முல்லை பெரியாறு அணை பற்றிய கட்டுரை

Mullai Periyar Dam Katturai In Tamil

இந்த பதிவில் முல்லை பெரியாறு அணை பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்காக பயணித்து அரபிக்கடலில் கலந்த ஆறு தமிழகத்திற்கு திருப்பி விடப்பட்ட சிறப்புமிக்க வரலாறு என்றும் மறக்க முடியாத ஒன்று.

அணையின் கட்டுமானம் இன்றும் உறுதியாக இருப்பது பிரமிக்க வைக்கும் ஒன்றாகும்.

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

முல்லை பெரியாறு அணை பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. முல்லை பெரியாறு அணை உருவான வரலாறு
  3. முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைகள்
  4. தமிழகம் அடைந்துகொள்ளும் நன்மைகள்
  5. முடிவுரை

முன்னுரை

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி மேற்காக பயணித்து அரபிக்கடலில் கலந்து வந்த பெரியாறு தமிழகத்தை நோக்கி திருப்பி விடப்பட்ட வரலாறு தமிழக மக்களின் வாழ்வியலில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டுவந்தது யாவரும் அறிந்த விடயமாகும்.

வீணாக கடலில் கலந்து வந்த நதி நீரினை மக்கள் தேவைக்காகவும் விவசாயத்தை செழிக்க செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அணை இன்று வரைக்கும் அசையாது நிற்கின்ற பொறியியல் துறையின் மிகச்சிறந்த படைப்பாக பார்க்கப்படுகிறது.

நீண்ட பெரும் வரலாற்றையும் பல போராட்டங்களையும் சர்ச்சைகளையும் தேக்கி வைத்திருக்க்கும் முல்லை பெரியாறு அணை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

முல்லை பெரியாறு அணை உருவான வரலாறு

முல்லை பெரியாறு அணை உருவாக வேண்டியதன் தேவை வைகையாற்றின் நிலையற்ற வெள்ளபோக்கில் இருந்து தொடங்குகிறது.

வைகையாற்றின் நீர்ப்பாசனத்தின் தொடர்ச்சியாகவே முல்லை பெரியாற்றின் இணைப்பை பார்க்க கூடியதாக உள்ளது. வைகையாற்றில் துவங்கிய நாகரீகம் தமிழர்களின் மிகப் பழைழையான நாகரீகத்துடன் துவங்குகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இன்றைய தேனி மாவட்டத்தின் “வருசநாடு” மலைப் பகுதியில் ஊற்றாக உருவெடுத்து கம்பம் பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து மேகமலை அருகில் சுருளி ஆற்றுடன் வைகை இணைகிறது.

சங்க காலத்தில் இருந்தே வைகையாறு “பேராறு” என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.

இது வருடம் முழுவதும் பாயாது விடினும் காலத்தே பயிர் செய்யும் விவசாயிகளை வாழ்விக்கும் மழைக்கால ஆறாக விளங்குகிறது. இது சில காலங்களில் வரண்டு போவதும் உண்டு.

வான்மழையையும் வைகையாற்றையும் நம்பிய மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டனர். வைகையாற்றினை நம்பிய தமிழக மக்கள் நீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர்.

வைகை நீரை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று அனைவரும் தவித்த வேளையில் மேற்கு நோக்கி பாய்ந்து கொண்டிருந்த “பெரியாறு” பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பெரியாற்றினை வைகையாற்றோடு இணைப்பதனால் தமிழ்நாட்டின் நீர்ப்பற்றாக்குறை நீங்கும் என கி.பி 1762-1795 வரையான காலத்தில் ஆட்சி செய்த “முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி” என்பவரின் ஆட்சிக்காலத்தில் 1789 இல் 12 பேர் கொண்ட குழு ஆற்றை கிழக்கு நோக்கி திருப்பும் பணியில் இறங்கியது. இதற்கு அதிக பொருளாதார செலவு ஏற்பட்டதால் திட்டம் கைவிடப்பட்டது.

ஆங்கிலேயர்களுடைய ஆட்சி காலத்தில் 1640-1907 வரையான காலப்பகுதியில் இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள “முல்லை” என்ற இடத்தில் பெரியாறு சங்கமிக்கிறது.

