உள்நாட்டில் உற்பத்தியின் அடிப்படையாக கொண்டு அறவிடும் ஓர் முறையாக ஆயத்தீர்வை காணப்படுகின்றது.
Table of Contents
ஆயத்தீர்வை என்றால் என்ன
ஆயத்தீர்வை என்பது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உள் நாட்டில் விதிக்கப்படும் ஓர் தீர்வையே ஆயத்தீர்வை எனப்படும். அதாவது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு விதிக்கப்படும் ஒரு வரியாக ஆயத்தீர்வை காணப்படுகின்றது.
மதுபானம் மீதான ஆயத்தீர்வை
மதுபான உற்பத்தியின் போது உற்பத்தியாளர்கள் ஆயத்தீர்வை வரியினை செலுத்துகின்றனர். அதாவது மதுபானத்தின் ஓர் அலகுக்கு இவ்வளவு என்று விதிக்கப்படுகின்றது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது வரி விடயங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும்.
மதுபான தயாரிப்புக்கு எவ்வளவு செலவு ஏற்படும் என்பது தொடர்பான தகவல் கிடைக்காதவரை ஆயத்தீர்வை, விற்பனை வரி பற்றி கணக்கிடுவதானது கடினமாகவே காணப்படும்.
விற்பனை வரியானது மதுபானத்தின் ரூபாய் அடிப்படையில் விதிக்கப்படுவதாகும். ஆயத்தீர்வை என்பது அளவின் அடிப்படையில் விதிக்கப்படுவதாகும்.
வெவ்வேறு விகிதங்களில் ஆயத்தீர்வை வரி அறவிடப்படுகின்றது. மதுபானத்தினூடாக ஆயத்தீர்வை வரியானது அரசுக்கு அதிகமான வருவாயினை ஏற்படுத்தி தருகின்றது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் முக்கியே பணியே 1937 இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தை அமுல்படுத்துவதாகும்.
மேலும் கரும்புப் பாகுக்கழிவு, எரிசாராயம், மதுபானம் ஆகியவற்றை தயாரிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் உரிமங்கள் வழங்குதல் ஆகும். இதனூடாக ஆயத்தீர்வையினை வசூலிப்பதே நோக்கமாகும்.
மதுவிலக்கு, ஆயத்துறை ஆணையாளரானவர் மது விற்பனையை கட்டுப்படுத்தும் வேலையினையும் மது வருவாயினை பெருக்கும் வேலையினையும் ஒரே நேரத்தில் செய்கிறார். எனவே மது விற்பனையை கட்டுப்படுத்தும் பொறுப்பை சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பிடம் வழங்க வேண்டும். இதனூடாக மது பாவனையை குறைக்க முடியும்.
ஆயத்தீர்வை துறையின் நோக்கங்கள்
1937 ஆம் ஆண்டில் தமிழ் நாடு மதுவிலக்குச் சட்டம் மற்றும் இந்த சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள பல்வேறு விதிகளை நடைமுறைப்படுத்தல். சிறந்த ஆயத்தீர்வை நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு அதிகபட்ச வருவாய் கிடைப்பதை உறுதி செய்தல்.
பொதுமக்களிடையே மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மதுவிலக்கு மேலாக்க பிரிவின் துணை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்வதை தடுத்தல் மற்றும் மாநில எல்லை வழியாக போலி மதுபானம் வருவதை தடுக்க சோதனைகளை நடாத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
ஆயத்தீர்வை துறையும் மதுபானம் பற்றிய விழிப்புணர்வூட்டலும்
ஆயத்தீர்வை துறையானது மதுபானத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் சொற்பொழிவுகளை முன்வைக்கின்றன. மேலும் ஆயத்தீர்வை வரியினை வசூலிப்பதன் நோக்கம் மதுபாவனை உற்பத்தியை எவ்வாறாயினும் குறைப்பதற்காகவே ஆகும். ஆனால் இன்று மதுபான உற்பத்தியானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இன்று பலர் மதுபானம் மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகி தனது வாழ்க்கைக்கே கேடு விளைவித்தக் கொள்கின்றனர். மேலும் மதுபான பயன்பாட்டின் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு மரணமும் சம்பவிக்கின்றது. இதன் காரணமாக ஆயத்தீர்வை துறையானது பல்வேறு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கின்றது.
மேலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை போன்ற இரு துறைகளும் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதலினால் ஏற்படும் தீமைகளை குறிப்பிட்டு அவற்றிலிருந்து எவ்வாறு மீளுவது தொடர்பாக இந்த துறையானது கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கின்றது. ஆயத்தீர்வை துறையானது இந்தியாவின் தமிழ்நாட்டில் மிக பிரதான துறையாக காணப்படுகின்றது.
Read More: மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள்