இந்த பதிவில் “அணங்கு என்றால் என்ன” என்பதை பற்றி விரிவாக காணலாம்.
Table of Contents
அணங்கு என்றால் என்ன
இது இலக்கியங்களிலே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கவிதையில் எப்பொருளில் இச்சொல் பயன்படுகிறது என்பதை கவிதையின் கருத்தை அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
அணங்கு என்பது பெயர்ச்சொல்லாக வரும் பொழுது பின்வரும் பொருளை தருகிறது.
- அழகு,வடிவு
- தெய்வம், தெய்வமகள், தெய்வத்திற்கு ஒப்பான மாதர்
- வருத்திக் கொல்லும் தெய்வமகள், தீண்டி வருத்தும் தெய்வம் பெண்
- வருத்தம், நோய், மையல் நோய்
- அச்சம்
- வெறியாட்டு
- பத்ரகாளி
- தேவர்க்காடும் கூத்து
- விருப்பம்
- மயக்க நோய்
- கொலை
- கொல்லிப்பாவை
- பெண்
- தேவதை
- ஆத்திரேலிய பழங்குடியினரின் சில குழுக்கள் தம்மை “அரங்கு” என அழைப்பர். இதன் பொருள் “மனிதர்”, “மனித உடல்”.
அணங்கு என்பது வினைச்சொல்லாக வரும் பொழுது பின்வரும் பொருளை தருகிறது.
- ஒலித்தல்
- விரும்புதல்
- அண்டுதல்
- அஞ்சுதல்
- வருத்தல்
- வருந்துதல்
- நோயுறுதல்.
இலக்கியங்களில் அணங்கு
பொதுவாக இலக்கியங்களில் “அணங்கு” என்ற சொல் வருத்தும் தெய்வத் தன்மை கொண்ட பெண் என்ற வகையில் பயன்படுத்தி கொள்ளப்படுவதை காண முடிகிறது .உதாரணமாக அணங்கு என்ற சொல்லினை திருக்குறளின் மூன்று இடங்களில் காணலாம்.
ஆயும் அறிவியல் அல்லார்க்கு அனங்கென்ப
மாய மகளிர் முயக்கு. (குறள் 918)
பொருள் : வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.
அணங்குகொல் ஆல்மயில் கொல்லோ கனங்குமழை
மாதர் கொல் பாலும் என் நெஞ்சு. (குறள் 1081)
பொருள் : தெய்வப் பெண்ணோ! மயிலோ கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ! என்நெஞ்சம் மயங்குகின்றதே.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் நாக்குக்கு
தானைக்கொண்டன்ன துடைத்து. (குறள் 1082)
பொருள் : நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருந்தும் அணங்கு, ஒரு சேவையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
மேற்கூறிய குறள்களிலே அணங்கு என்பது வருந்தும் தெய்வத்தை குறித்து நிற்பதை காணலாம்.
அடுத்து சிலப்பதிகாரத்தில் “அணங்கு” என்ற சொல்லானது பதின்மூன்று இடங்களில் காட்டப்பட்டுள்ளது. அவற்றுள் இரு பாடல்களை நோக்குவோமாயின்,
…………….. வாயிலோயே
இணையரிச் சிலம்பொன் வேந்திய கையாள்
கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று
அறிவிட்பாயே அறிவிப்பாயே. (26-29)
பொருள் : வாயிற் காப்பாய், இரண்டு சிலம்பினுள் ஒன்றினைக் கையில் ஏந்தியவாறு தன் கணவனை இழந்தாள் ஒருத்தி வாயிலில் நிற்கின்றாள் என அறிவிப்பாயே, அறிவிப்பாயே
கண்ணகி யென்பதன் பெயரெனப்
பெண்ணணங்கே கள்வனைக் கோறல்
தடுக்கோலன்று வெள்வேற
கொற்றங் தான் என் ஒள்ளிழை. (63-65)
பொருள் : “அணங்கு” போலும் பெண்ணே, கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மை அல்ல, அதுவே அரச நீதி என்று அரசன் கண்ணகியிடம் கூறுகிறான்.
மேற்காணும் சிலப்பதிகாரத்தின் இரு பாடல்களிலும் “அணங்கு” என்பது வருந்தும் தெய்வம் என்றப் பொருளையே தருகிறது.
You May Also Like: |
---|
சமத்துவம் என்றால் என்ன |
மனம் என்றால் என்ன |