.
You May Also Like: