மணமகள் (bride) எனும் சொல் திருமணமாக இருக்கும் பெண்ணை குறிப்பதாகும். திருமண வைபவங்களின்போது மணமகளுக்கு மிகவும் விலை உயர்ந்த உடை மற்றும் அணிகலன்களை அணிவித்து மகிழ்வார்கள்.
இவற்றில் மணமகள் திருமணத்தின் போது அணியும் சேலைக்கு கூறைச்சேலை என்று பெயர். சில இடங்களில் மணமகள் சார்பில் மணமகனுக்கு வரதட்சணை தரும் பழக்கம் இன்றும் உள்ளது. இம்முறையை சீதனம் எனவும் அழைப்பர்.
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் திருமணத்தின் போது மணமகள் சாதாரண உடையுடனும் முக்காடுடனும் காணப்படுவார். திருமண வைபவங்களின் போது மணமகளும் மணமகனுமே அங்கு காதா நாயக, நாயகியாக திகழ்வார்கள்.
திருமண வைபவம் என்பது மதத்திற்கு மதம் வேறுபடுவதைப் போல மணமகளும் மதத்திற்கு மதம் வேறுபட்ட கலாச்சாரத்துடன் காணப்படுவர்.
இவ்வாறான மணமகளுக்கு தமிழில் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவையாவன,
மணமகள் வேறு பெயர்கள்
- திருமணப்பெண்
- மணப்பெண்
- மணவாட்டி
- மணவாளி
இவ்வாறான பெயர்கள் மணமகளுக்கு வழங்கப்படுகின்றன.
Read more: தனுசு ராசி குணங்கள்