வரலாற்றை கற்பதன் பயன்கள் கட்டுரை

வரலாறு கற்பதன் பயன் கட்டுரை

இந்த பதிவில் “வரலாற்றை கற்பதன் பயன்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

சரியான வரலாற்றை அறிந்து கொண்டு அதனை எதிர்கால சந்ததியினருக்கு கடத்துவது சிறந்த சமூதாயத்தை கட்டியெழுப்ப உதவும்.

வரலாற்றை கற்பதன் பயன்கள் கட்டுரை

வரலாற்றை கற்பதன் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வரலாறு அறிமுகம்
  • வரலாற்றை கற்பதன் பயன்கள்
  • வரலாற்றைக் கற்பித்தல்
  • வரலாற்று சமூக கலாசார பன்முகத்தன்மை
  • முடிவுரை

முன்னுரை

அதிவேகமாக நகரும் இந்த உலகத்தில் பழமையை யாரும் நினைவில் வைத்திருப்பதோ கண்டு கொள்வதோ இல்லை. மக்கள் பழையனவற்றை விடுத்து புதுமைகளை நோக்கி முன்னேறுவதையே பெரும்பாலும் விரும்புகின்றனர்.

இந்த மனித இனத்திற்கென்று வளர்ச்சிப் படிமுறைகளும் நாகரீக வளர்ச்சி முறைகளும் காணப்படுகின்றன. அவற்றை அறிந்து கொள்வது மனிதர்களை இன்னமும் சிறப்பாக செயற்பட உதவும்.

வரலாறு அறிமுகம்

கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில் “வரலாறு என்பது மறக்க முடியாத கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு” என்று குறிப்பிடுகின்றார். மனிதன் கடந்துவந்த பாதையின் விபரிப்பே வரலாறு.

ஆதிகால மனிதர்கள் எவ்வாறு தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர், அவர்களின் சமூகத் தொடர்புகள், கலாசரா சமய பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் தொழில்முறைமைகள், கல்வி மற்றும் கலைகள், வியாபாரமுறைகள் போன்றன காலகாலமாக எவ்வாறெல்லாம் வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை எட்டியுள்ளன என்பதைப் பற்றிய கற்கையே வரலாறு ஆகும்.

கட்டடம் ஒன்று உறுதியாகக் கட்டியெழுப்பப்படுவதற்கு அதன் அத்திவாரம் எந்தளவு ஸ்திரமாக அமைய வேண்டுமோ அதேபோன்று வரலாற்றை கட்டியெழுப்புவதற்கு அதன் மூலாதாரங்கள் நம்பகத்தன்மையானவையாகக் காணப்பட வேண்டும். அதனடிப்படையிலே வரலாறு எழுதப்படும்.

வரலாற்றை கற்பதன் பயன்கள்

வரலாற்றைக் கற்பதனால் பல்வேறு பயன்கள் கிடைக்கப்படுகின்றன. எமது முன்னோர்கள் வாழ்ந்த தடயத்தை எமக்கு கூறுவது வரலாறு ஆகும்.

கடந்தகாலம் பற்றிய பூரணமான அறிவைக் கொண்டிருப்பது நிகழ்காலத்தில் நடைபெறும் செயற்பாடுகளை ஒப்பிட்டு சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவும்.

ஏற்கனவே இடம்பெற்றுள்ள பிழைகள் மீண்டும் ஏற்படாமல் காக்க வரலாறு உதவுகின்றது.

தத்தமது கலாசார பிண்ணிகளை அறிந்து கொள்வதோடு பிற கலரசார சமூகவியல்களையும் அறிந்து கொண்டு ஏனையவர்களோடு இணைந்து வாழ வரலாற்றை கற்பது அவசியம்.

அனைவரும் வரலாற்றை தெரிந்து கொள்வதால் அவை எதிர்கால சந்ததிக்கும் கடத்தப்படுகின்றது.

வரலாற்றை கற்பித்தல்

பள்ளிகளில் சிறுவயதிலிருந்தே வரலாறு ஒரு பாடமாக கற்பிக்கப்படுகின்றது. நம்மை சுற்றி நான்கு திசைகளிலும் முன்னோர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

அவை அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளன. அவற்றை சிறுவர்களிற்கு காண்பிப்பதனால் சிறுவயதிலே அவர்கள் தத்தமது வரலாற்று பிண்ணனியின் மீது ஆர்வம் கொண்டவர்களாக வளர்கின்றனர்.

பல்கலைகழகங்களில் வரலாற்றுடன் தொடர்புடைய பல கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தொல்லியல் அகழாய்வு கற்கைகள், பழங்கால இலக்கிய மீளாய்வு, பழங்கால கட்டக்கலையின் சிறப்பங்களை ஆய்வுக்குட்படுத்தல் போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய கற்கைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

வரலாற்று சமூககலாசார பன்முகத்தன்மை

இந்தியா சமூக கலாசார பன்முகத்தன்மையைக் கொண்ட ஒரு நாடு ஆகும். ஒவ்வொரு இனங்களிற்கும் தனித்தனியான வரலாற்று பிண்ணனிகள் காணப்படுகின்றன.

அவற்றை அடிப்படையாகக் கொண்ட கலாசாரங்களை பின்பற்றும் மக்கள், ஏனையோரினது நம்பிக்கைகளை மதிப்பதற்கு வரலாறு கற்றுத் தருகின்றது.

இந்தியாவில் காணப்படும் அனைத்து மதங்களினதும் வரலாற்றை கற்பிப்பது மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவுகின்றது.

முடிவுரை

ஒவ்வொரு மனிதனும் அவனது வரலாற்றை திரிபு இன்றி அறிந்து கொள்வது அவனது உரிமையாகும். வரலாறு பிழையாகக் கற்பிக்கப்படும் போது அது மக்களிடையே விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும்.

சரியான வரலாற்றை அறிந்து கொண்டு அதனை எதிர்கால சந்ததியினருக்கு கடத்துவது சிறந்த சமூதாயத்தை கட்டியெழுப்ப உதவும்.

You May Also Like :
வரலாற்றை கற்பதன் பயன்கள்
கற்றது கையளவு கல்லாதது உலகளவு