இந்த பதிவில் “ஓசோன் படலம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
ஓசோன் படையானது சூரியனில் இருந்து வருகின்ற பாதிப்பு கூடிய கதிர்வீச்சுக்களை தடுக்கின்ற முக்கிய பணியை செய்கின்றது.
Table of Contents
ஓசோன் படலம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அமைந்துள்ள இடம்
- ஓசோன் படலம் தொழிற்பாடு
- பாதிக்கப்படும் ஓசோன் படை
- ஓசோன் படலத்தை பாதிக்கும் காரணிகள்
- ஓசோன் தேய்வால் உண்டாகும் விளைவுகள்
- முடிவுரை
முன்னுரை
ஓசோன் படலம் என்ற வார்த்தை பிரயோகத்தை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இது பூமியையும் பூமியில் வாழ்கின்ற மனிதர்களையும் ஒரு கவசம் போல பாதுகாக்கின்றது.
இது ஆக்சிசன் மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டிருக்கும். வளிமண்டலத்தில் ஒரு படையாக உருவாகி பூமியினுள் பாதகமான கதிர் வீச்சுக்கள் உள்வராமல் இது தடுக்கின்றது.
இதனால் தான் இது மிகவும் முக்கியமான படையமைப்பாக காணப்படுகிறது இக்கட்டுரையில் ஓசோன் படை தொடர்பாக காண்போம்.
அமைந்துள்ள இடம்
ஓசோன் படையானது வளிமண்டலத்தின் படை மண்டலத்தில் காணப்படுகிறது. இந்த படையானது பூமியில் இருந்து 15 – 35 கிலோமீற்றர் இடையான உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு மெல்லிய படையாகும்.
இது பூமியின் மத்தியகோட்டு பகுதிகளில் அதிகளவான உயரம் 28 கிலோமீற்றர்களில் காணப்படும். அது போல பூமியின் துருவ பகுதிகளில் 15 கிலோமீற்றர் என்ற உயரத்தில் காணப்படும்.
இவ்வாறு அமைந்துள்ள இந்த படையானது பூமியினை பாதுகாக்கின்ற ஒரு கவசமாக தொழிற்படுகின்றது.
ஓசோன் படை தொழிற்பாடு
ஓசோன் படையானது சூரியனில் இருந்து வருகின்ற பாதிப்பு கூடிய கதிர்வீச்சுக்களை தடுக்கின்ற முக்கிய பணியை செய்கின்றது. இது ஒரு வடிகட்டியினை போல ஆபத்தான புற ஊதாகதிர்கள் பூமியினுள் செல்லவிடாமல் தடுக்கின்றது.
இந்த பாதகமான கதிர்கள் பூமியில் உள்நுளைவதனால் மனிதர்களுக்கு பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஓசோன் படையானது பூமிக்கு தேவையான கதிர்களை உள்ளே அனுமதிப்பதுடன் பாதகமான கதிர்களை உறிஞ்சுதல் மற்றும் தெறிப்படைய செய்தல் போன்ற மிக முக்கிய பணிகளை செய்கிறது. இது பூமியின் பாதுகாப்பிற்கு மிக அவசியமாகும்.
பாதிக்கப்படும் ஓசோன் படை
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஓசோன் படையானது அண்மை காலங்களாக தேய்வடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமியின் துருவ பகுதிகளில் காணப்படும் ஓசோன் படையினுடைய பகுதிகள் 1979 இலிருந்து 1990 வரையிலான காலப்பகுதிக்குள் ஒரு துளையாக உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இந்த துளையின் பரப்பு 20.7 மில்லியன் சதுரமைல்களாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியின் வடதுருவம் மற்றும் தென்துருவம் என்பனவற்றில் உருவாகியுள்ளமையினால் துருவ நாடுகள் அச்சத்தில் உள்ளன.
ஓசோன் படலத்தை பாதிக்கும் காரணிகள்
ஓசோன் படையை சிதைக்கும் காரணிகளாக பூமியில் மனிதர்களால் வெளியிடப்படும் சில பாதகமான வாயுக்களே உள்ளன.
“புளோரின்” எனப்படும் வாயு ஓசோன் மூலக்கூறுகளை ஒட்சின் மூலக்கூறுகளாக பிரிப்பதனால் ஓசோன்படை தேய்வடைகிறது.
“குளோரோபுளோரோ காபன், காபன்மொனொக்ஸைட், கந்தகவீரொட்சைட், நைத்ரிக் ஓக்சைட்” போன்ற பாதகமான பச்சைவீட்டு வாயுக்கள் ஓசோன்படையினை பாதிக்கும் காரணிகளாக உள்ளன.
குளிர்சாதன பெட்டிகள், கைத்தொழிற்சாலைகளில் இருந்து இந்த பாதகமான வாயுக்கள் அதிகம் வெளிவிடப்படுகின்றன.
ஓசோன் தேய்வால் உண்டாகும் விளைவுகள்
ஓசோன் தேய்வால் ஆபத்தான கதிர்வீச்சுக்கள் பூமியினுள் வருகின்றன. இதனால் மனிதர்களுக்கு கண்பார்வை குறைபாடு, தோல் புற்றுநோய்கள் போன்ற பல நோய்கள் உருவாகின்றன. ஓசோன் தேய்வால் சூழலின் வெப்பம் உயர்வதனால் பயிர்ச்செய்கை நடவடிக்கைள் பாதிக்கப்படுகின்றன.
மற்றும் பூகோள வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் விளைவுகளால் தான் பனிபாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயருதல் போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன.
முடிவுரை
இந்த பூமி இயற்கையினுடைய அற்புதமான படைப்பாகும். அதன் ஒவ்வொரு கட்டமைப்புக்களும் இங்குள் மனிதர்களையும் விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் தொழிற்படுகின்றது. இந்த தொழிற்பாடுகளை தடுக்கும் வகையில் மனிதனுடைய செயற்பாடுகள் மாறி வருவது பாரிய அனர்த்தங்களை உருவாக்கி விடும்.
ஆதலால் தான் இன்று ஓசோன் படையை பாதுகாக்க உலக நாடுகள் அதிக கவனம் செலுத்துகின்றன. இதனால் தான் பல ஓசோன் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.
அத்துடன் வருடம் தோறும் செப்டம்பர்-16 உலக ஓசோன் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுவது உலக மக்களுக்கு ஓசோனின் அவசியத்தை புலனாக்குவதோடு அதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் புலப்படுத்துகின்றது.
You May Also Like :