மனித உரிமைகளின் முக்கியத்துவம் கட்டுரை

Manitha Urimaigal Katturai In Tamil

இந்த பதிவில் “மனித உரிமைகளின் முக்கியத்துவம் கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த உலகில் பிறந்த அனைவரும் சுதந்திரமாக தங்கள் உரிமைகளுடன் வாழ உரிமை உள்ளவர்கள். மனித உரிமைகள் என்பது மிக முக்கியமான உரிமையாகும்.

மனித உரிமைகளின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வரலாறு
  3. மனித உரிமைகளின் முக்கியத்துவம்
  4. மனித உரிமைகளின் பண்புகள்
  5. மனித உரிமைகள் எதிர்நோக்கும் சவால்கள்
  6. முடிவுரை

முன்னுரை

மனிதம் என்ற வார்த்தையில் நாம் அனைவரும் சமமாக இணைக்கப்பட்டுள்ளோம். மதம்⸴ இனம்⸴ மொழி⸴ நிறம்⸴ பால்⸴ பிறப்பிடம்⸴ இருப்பிடம் எதுவாக இருந்தாலும் தனக்கென்று வரையறுக்கப்பட்டுள்ள இயற்கையான உரிமைகளே மனித உரிமைகளாகும்.

சுதந்திரமாகத் தனி மனிதன் வாழ உரிமையுடையவனாவான். அனைவரும் பிறப்பால் சமமானவர்களே இதனால் அனைவருக்கும் மனித உரிமைகள் சமனானதாகும். மனித உரிமைகள் முக்கியத்துவம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வரலாறு

மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டதாகும். பல தொன்மையான ஆவணங்களும்⸴ பிற்காலத்தில் சமயம் மற்றும் மெய்யியலும் மனித உரிமை எனக் கருதக்கூடிய பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி இருந்தன.

இவற்றுள் கி.மு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப்பிரகடனமும்⸴ கி.பி 272 – 232 காலப்பகுதியில் அசோக மன்னனால் வெளியிடப்பட்ட அசோகனின் ஆணையும்⸴ கி.பி 622 முகமது நபிகளால் உருவாக்கப்பட்ட மதினாவின் அரசியல் சட்டமும் முக்கியமான ஆவணங்களாகும்.

18ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும்⸴ பிரான்சிலும் புரட்சிகள் ஏற்பட அதன் விளைவாக சட்டம் சார்ந்த உரிமைகள் நிலைநாட்டப்பட்டது.

18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் தாமசு பைன்⸴ ஜான் இசுட்டு போன்ற பல அறிஞர்களால் மனித உரிமைகள் தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பரவலானது.

இரண்டு உலக மகா போர்களினாலும் அவற்றினால் விளைந்த சேதங்களாலும் மனித உரிமைகள் மேலும் வளர்ச்சியடைந்தன.

மனித உரிமைகளின் முக்கியத்துவம்

ஒரு ஜனநாயகச் சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கும் பிரஜைகளின் நலனை விருத்தி செய்வதற்கும்⸴ நீதியை நிலைநாட்டவும் மனித உரிமைகள் முக்கியமானவையாகும். மனித உரிமைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டதன் விளைவாகவே இன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே மனித பிறவிகளின் அடிப்படை விடயங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

ஒரு நாடு வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் முக்கியமானதாகும். தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட மனித உரிமைகள் முக்கியமானதாகும்.

மனித உரிமைகளின் பண்புகள்

  • மனித உரிமைகளின் முக்கிய பண்பாக அனைத்து மனிதர்களின் உரிமைகளும் மதிக்கப்படுவதனை உறுதி செய்வதாகவும்⸴ மனித வாழ்க்கை⸴ தனிப்பட்ட அடையாளம் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.
  • சட்ட உரிமைகளைப் பாதுகாக்கின்றன.
  • தனிமனித ஆளுமையை விருத்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றது.
  • பிறப்பால் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகின்றது.

மனித உரிமைகள் எதிர்நோக்கும் சவால்கள்

இன்று மனித உரிமைகளுக்குப் பல சவால்கள் எழுகின்றன. வறுமை⸴ பாகுபாடு மற்றும்⸴ வன்முறை போன்றன பெரும் சவாலாக உள்ளன.

மனித உரிமைகள் மீறப்படும் போது தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் தலையீடுகள் காரணமாக விடுதலை பெறுகின்றனர். ஜனநாயகத்திலுள்ள பலவீனம் மனித உரிமைகளின் பெரும் சவாலாகும்.

முடிவுரை

இந்தியாவில் 1933ஆம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. உரிமை மீறல்கள் ஏற்படும் போது இங்கு புகார் அளிக்கலாம். எனினும் தினந்தோன்றும் மனித உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு நாட்டின் நிலை மனித உரிமைகளை வைத்தே அளவிடப்படுகின்றது. எனவே உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமைகளை காப்போம்! மனிதம் வளர்ப்போம்!

You May Also Like:

நேர்மையுடன் தற்சார்பு கட்டுரை

குடி குடியை கெடுக்கும் கட்டுரை