உளவியல் என்றால் என்ன

ulaviyal enral enna

அறிமுகம்

உளவியல் அல்லது மனோதத்துவம் சமூக அறிவியற் துறைகளுள் ஒன்றாகும். பிரெஞ்சு உளவியல் ஞானி பைர்ரி கேபானிஸ் அவர்கள் 1802 ஆம் ஆண்டில் உயிரியல் உளவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதி முன்னோடியாகத் திகழ்ந்தார்: Rapports du physique et du moral de l’homme என்பதே அக்கட்டுரை ஆகும்.

விலங்கினங்கள் அனைத்தும் அறிவினை அடிப்படையாகக் கொண்டுதான் செயற்படுகின்றது. செயற்பாடுகளை உளவியல் நடத்தைகள் அல்லது நடவடிக்கைகள் என்பர்.

அறிவுக்கு அடிப்படை கற்பனை, நினைவாற்றல் திறன், உணர்ச்சிகள், உறவுகள், ஆளுமை போன்ற அனைத்தையும் ஆராயக் கூடியது உளவியலாகும்.

உளவியலானது கல்வி, மருத்துவம், வியாபாரம் என அனைத்து இடங்களிலும் விரிவடைந்து செல்கின்றது. உளவியல் பல நூற்றாண்டுகளாக தத்துவவியலின் ஒரு பிரிவாகவே இருந்து வளர்ந்து வந்தது.

அரிஸ்ரோட்டில் என்னும் கிரேக்கத் தத்துவ பேரறிஞர் எழுதிய “ஆன்மாவின் இயல்புகள்” என்னும் நூலே உளவியலின் முதல் நூலாகக் கருதப்படுகின்றது.

உளவியல் என்றால் என்ன

உளவியல் என்றால் என்ன

உளவியல் என்பது இதுதான் என ஒரு சில வார்த்தைகளில் வரையறை செய்து கொள்ள முடியாத ஒன்றாகும். ஏனெனில் இது இடத்திற்குத் தகுந்தாற் போலும் நபருக்குத் தகுந்தாற் போலும் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போலும் நேரத்திற்குத் தகுந்தாற் போலும் மாறிக்கொண்டிருக்கும்.

நம் சிந்தனையுடன் தொடர்புடையது உளவியல், சுருங்கச் சொன்னால் நாம் சிந்திப்பது உள்ளத்தால், எனவே உள்ளம்+இயல் என்பதே உளவியல்.

மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் பயன்பாட்டு ஒழுங்கு முறை உளவியல் ஆகும்.

அதாவது, உளவியல் அல்லது மனோதத்துவம் (Psychology) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும்.

உளவியலின் நன்மைகள்

உளவியலைத் தெரிந்து கொள்வதால் அறிவை மேம்படுத்திக் கொள்ள முடியும். அறிவை மேம்படுத்திக் கொண்டாலே வாழ்வு மேம்படும். எம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள மட்டுமன்றி சுற்றியிருப்பவர்களையும் மேம்படுத்துவதற்கு உளவியல் பயன்படும்.

மேலும் உளவியலினைத் தெரிந்து கொள்வதனால் மற்றவர்களை ஆளுமை செய்வதற்கும், பிறரது செயற்பாடுகள் எவ்வாறிருக்கும் என்பதனைத் தெரிந்து கொண்டு அவர்களை மேலாண்மை செய்வதற்கும் உவியாக இருக்கும்.

வாழ்வில் தெரிந்துகொள்ள வேண்டிய சில உளவியல் ரகசியங்கள்

ஒருவர் அதிகமாக எதிர்மறை சிந்தனை உள்ளவர்களாக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுபட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்திருப்பாராம்.

7 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

குழுவாக அமர்ந்து இருக்கையில் யாராவது நகைச்சுவை கூறினால் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே யாரைப் பார்க்கின்றார்களோ அவர்கள் தான் மனதுக்கு மிகவும் பிடித்தமானவர்களாக இருப்பர்.

நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 பாடல்களைக் கேட்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாகும், நோய் எதிர்ப்பு சக்தி வளரும் மற்றும் மன அழுத்தத்திற்கான வாய்ப்பு 80% குறையும்.

உங்கள் மனதை யாராவது காயப்படுத்தியிருந்தால் அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுக்கும்.

ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் அதிக பதற்ற நிலையில் உள்ளவராவர்.

You May Also Like :
மன அழுத்தம் என்றால் என்ன
சமூகம் என்றால் என்ன