மணத்தக்காளி கீரை பயன்கள்

மணத்தக்காளி பயன்கள்

தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வளரக்கூடியது. தென்மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி போன்ற பெயர்களால் அழைக்கப்படுவண்டு. நமது மண்ணில் விளைகின்ற உடலுக்கு பல சத்துக்களை அளிக்கும் கீரை வகைதான் மணத்தக்காளி.

வரம்புகளில் உள்ள ஏரி மற்றும் குளங்களின் கரைகளில் தானாக வளரக்கூடிய ஒருவகைச் செடி இனத்தைச் சார்ந்தது ஆகும்.

இதில் பல நன்மைகள் இருப்பதால் தற்போது இதனை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதன் இலை சிறிது இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.

மணத்தக்காளி கீரை பயன்கள்

#1. இருமல், இளைப்பு பிரச்சனைகளைக் குணமாகும். இதைச் சமைத்து சாப்பிட்டால் இருமல் பிரச்சனை சரியாகும்.

#2. குடற்புண், வாய்ப் புண், வயிற்றுப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தும். இதன் இலைகளை தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

அல்லது வெறும் பச்சை இலையை நாளொன்றுக்கு ஐந்து முறைகள் நன்றாக மென்று விழுங்கினால் குணமாகும்.

மணத்தக்காளி கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது.

#3. மூட்டுவலி, வீக்கங்களைக் குணமாக்கும். மணத்தக்காளி இலையை வதக்கி மூட்டு பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

#4. தொண்டைப் பகுதியில் வறட்சி ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்வதோடு, வீக்கம் மற்றும் புண்களும் ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

#5. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

#6. காசநோயைக் குணப்படுத்தும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் சிறிதளவு மணத்தக்காளி கீரை மற்றும் அதன் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் நோயின் கடுமையை குறைக்கும்.

#7. மணத்தக்காளி வற்றலானது வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும்.

#8. உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும்.

#9. கண்பார்வையை தெளிவாக்கும். விழிப் படலத்தினை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது.

#10. தலைவலி, தோல் நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தி உடல் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

#11. உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை குணப்படுத்திவிடும்.

#12. தேமல், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

#13. உடலில் வலி உள்ள இடங்களிலும் இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.

#14. நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும்.

#15. மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது.

#16. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கும் தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

#17. கரு வலிமை பெறவும், ஆரோக்கியமாகப் பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது.

#18. ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரை உண்டாக்குகிறது.

You May Also Like:
தர்ப்பை புல் பயன்கள்
மக்கா வேர் பயன்கள்