சமுதாயம் தோன்றியதிலிருந்து நடைபெற்ற ஏற்றுக் கொள்ள இயலாத செயற்பாடுகளை முறைப்படுத்தும் வகையில் ஒரு முறையை வகுத்து அதை மீறுபவர்களுக்குத் தண்டனை என்கின்ற நோக்கில்தான் சட்டம் என்பது நடைமுறைக்கு வந்திருக்கும் என ஊகிக்கப்படுகின்றது.
இந்தச் சட்டமானது குற்றத்தின் அளவுக்கு அல்லது பாதிப்பிற்கு ஏற்ப தண்டனைகளை வழங்குகின்றது. அதாவது ஆயுள் தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை, அபராதம், தூக்கு தண்டனை எனப் பல தண்டனைகள் வழங்கப்படுகின்றது.
இத்தகைய தண்டனைகளுள் கடுங்காவல் தண்டனையும் முக்கிய தண்டனையாகக் காணப்படுகின்றது. இத்தண்டனையானது இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளன.
கடங்காவல் தண்டனைகளாக 10 வருட காலம் சிறைத் தண்டனை அல்லது 20 வருடகாலம் சிறைத் தண்டனையாகக் கூட இருக்கலாம். இது குற்றத்தினைப் பொறுத்து அமையும்.
கடுங்காவல் தண்டனையானது பொதுவாகப் பாலியல் வல்லுறவு, கொலை போன்ற பாரிய குற்றச் செயல்களுக்காக வழங்கப்படுவதைக் காண முடிகின்றது.
குற்றம் புரிந்தவருக்கு பயன்பாடு அடிப்படையில்தான் தண்டனைகள் இருக்க வேண்டுமே தவிர, உணர்ச்சி அடிப்படையில் இருக்கக் கூடாது.
வேலைவாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட காரணங்களால் நிகழும் குற்றங்களைக் காட்டிலும், தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு, பழி வாங்கும் குணம், முறையற்ற வழிகளில் பொருள் ஈட்டுதல் போன்ற காரணங்களால் நிகழும் குற்றச் செயல்களே அதிகம் சமூகத்தில் உள்ளன.
Table of Contents
கடுங்காவல் தண்டனை என்றால் என்ன
சிறையில் இருக்கும் காலத்தில் குற்றவாளி கடுமையான வேலைகளைச் செய்து சிறைக்காலத்தைக் கழிக்க வேண்டும் என்று வழங்கப்படும் தண்டனை கடுங்காவல் தண்டனையாகும்.
மேலும் ஆயுள் தண்டனை என்பது கடுங்காவல் தண்டனை தான். மஹாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில், இதை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறை
இன்றைய உலகில் குற்றங்களை கண்டுபிடித்தல் (Detection) என்பதை விட தடுத்தல் (Prevention) என்பது அதிகம் முக்கியத்துவம் பெற்றதாகும்.
ஏனெனில் குற்ற நிகழ்விற்கு பின் குற்றவாளியை இனங்காண்பது மற்றும் தண்டனைக்குட்படுத்துவது போன்ற செயற்பாடுகள் குற்றவிசாரணை முறைமையின் (Criminal Investigation) எதிராக்க விளைவுகளை சமூகத்திற்கு அளித்து அதன் மூலம் எதிர்காலக் குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் எனும் நிலைப்பாட்டைப் பார்க்கினும் குற்றத்தடுப்பு முறைமை அதை விட சிறப்பானதே.
மேலும் குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டிய சட்டங்கள், குற்றத்தை நிரூபிக்க தகுந்த சாட்சி வேண்டும் என்ற முறையைச் சொல்லும்போது எப்படி, எந்த வழியில் தப்பிக்கலாம் என்ற வழிகாட்டுதல்களை வழங்கி விட்டது என்றே அர்த்தம்.
காரணம் தவறு செய்யும் எந்த மனிதனும் தன் செயலுக்கு வருந்தாமல், தான் செய்ததற்கு ஒரு சுய நியாயத்தைக் கற்பிப்பதோடு, அது குற்றமாக இருந்தால் தப்பிக்க என்ன வழி என் முயற்சிக்கும் சூழ்நிலையே நிலவுகின்றது.
எனவே தனிமனித ஒழுக்கமும், வாழ்க்கை குறித்த புரிதலும் அனைவருக்கும் இருக்க வேண்டும். இதற்காக அடிப்படைக் கல்வியறிவு வழங்க வேண்டும்.
எனினும் நவீன புலனாய்வு முறைகள், தெளிவான சட்ட அறிவு, நீதிமன்ற வழக்குகள் விசாரணையில் கவனம் செலுத்துதல் போன்றவையும் குற்ற நிகழ்வுகளை கணிசமாகக் குறைக்கத் துணைபுரியும் என்பதும் மறுப்பதற்கில்லை.
Read more: ஆயுள் தண்டனை என்றால் என்ன