உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை

Ulaga Sutru Sulal Naal Katturai

இந்த பதிவில் “உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை” பதிவை காணலாம்.

உலமெங்கும் இன்று சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. இது ஆரோக்கியமற்ற போக்காகும்.

உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நாம் வாழும் சூழல்
  3. சூழலின் அவசியம்
  4. சூழல் மாசடைவு
  5. முடிவுரை

முன்னுரை

இந்த பூமி நாம் முன்னோர்களிடம் இருந்து பெற்ற சொத்து அல்ல நம் குழந்தைகளிடம் இருந்து பெற்ற கடன்” எனும் காஸ்மீரிய பழமொழி எமக்கு இந்த இயற்கையின் வளங்களின் பெருமையையும் அருமையையும் உணரத்துகின்றது.

மனிதனுடைய வல்லாதிக்க போக்கினால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியின் விலை மதிக்க முடியாத சொத்துக்களான இயற்கை வளங்களை அழித்து கொண்டிருக்கின்றோம்.

இது எமது வருங்கால சந்ததியினரை வெகுவாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை இவற்றை தடுத்து வழிப்புணர்வூட்டும் வகையில் தான் உலக சுற்று சூழல் தினமானது கொண்டாடப்படுகிறது. இது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாம் வாழும் சூழல்

நாம் வாழ்கின்ற சுற்று சூழல் எத்தனை அபூர்வங்கள் நிறைந்தது. அழகிய நதிகள், பச்சைபசேல் என்ற காடுகள், நீண்டு விரிந்த சமுத்திரங்கள், நீலவண்ண ஆகாயம் என அழகும் ஆச்சரியங்களும் நிறைந்தது.

இந்த சூழலில் மனிதர்களை போலவே பிற விலங்குகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள் என பல்லாயிர கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

அவை ஒவ்வொன்றும் இந்த சுற்று சூழலின் நிலைத்திருப்பை உறுதிப்படுத்துகின்றன. இந்த சூழல் தான் எமது வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் எமக்கு வழங்கி பாதுகாக்கின்றது.

சூழலின் அவசியம்

இந்த சுற்று சூழல் எமக்கு எத்தனை நன்மைகளை கொடுத்திருக்கின்றது. உண்ண உணவுகள் மண்னில் விளைகின்றன, குடிக்க தண்ணீர் மழையாக கிடைக்கிறது, சுவாசிக்க ஒட்சிசன் வளிமண்டலத்தில் இருந்து கிடைக்கின்றது, தங்குமிடங்களை அமைக்க காடுகள் வளம் தருகின்றன.

இவ்வாறு இயற்கை சூழலின் துணையின்றி மனிதனால் இங்கு வாழவே முடியாத நிலையானது காணப்படுகின்றது.

இயற்கை தன்னை தகவமைத்து கொள்வதனால் தான் காலநிலைகள் சரியாக மாறி கொண்டிருக்கின்றன. பூமியின் அற்புத சமநிலை தொடர்ந்து பேணப்பட்டு வருவதனால் தான் இங்கே எம்மால் வாழ முடிகிறது.

சூழல் மாசடைவு

உலமெங்கும் இன்று சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.

சனத்தொகை அதிகரிப்பு மற்றும் உலகநாடுகளின் அவிருத்தி கொள்கைகள் இயற்கை வளங்களை வெகுவாக சுரண்டிவருகின்றது. காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு விட்டன.

இதன் விளைவால் காலநிலை மாற்றம் பாரிய பிரச்சனையாக உருவாகியுள்ளது இதனால் பூகோள வெப்பநிலையும் உயர்வடைந்து விட்டது. இவை அனைத்தும் சுற்றுசூழல் மாசடைவின் விளைவாகவே காணப்படுகின்றது.

முடிவுரை

இந்த அசாதரண நிலை தொடர்பாக உலக நாடுகள் அண்மை காலமாக சற்று விழிப்படைய துவங்கியுள்ளன. சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளன.

இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை சுற்றுசூழல் தினத்தை ஜீன் 5ம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடி வருவதுடன் உலக மக்களுக்கு சுற்று சூழல் பாதுகாக்க பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து சூழலை பாதுகாக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

You May Also Like :
மரம் இயற்கையின் வரம் கட்டுரை
காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை