இந்த பதிவில் “வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை” பதிவை காணலாம்.
எமது முன்னோர்கள் இந்திய மக்களின் ஒற்றுமையினால் தான் சுதந்திரத்தை வென்றெடுத்தார்கள்.
Table of Contents
வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வேற்றுமை கூறுகள்
- இன வேறுபாடுகள்
- மொழி வேறுபாடுகள்
- சமய வேறுபாடுகள்
- தேசத்தால் இந்தியர்கள்
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவில் பல்வேறு வகையான மக்கள் வாழ்கின்றனர் அவர்கள் மொழி, சமயம், கலாச்சாரம், இனம் என வேறுபட்டவர்களாக காணப்படுகின்றனர். இருந்தாலும் இந்த மக்கள் இந்தியா என்ற தேசத்தில் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
இந்தியர்கள் என்ற ஒரு உணர்வு இவர்கள் அனைவரையும் ஒன்றிணைகின்றது எனலாம். இந்தியர்களுடைய பழக்கவழக்கங்கள் பண்பாடு இவை அனைத்தும் சிறந்தவையாக மதிக்கப்படுகின்றன.
ஆன்மீகத்தை அதிகம் மதிக்கும் மக்கள் கூட்டமாக இந்தியர்கள் பார்க்கப்படுகின்றனர். இக்கட்டுரையில் அவர்களது வேற்றுமைகளில் அவர்களது ஒற்றுமை பற்றி காண்போம்.
வேற்றுமை கூறுகள்
உலகில் இந்தியா ஏழாவது மிகப்பெரிய பரந்து விரிந்த பழமையான நாடாகும். இந்த நாடு 29 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டு திகழ்கிறது. இன்று இந்தியாவின் சனத்தொகை 1.38 பில்லியனாக காணப்படுகிறது.
வேறுபட்ட காலநிலை கூறுகள், வெவ்வேறான புவியியல் அம்சங்கள், வேறுபட்ட மொழிகளை பேசும் மக்கள், வெவ்வேறுபட்ட கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள், வேறுபட்ட வள வாய்ப்புகள் உடைய மாநிலங்கள் காணப்படுகின்றன.
அதனை போலவே பல்வேறான மதப்பிரிவுகளை பின்பற்றும் மனிதர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர. இவ்வாறு பல வேற்றுமைக் கூறுகள் இந்தியாவில் காணப்படுகின்றன.
இன வேறுபாடுகள்
இந்தியாவில் கி.மு 5 ம் நூற்றாண்டிலேயே இந்தியா பல இனங்களையும் அதிக மக்கள் தொகையையும் பெற்றிருந்தது என்று வரலாற்றின் தந்தை “கெரடோரஸ்” தெரிவிக்கின்றார்.
இங்கு காஷ்மீர், பஞ்சாப், இராஜபுதனம் ஆகிய பகுதிகளில் இந்தோ- ஆரிய இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
தமிழகம், ஆந்திரம், மைய மாநிலங்கள், சோட்டா நாக்பூர் பகுதிகளில் திராவிட இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
அசாம், நேபாள எல்லை பகுதிகளில் மங்கோலிய இனத்தவர்களும் ஜக்கிய மாநிலங்கள் பீகார் பகுதிகளில் வாழும் ஆரிய திராவிட இன மக்களும் வங்காளம் ஒடிசா பகுதியில் வாழும் மங்கோல் திராவிட இனம் மராட்டிய பகுதியில் வாழும் துருக்கிய இனம் என்று பலவகையான இன மக்கள் இந்தியாவிற்குள் வாழ்கின்றனர்.
மொழி வேறுபாடுகள்
இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. 780 மொழிகள் பேசப்படுகின்றதாக சொல்லப்படுகிறது. 22 மொழிகள் மாத்திரமே அதிகாரபூர்வ மொழிகளாக இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
சமய வேறுபாடுகள்
இந்தியா அதிகம் மத நம்பிக்கை நிறைந்த நாடாக காணப்படுகின்றது. இந்து மதம், பௌத்த மதம் என்பன இங்கு தான் தோன்றின. இங்கு 80 சதவீதமானவர்கள் இந்து சமயத்தை பின்பற்றுகின்றனர் இந்து மதத்தின் அதிகளவான சாயலை இந்தியா முழுவதும் காணமுடியும்.
அதற்கு அடுத்த படியாக இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம், பௌத்த மதம், சமண மதம் எனப்படுகின்ற மதங்கள் காணப்படுகின்றன.
இந்து மதம் சார்ந்த புனித தலங்கள் அதிகமாக இந்தியாவில் காணப்படுகின்றன. இருப்பினும் ஏனைய மத மக்களும் இங்க ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
தேசத்தால் இந்தியர்கள்
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடாத்திய காலத்தில் இந்திய நாட்டை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரித்தாழும் கொள்கையை பின்பற்றியே இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
முன்னோர்கள் இந்தியர்கள் என்ற ரீதியில் மதம், மொழி, இனம் தான்டி ஒன்றுபட்டு போராடியதனால் தான் சுதந்திரம் என்ற பெருங்கனவை அடைந்து கொள்ள முடிந்தது.
இந்தியாவின் சுதந்திர தினம் இந்திய மக்களை வேற்றுமைகள் இன்றி மேலும் மேலும் ஒற்றுமை உடையவர்களாக மாற்றி கொண்டிருக்கின்றது. மிக சிறந்த தேச பக்தி இந்தியர்களிடம் உள்ளது.
முடிவுரை
எமது முன்னோர்கள் இந்திய மக்களின் ஒற்றுமையினால் தான் இந்த சுதந்திரத்தை வென்றெடுத்தார்கள். இதனால் தான் இந்தியா உலக அரங்கில் பலமான ஜனநாயக நாடாக இன்று விளங்குகிறது.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற வாசகத்தினை போல இந்தியர்களாகிய நாம் எம்மை பல சந்தர்ப்பவாதிகளும் அரசியல் இலாபம் தேடுபவர்களும் பிரித்து வைக்க முயன்றாலும் மக்களாகிய நாம் ஒன்றுபட்டு வளமான இந்தியாவை உருவாக்குவோம்.
You May Also Like :