ராசி கட்டத்தில் 4 வது ராசியாக இடம்பெற்றிருப்பது

ராசிக் கட்டம் என்பது ஏற்கனவே விண்வெளியில் வகுக்கப்பட்ட இடங்கள் மற்றும் எம்மை சுற்றியுள்ள 360 டிகிரி 12 கட்டங்களாக முப்பது முப்பது கோணங்களாக பிரிக்கப்பட்டு ராசிக் கட்டங்கள் பனிரெண்டாக வகுக்கப்பட்டு காணப்படுவதே ராசிக் கட்டமாகும். அந்த வகையில் 12 கட்டங்களாக ராசி இடம் பெறுகின்றது.

ராசிக் கட்டத்தின் முக்கியத்துவம்

ராசிக் கட்டமானது 12 கட்டங்களாக காணப்படுகின்றது. இவ்வாறு ராசிக் கட்டம் பார்த்தலானது ஒருவருடைய வாழ்க்கையில் நடப்பது, நடந்து கொண்டிருப்பது மற்றும் முக்காலத்தையும் பற்றி சொல்லக் கூடியதாகும்.

ஒருவருடைய ராசியானது அவர் செய்த பாவம் மற்றும் புண்ணியத்தின் அடிப்படையில் அமைந்து காணப்படும்.

12 ராசி கட்டங்கள்

கட்டம் 1

ராசிக் கட்டத்தில் 1வது கட்டமானது ஒருவருடைய ஆளுமை, திறன், மரியாதை சார்ந்தவற்றை சுட்டுவதாக காணப்படும். அதாவது ஒருவரின் ராசிக் கட்டத்தில் ல என்று போடப்பட்டிருக்கும் லக்ன கட்டமே முதல் வீடு எனப்படும். இந்த முதலாவது ராசி கட்டமானது ஒருவருடைய குணாதிசயம் பற்றி தெளிவாக குறிப்பிடக் கூடியதாகும்.

கட்டம் 2

இரண்டாவது ராசிக் கட்டமானது குடும்பம், தளம் போன்றவற்றை பற்றி குறிப்பிடப்படுகின்றது. இக்கட்டத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் அதன் பலன்கள் அமோகமாக காணப்படும். தீய கிரகங்களாக இருந்தால் அதன் பலன் அது போலவே காணப்படும்.

கட்டம் 3

மூன்றாம் ராசிக் கட்டமானது அங்கு அமர்ந்திருப்பவரின் கிரகத்தினுடைய ஆற்றல் எப்படிப்பட்டதோ அப்படியே அவர்கள் காணப்படுவர். இவரது ராசியும் வீரமிக்கதாக காணப்படும். மேலும் சனி இருந்தால் சோம்பேறியாகவே காணப்படுவர்.

கட்டம் 4

நான்காம் கட்டமானது தாயாரை குறிக்க கூடியதாகும். அதாவது வாகனம், சொத்துக்கள், வீடு போன்றவற்றை குறிக்கும். கடக ராசியாக காணப்படுவதோடு நல்ல பலன் கிடைத்து சொத்து சுகத்தோடு வாழ்வார்கள்.

கட்டம் 5

ஐந்தாம் கட்டமானது புத்திர ஸ்தானத்தினை உடையதாகும். இது போன ஜென்மத்தின் பாவ புண்ணியங்களை குறிக்கும். இங்கு எந்த கிரகமாக இருந்தாலும் அதன் தசாபுத்திக்கேற்ப அந்த கால கட்டத்தில் தோஷங்கள் ஏற்படும்.

கட்டம் 6

ஆறாம் கட்டமானது கடன், கவலைகள், தொழில், எதிரிகள் போன்றவற்றை குறிக்கும். சரியான கிரகங்கள் இல்லாவிட்டால் உடல் நலனில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் தசாபுத்திக்கேற்ப இந்த கால கட்டத்தில் சில மாறுதல்களும் ஏற்படும்.

கட்டம் 7

ஏழாம் ராசிக் கட்டமானது வியாபாரம், மரணம், திருமணம் போன்றனவற்றை குறிப்பதாகும். திருமணத்தில் தடை ஏற்படுவதோடு வியாபாரத்தில் வளர்ச்சி இருக்காது.

கட்டம் 8

எட்டாவது ராசிக் கட்டமானது அவமானம், கண்டம் போன்றவற்றை குறிக்கும். எட்டில் இருக்கும் ராசியாதிபதி லக்னத்திலிருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்தே பலன்களும் அமையும்.

கட்டம் 9

ஒன்பதாம் ராசிக் கட்டமானது தந்தையை குறிக்கின்றது. இதன் காரணமாக தந்தையுடன் பிரச்சினைகள் ஏற்படலாம்.

கட்டம் 10

பத்தாவது ராசிக் கட்டம் கர்மஸ்தானம் ஆகும். இவர் லக்னத்தில் இருந்து எந்த வீட்டில் இருக்கின்றாரோ அதனை பொறுத்தே பலன்களும் காணப்படும்.

கட்டம் 11

பதினோராவது கட்டத்தில் இருக்கும் ராசியானது சரியாக காணப்படாது. பணம் அனைத்தும் வீண்விரயமாகி விடும்.

கட்டம் 12

பனிரெண்டாம் கட்டம் மோட்சஸ்தானம் ஆகும். இது விரயம், நஷ்டம், ஜெயில் தண்டனை போன்றவற்றை குறிக்கும். ராசிக் கட்டம் கணிப்பதினூடாக ஒருவருடைய எதிர்கால மற்றும் நிகழ்கால வாழ்க்கை பற்றி சிறப்புற அறிந்து கொள்ள முடியும்.

Read More: சித்ரா பௌர்ணமி என்றால் என்ன

கௌரி நல்ல நேரம் என்றால் என்ன