1882 இல் “மேஜர் ஜோன் பென்னிகுயிக்” என்பவர் தான் முல்லை பெரியாற்று அணையை “சுண்ணாம்பு காரை” எனும் பதார்த்தத்தினால் உருவாக்கலாம் என்ற முயற்சியில் இறங்கி பல சவால்களை தாண்டி பல ஆண்டு கால கடுமையான போராட்டத்தின் பின்னர் 1895 இல் அணைகட்டும் பணி முற்றுப்பெற்றது.

பல தடைகளை தாண்டி தமிழக மக்களின் நீர் தேவையை நிவர்த்தி செய்த இவர் இன்றும் மக்களால் தன்றியோடு நினைவு கூரப்படுகின்றார்.

முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைகள்

இந்த அணையானது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைபகுதியில் அமையப்பெற்றுள்ளது. இருப்பினும் தமிழக அரசினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அத்துடன் இவ்வணை உருவாக தேவைப்பட்ட நிலத்தை கேரள அரசு விட்டு கொடுத்தமையால் இதற்குரிய வாடகையினை தமிழ்நாட்டு அரசு வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தமாகும்.

மேலும் அணையில் 100 அடிக்கு மேல் நீர் உயரும் போது தான் பெரியாற்று அணையில் இருந்து வைகையாற்றுக்கு நீர் திறந்து விடப்படுவதனால். இன்றுவரைக்கும் தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் பிணக்குகள் பல நிலவி வருகின்றன.

தமிழ்நாட்டுக்கு நீர் வழங்க கேரள அரசு மறுப்பதும் இதற்கெதிராய் தமிழகம் அரசியல் மற்றும் மக்கள் போராட்டம் தொடர்வதும் அண்மைக்காலங்களில் நிகழ்ந்து வருகிறது.

152 அடி கொள்ளளவுடைய இந்த அணையின் நீர் மட்டம் உயர்கின்ற போது மட்டுமே தமிழ்நாட்டிற்கு நீர் திறக்கப்படும் இல்லாத பட்சத்தில் அந்த நீர் கேரளாவுக்கே திரும்பி செல்வது விசனத்துக்குரியது.

இது அங்கு மேலும் 14 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. இருப்பினும் அவர்கள் தமிழகத்துக்கு நீரை தாரளமாக தர முன்வருவதாயில்லை இதற்காக தமிழகம் சட்டரீதியாக மேன்முறையீட்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

தமிழகம் அடைந்து கொள்ளும் நன்மைகள்

இந்த அணையின் உருவாக்கத்தால் வைகையாற்றினை அண்டிய பிரதேசங்கள் சிறப்பாக இரண்டு போகங்கள் நெல்சாகுபடி செய்யக்கூடிய பிரதேசங்களாக மாற்றம் பெற்றன.

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் விவசாயமும் அதனோடு இணைந்த தொழில்களும் குடியேற்றங்களும் வளர்ச்சி காண இந்த அணையே காரணமாகும்.

இயல்பாகவே உயர் வரட்சி கொண்ட மதுரையை அண்டிய பிரதேசங்கள் நன்னீரை பெற்றுக்கொள்ள இந்த அணையே முக்கிய காரணமாகும். வரண்டு கிடந்த மக்களின் வாழ்வில் வசந்தம் வீச இந்த அணையின் பங்கு மிகவும் முக்கியமானது.

முடிவுரை

இன்றைக்கு உலகம் அதிகம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் நீர் சார்ந்ததாக இருக்கிறது. நீர் அந்தளவிற்கு மனிதர்களின் விவசாயம் குடிநீர் என அத்தியாவசியமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது.

அதிகரித்து வரும் உலகின் காலநிலை மாற்றம் மற்றும் பூகோள வெப்பமயமாதல் நிகழ்வுகள் நீர்ப்பற்றாக்குறையை ஏற்படுத்துகிறன்றன.

இவற்றை தடுக்கும் வகையில் ஏராளமான தடுப்பணைகள் ஏரிகள் குளங்கள் என எமது முன்னோர் அமைத்து சென்ற நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் அவற்றை நாமும் பாதுகாத்து வாழவேண்டியது அவசியமாகும்.

You May Also Like :

மரம் வளர்ப்போம் கட்டுரை

ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை