மூன்றாம் பிறை என்றால் என்ன

Moondram Pirai Endral Enna

இந்த பதிவில் “மூன்றாம் பிறை என்றால் என்ன” என்பது பற்றி விரிவாக காணலாம்.

மூன்றாம் பிறை என்றால் என்ன

சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் அமைவு  பெறும் ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாளான துவிதை திதியில் வெளிப்படும் நிலவே மூன்றாம் பிறை எனப்படும்.

இந்நாளில் சந்திரபகவான் வழிபாடு சிறப்பாக இடம்பெறும். இதனை மூன்றாம் பிறை தரிசனம் அல்லது சந்திர தரிசனம் எனவும் அழைப்பர்.

விநாயகர், சிவபெருமான், பார்வதி தேவியார் போன்ற தெய்வங்கள் தமது தலையில் சூடி இருப்பதனால் இப்பிறையானது தெய்வீக சின்னமாகும்.

காமம், வெகுளி, மயக்கம் போன்ற மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுப் படுத்துவதற்காக இவ்வழிபாடு  செய்தல் சிறந்தது என சித்தர்கள் கூறுகிறார்கள்.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சைவம் என அனைத்து மதங்களும் மூன்றாம் பிறையை தெய்வீக தன்மை பொருந்திய சின்னமாகவே கருதிப் போற்றுகின்றது. இந்த மூன்றாம் பிறையை வைத்து தான் 80 வயது நிறைவுற்றவர்களை ஆயிரம் பிறை கண்டவர் என்று அவருக்கு சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றனர்.

புராணக் கதை

ஒரு முறை தட்சணின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்த சந்திர பகவான், தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சிவனை நினைத்து தியானம் செய்தார்.

தட்சணின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்த அவரது மனைவிமார் இருபத்தேழு நட்சத்திரங்களும் உடனே தங்களின் தந்தையாகிய தட்சணிடம் சென்று சாபவிமோசனம் அளிக்கும் படி வேண்டினர்.

தட்சணோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்து விட்டது அதனால் தன்னால் இதற்கு ஏதும் செய்ய இயலாது என்று கூறினார். இறுதியில் இருபத்தேழு நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவனை நோக்கி தவம் புரிந்தனர்.

சந்திரனின் தவத்தை மெட்சிய சிவபெருமான் தன் தலையில் “மூன்றாம் பிறையாக” அமரும் பேறு பெற்றார்.

அதாவது சுறுசுறுப்போடு அதே நேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழு பலனையும் அடைய முடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. இப்பிறையை தரிசிப்பதன் மூலம் சந்திரனும் சிவனதும் அனுக்கிரகத்தைப் பெறலாம்.

மூன்றாம் பிறையின் சிறப்புக் கதை

திருவிளையாடற் புராணம் கூறும்  பிட்டுக்கு மண் சுமந்த கதையில் அதாவது, “மதுரையில் உள்ள வைகையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது, அந்நாட்டு அரசன் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி பங்கு பிரித்து அணையை கட்டி முடிக்க உத்தரவு இட்டான்.

அதன் படி நாட்டு மக்களும் தம் பங்குக்கு உரியவற்றை கட்ட ஆரம்பித்தனர். அவ்வேளை அவ்வூரில் இருந்த மூதாட்டி ஒருவர் தம் பங்கினை எவ்வாறு கட்டுவது என்பதை அறியாது சிவனை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்தார். சிவபெருமானே அம் மூதாட்டிக்கு கூலியாளாக வந்து அணையை கட்ட உதவினார்.”

இதில் சிவபெருமான்  தன்னுடைய பணியாட்கள் எவரையும் அனுப்பாது தாமே அம்மூதாட்டிக்கு உதவி செய்வதற்கு கூலியாளாக வந்தமைக்கான காரணம், அம்மூதாட்டி தனது வாழ்நாளில் ஆயிரம் முறைக்கு மேல் மூன்றாம் பிறை தரிசனம் செய்தமையே ஆகும்.

இதிலிருந்து நாம் மூன்றாம் பிறை தரிசனத்தை மேற்கொண்டால் கஷ்டகாலங்களில் இறைவனே நேரடியாக வந்து உதவி புரிவார் என்று  மூன்றாம் பிறை தரிசனத்தின் சிறப்பினை அறியலாம்.

மூன்றாம் பிறை வழிபாடு

மாதந்தோறும் வரும் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாளான துவிதை திதியில் மூன்றாம் பிறை வழிபாடு செய்யப்படுகிறது. இந்நாளில் மாலை 6  தொடக்கம் 6.30 மணிக்குள் இவ்வழிபாடு செய்யப்படுகிறது. சந்திரனை சந்திக்கும் போது கையில் பணம் வைத்து மூடிக் கொண்டு வலமாக சுற்றி மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வழிபடுவர்.

ஜனனகால லக்கினத்தின்படி நல்ல பலன்களை காண இயலவில்லை என்றால் சந்திரனை லக்கினமாக கொண்டு பலன் சொல்ல வேண்டும் என்ற விதி சோதிடத்தில் காணப்படுகிறது.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திர தரிசனம் வாழ்நாள் முழுவதும் செய்தால் வாழ்வில் சிறப்பு பெறுவார்கள். ஒருவருக்கு சந்திர தோஷம் இருக்குமாயின் மூன்றாம் பிறை நாளன்று விரதமிருந்து மாலையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

மூன்றாம் பிறை பலன்கள்

  • சந்திர பகவான்  அறிவுக்குரிய தெய்வமாக காணப்படுவதனால் இந்நாளில் குழந்தைகள் பெரியவர்கள் சந்திர வழிபாடு செய்வதனால் அவர்களுடைய ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • தம்பதிகளாக சந்திர தரிசனம் செய்ய தம்பதியினரிடையே ஒற்றுமை உண்டாகும்.
  • சிவபெருமானின் பிரச்சினை தரிசித்த பலன் கிடைக்கும்.
  • ஆயுள் விருத்தியாகும்.
  • மன அழுத்தம், மனக் குழப்பம் நீங்கும்.
  • பிரமகத்தி தோஷங்கள் நீங்கும்.
  • கண்பார்வை தெளிவாகும்.
  • திங்கட்கிழமையன்று வரும் மூன்றாம் பிறை தரிசித்தால் அவ்வருடம் முழுவதும் சந்திரனை தரிசித்த பலனை பெறலாம்.
  • உடல் ஆரோக்கியம் பெறுவர்.
  • ஒரு வருடம் முழுவதும் சந்திர தரிசனம் மேற்கொண்டவர்கள் அவர்களின் இறப்பின் பின் சொர்க்கம் அடைவர் என்பது ஐதீகம் ஆகும்.
You May Also Like :
பல்லி விழும் பலன்
பல்லி சொல்லும் பலன்