மனோதத்துவம் என்பது உளவியல் என்றும் அழைக்கப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் மனோதத்துவமானது மனம், ஆன்மா என்பதை ஆராயக் கூடியது என அறியப்பட்டது. அதன் பின்னரே நடத்தையைப் பற்றி ஆராயக் கூடியதுதான் மனோதத்துவம் என்றானது.
மனித நடத்தையை விபரிப்பது, அதனை விளக்குவது, அதனை முன்கூட்டியே கவனிப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் மாற்றியமைப்பது இதுவே உளவியலின் இலக்குகளாக உள்ளன.
உளவியலை நடத்தையியல் என்று வாட்சன், டோல்மன், ஹப், கத்தரே, ஸ்கின்னர் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
Table of Contents
மனோதத்துவம் என்றால் என்ன
உணர்வின் அடிப்படையிலான வாழ்க்கைச் சிக்கல்களைப் பக்குவமாக அவிழ்த்து, மனிதனுக்கே உரிய மாண்புகளை மருத்துவ ரீதியில் நமக்குத் தெளிவுபடுத்துவதே மனோதத்துவம் எனப்படுகின்றது.
அமெரிக்க உளவியல் சங்கம் (APA) உளவியலை மனித மனம் மற்றும் நடத்தை பற்றிய ஆய்வு என்று வரையறுக்கிறது.
உளவியல் என்பது மன செயல்முறைகள், நடத்தை மற்றும் இரண்டிற்கும் இடையிலான உறவைப் பற்றிய ஆய்வு ஆகும்.
உளவியலில் மன செயல்முறைகள் கற்றல், உந்துதல், பகுத்தறிவு மற்றும் உணர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கின்றன.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உளவியல் ஆய்வு என்பது மனிதர்கள் தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் அல்லது சுற்றுச்சூழலுடன் தொடர்பு கொள்ளும்போது எப்படி நினைக்கிறார்கள், உணர்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், தொடர்பு கொள்கிறார்கள், மற்றும் புரிந்துகொள்கிறார்கள் என்பது பற்றியதாகும்.
உளவியல் என்பது இயல்பான காரணிகள் மற்றும் இயற்கையின் விதிகளுடன் இணைந்த முதன்மை இயக்கிகள், நடத்தைகள், உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் அவற்றுக்கு பங்களிக்கும் சுற்றுச்சூழல் காரணிகள் பற்றிய ஆய்வில் அக்கறை கொண்ட ஒரு சமூக அறிவியல் எனலாம்.
சைக்காலஜி என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான சைக்கி என்பதிலிருந்து வந்தது, அதாவது உயிர் மூச்சு அல்லது மனித ஆன்மா (ஆன்மாவின் தெய்வமான சைகே என்ற கிரேக்க தெய்வத்திலிருந்து).
சில சுவாரஸ்யமான மனோதத்துவ உண்மைகள்
எண்ணும் எண்ணங்கள், செய்யும் செயல்கள் யாவற்றிற்கும் மூளைதான் காரணம் ஆகும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான மூளைதான் இருக்கின்றது. எனினும் எல்லோரும் ஒரே மாதிரி செயற்படுவதில்லை. காரணம் மூளையின் சிந்திக்கும் திறன் செயற்பாட்டால் நம்மிடையே வேறுபாடுகள் தோன்றுகின்றன.
ஒருவர் உண்மையான அன்பு வைத்திருந்தால் அவர் படும் வேதனைகளையும், கஷ்டங்களையும் கண்களை வைத்தே புரிந்து கொள்வார்கள். எவ்வளவுதான் வெளியில் சிரித்துப் பேசினாலும், உண்மையை கண்டுபிடித்து விடுவார்கள் என்று கூறப்படுகின்றது.
ஆண்களைவிட பெண்கள் குழந்தைப் பருவத்தில் மிக விரைவாக வாக்கியம் அமைத்து பேசுவார்கள். இதனால்தான் பெண்களை அதிகம் பேசுகிறார்கள் என கூறுகின்றனர்.
குளிக்கும்போது பாட்டு பாடுவது மன அழுத்தத்தை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைகின்றது. அதுமட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
இனிப்பையும் சாக்லேட்டையும் விரும்பி உண்பவர்கள் சந்தோசமாகவும், வெளிப்படையாகவும் பேசுபவர்களாக இருப்பார்கள்.
பிறக்கும் போது ஒரு மனிதனுக்கு கண்கள் எந்தளவு இருந்ததோ அதே போல் தான் வாழ்நாள் முழுவதும் இருக்கும். ஆனால் காது மற்றும் மூக்கு குறிப்பிட்ட வயது வரை வளரும்.
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளை கொண்டுள்ளான்.
ஒருவரைப் பற்றிப் பேசும் பேச்சுக்களில் 80 வீதமான பேச்சுக்கள் அவரைப் பற்றி தெரியாமலேயே பேசப்படுகின்றது.
Read more: உளவியல் என்றால் என்ன