இந்த பதிவில் “மனம் என்றால் என்ன” என்பது பற்றி விரிவாக காணலாம்.
Table of Contents
மனம் என்றால் என்ன
மனம் என்பது சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மனஉறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு மற்றும் உணர்வு நிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பை குறிக்கிறது.
மனம் என்பது இதயத்தில் காணப்படுவதாக பலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல மனமானது மூளையுடன் தொடர்புடையது.
நாம் ஐம்புலன்களால் உணர்பவற்றை மூளையே சிந்தித்து மனதின் செயற்பாடுகளை வெளிக்கொண்டு வருகின்றது. இது மூளையுடன் சம்பந்தப்பட்டது என தற்காலத்தில் மூளை நரம்பியல் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக மனம் என்பது நம் அனுபவங்கள் மூலமும், சமூக தாக்குதல்கள் மூலமும் மற்றும் நம்முடைய பரிணாம பயணத்தின் மூலமும் வடிவமைக்கப்படுகிறது.
மனமானது நான்கு பணிகளை செய்யும்போது நான்கு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
1. மனம்: சந்தேகம் எழும்போது மனதிற்கு மனம் என்ற பெயர். எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாத குழப்பிய மனநிலை இது ஆகும்.
2. சித்தம்: பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என வாழ்க்கையில் பெறுகின்ற அனுபவங்கள் அனைத்தும் பதிவுகளாக மனதில் சேமிக்கப்படுகிறது. அந்த சேமிப்பு நிலையமாக திகழும் மனது சித்தம் எனப்படுகிறது.
3. புத்தி: ஒரு விடயத்தில் குழம்பிய நிலையில் உள்ள, சேமிப்பு நிலையமான சித்தத்தில் உள்ளவற்றை கொண்டு தெளிவடைதல். ஒருவேளை சித்தத்தில் தகவல் ஏதும் இல்லையென்றால், எவ்வாறு அந்த விடயத்தில் தெளிவடையும் மனமே புத்தி ஆகும்.
4. அகங்காரம்: மேற்கூறிய மூன்று படிநிலைகளின் மூலமாக ஒருவரை அல்லது ஒருப்பொருளை அறியும்போது அதாவது நான் என்ற உணர்வாக நிகழும்போது மனம் அகங்காரம் எனப்படுகிறது.
மனம் வேறு சொல்
- உள்ளம்
- அகம்
மன மெய்யியல்
மன மெய்யியல் என்பது மனதின் தன்மை, மனம் சார்ந்த தொடர்புகள், மனச்செயற்பாடுகள், மனப்பொருள், நனவு நிலை மற்றும் பௌதீக உடல், மூளை இவற்றுக்கிடையேயான உறவுப் பற்றி கற்கும் மெய்யியலின் ஒரு பகுதி ஆகும்.
உளவியல் அல்லது மனோதத்துவம்
உளவியல் அல்லது மனோதத்துவம் சமூக அறிவியற் துறைகளுள் ஒன்றாகும். உளவியற் செயற்பாடுகள், நடத்தைகள் ஆகியவை பற்றிய அறிவியற் கல்வி ஆகும்.
மன அழுத்தம் என்றால் என்ன
நமது தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையே அல்லது நாம் சமாளிக்கும் திறமைக்கு சவாலாக மனதில் ஏற்படுகின்ற விரும்பத்தகாத உணர்வு மன அழுத்தம் எனப்படும்.
மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள்
- கோபம்
- பயம்
- வெறுப்பு
- கவனமின்மை
- கவலை
- சந்தேகம்
மன அழுத்தத்திற்கான காரணிகள்
- வாழ்வில் திடீரென ஏற்படும் எதிர்மறையான மாற்றம்.
- நிர்ப்பந்தம்.
- முரண்பாடுகள்.
- கௌரவம்.
- ஒப்பிடும் மனப்பான்மை.
- எதார்த்தமில்லாத இலக்குகள்.
- உறவு முறைகளில் விரிசல்.
- ஒன்றுக்கு மேற்பட்ட ஆசைகள்.
மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்
- செய்யும் தொழிலை முழு ஈடுபாட்டுடன் செய்தல்.
- அடுத்தவர் உணர்வுகளை மதித்தல்.
- சுய ஒழுக்கம்.
- தியானம்.
- திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை.
- எளிதில் கோபப்படாதிருத்தல்.
- சுயநலமின்றி செயற்படுதல்.
- நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளல்.
- இசைப் பாடல்களை இரசித்தல்.
You May Also Like: |
---|
ஆற்றல் என்றால் என்ன |
உதடு கருமை நீங்க |