இந்த பதிவில் மயங்கொலி எழுத்துக்கள் என்றால் என்ன, மயங்கொலி எழுத்துக்கள் யாவை, மயங்கொலி வேறுபாடு போன்றவற்றை பார்க்கலாம்.
- மயங்கொலி எழுத்துக்கள்
- Mayangoli Ezhuthukal In Tamil
Table of Contents
மயங்கொலி எழுத்துக்கள் என்றால் என்ன
உச்சரிப்பில் கிட்டத்தட்ட ஒரே போன்ற போன்ற ஒலிப்புகளை கொண்ட முற்றிலும் வேறுபட்ட பொருள்களை கொண்டவையாக இருக்கும்.
உச்சரிப்பில் சிறிதளவு வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்று அழைக்கப்படுகிறது.
எது சரி, எது தவறு என மயங்க வைப்பதாக இருக்கும் இதனால் இவற்றை மயங்கொலிகள் என்று அழைப்பார்கள்.
மணம் – மனம்
மேலே உள்ள இரண்டு சொற்களையும் உச்சரிக்கும் போது ஒன்று போலவே ஒலிக்கின்றன. உச்சரிப்பில் சிறிதளவு வேறுபாடு மட்டுமே இருக்கின்றது. ஆனால் இவை இரண்டின் பொருள்களும் முற்றிலும் வேறுபட்டவை.
மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை அவை யாவை
மயங்கொலி எழுத்துக்கள் எட்டு உள்ளன.
ண, ன, ந, ல, ழ, ள, ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துக்கள் ஆகும்.
தமிழில் ஒவ்வொரு எழுத்திற்கும் பெயர்கள் உண்டு.
- ண – டண்ணகரம்
- ன – றன்னகரம்
- ந – தந்நகரம்
- ல – லகரம்
- ழ – மகர ழகரம்
- ள – பொது ளகரம்
- ர – இடையின ரகரம்
- ற – வல்லின றகரம்
மயங்கொலி வேறுபாடு
வாணம் – வெடி
வானம் – ஆகாயம்
பணி – வேலை
பனி – குளிர்ச்சி
விலை – பொருளின் மதிப்பு
விளை – உண்டாக்கு
விழை – விரும்பு
இலை – செடியின் இலை
இளை – மெலிந்து போதல்
இழை – நூல் இழை
ஏரி – நீர்நிலை
ஏறி – ஏறுதல்
கூரை – வீட்டின் கூரை
கூறை – புடவை
You May Also Like: