இந்த பதிவில் புல் இனத்தை சார்ந்த “வெட்டி வேர் பயன்கள்” பற்றி காணலாம்.
வெட்டி வேர் புல் இனத்தைச் சேர்ந்தது ஆகும். இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் வளரக் கூடியது. இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரக் கூடியது.
வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என அழைக்கப்படுகிறது.
இதன் வேர் கருப்பு நிறமாகவும் மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு.
வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.
வெட்டி வேர் பயன்கள்
1.உடல் சூட்டை தணிக்கும். வெட்டி வேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடல் உஷ்ணம் தணியும். மேலும் உடல் சூட்டால் ஏற்படும் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றைக் குணப்படுத்தக் கூடியது. இதற்கு வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சேர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி அருந்தினால் தீர்வு கிடைக்கும்.
2. உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக் கூடியது.
3. தீக்காயங்களை குணப்படுத்தும். அனைத்துத் தீக்காயங்களுயுக்கும் இதனைப் பூசி வந்தால் விரைவில் குணம் அடையலாம்.
4. நீரை சுத்திகரிக்க பயன்படுகின்றது. தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும்.
5. முகப் பருக்களைப் போக்க நல்ல மருந்தாக இருக்கிறது. வெட்டிவேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களையும் குணப்படுத்துகிறது.
6. பாக்டீரியாக்களால் ஏற்படும் சரும தொந்தரவுகளை போக்கி, சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். இதனால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
7. காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.
8. சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.
9. உடலில் ஏற்படும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்க உதவுகின்றது. வெட்டிவேரில் இருக்கும் சிக்காட்ரிஷன்ட் என்னும் ஏஜென்ட் உடலில் வடுக்கள் மறைவதை துரிதப்படுத்துகிறது.
10. உடலுக்கு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
11. மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது.
12. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பயன் அளிக்கின்றது.
13. வெயில் காலங்களில் உடம்பில் ஏற்படும் வியர்வை, துர்நாற்றத்தை நீக்க உதவுகின்றது. இதற்கு வெட்டி வேரினை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, அந்த விழுதினை சுடு தண்ணீரில் கலந்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
14. காய்ச்சலின் பின்பு உடலில் ஏற்படும் வலி மற்றும், சோர்வு போன்றவற்றிற்கு நல்ல நிவாரணமாகச் செயல்படும். வெட்டி வேரை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் உடல் சோர்வும், உடல் வலியும் நீங்கும்.
15. ஜீரண சக்தியும் அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணும் குணமடையச் செய்யும்.
16. கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளைக் குணமாகும். தேங்காய் எண்ணெயுடன் வெட்டிவேரை சேர்த்து நன்றாக காய்ச்சி அந்த எண்ணையை இரண்டு நாட்கள் கழித்து நம் காலில் எங்கு வலி உள்ளதோ அந்த இடங்களில் தடவி வரலாம்.
17. வெட்டி வேர் மண் அரிப்பைத் தடுக்கும்.
18. மாடுகளுக்கு இதன் புல் தீணியாகின்றது.
You May Also Like: |
---|
கண்டங்கத்திரி பயன்கள் |
கொய்யா இலையின் பயன்கள் |