புவிசார் குறியீடு என்றால் என்ன

puvisar kuriyeedu endral enna

அறிமுகம்

ஓரிடத்தில் விளையக்கூடிய பொருட்கள் அல்லது தயாரிக்கக்கூடிய பொருட்களின் தரம் அந்த இடத்தின் காலநிலை, நிலம், நீர் இதனுடைய தன்மை போன்றவற்றை வைத்தே புவிசார் குறியீடு நிர்ணயிக்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாது ஒரு பொருளினது இடத்தின் பாரம்பரியத்தை உலகுக்கே தெரிவிக்கவும், அடுத்த தலைமுறைக்குப் பத்திரமாய் கொடுக்கவும் என நினைத்து புவிசார் குறியீடு பாதுகாப்புச் சட்டம் என்பதனை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய அரசு 1999ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. அந்தச் சட்டத்தை 2003ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்.

இச்சட்டத்தின்படி ஒவ்வொரு ஊருக்கும் அவ்வூரின் சிறப்பான விடயத்திற்கு புவிசார் குறியீடு வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இது மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சுக்களோடு அறிவுசார் சொத்துரிமைத்துறை ஆகியவை இணைந்து புவிசார் குறியீடு வழங்குகின்றது.

அதன் அடிப்படையில் 2003ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 3200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 32ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு என்றால் என்ன

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பான வடிவங்கள் இருக்கும் அவ்வாறான சிறப்பான பொருட்களை அங்கிகாரம் செய்வதற்கும், கௌரவிக்கும் வகையிலும் கொடுக்கப்படுவது தான் புவிசார் குறியீடு ஆகும்.

புவிசார் குறியீடு கிடைப்பதன் பலன்கள்

ஒரு பொருளுக்கும் புவிசார் குறியீடு கிடைக்கும் எனில் அந்த ஊர் மக்களை தவிர வேறு ஊர் மக்கள் அந்தப் பெயரை பயன்படுத்தி அப்பொருளை தயாரிக்க முடியாது.

உதாரணத்திற்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா ஸ்ரீ வில்லிபுத்தூர் மக்கள்தான் இதனைத் தயாரிக்க முடியும். அதைத்தவிர வேறு ஊர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை தயாரித்து விற்க முடியாது.

இதன் மூலம் போலிகள் தயாரிப்பது தடுக்கப்படுவது மட்டுமன்றி அந்த ஊர் தொழிலாளர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். இதன் மூலம் அப்பொருளை வாங்குவதற்கு அந்த ஊரைத் தேடி மக்கள் வருவார்கள்.

அதுமட்டுமன்றி அப்பொருளின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். இதனால் உற்பத்தி பெருகும். அப் பொருளுக்கும், அவ்வூர் மக்களுக்குமான வரலாற்றுப் பிணைப்பு மாறாமல் பாதுகாக்கப்படும்.

பொருட்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பும் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் சட்டப் பாதுகாப்பும் புவிசார்க் குறியீட்டினால் கிடைக்கப்படுவது மேலும் பயனுள்ளதாகின்றது.

தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்

  • காஞ்சிபுரம் பட்டுச் சேலை
  • மதுரை சுங்குடி சேலை
  • ஆரணிப்பட்டு
  • கோவை கோரா பட்டு
  • சேலம் வெண்பட்டு
  • திருபுவனம் பட்டு
  • பவாணியமக்காலம் பத்தமடைப் பாய்
  • தோடர்களின் வேலை பட்டுத் துணிகள்
  • மதுரை மல்லி
  • தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
  • தஞ்சாவூர் ஓவியங்கள்
  • தஞ்சாவூர் கலைத்தட்டு
  • கொடைக்கானல் மலை பூண்டு
  • பவானி ஜமக்காளம்
  • விருப்பாச்சி மலை வாழை
  • செட்டிநாடு அரண்மனை
  • நாகர்கோவில் குத்துவிளக்கு
  • சுவாமி மலை வெண்கலச்சிலை
  • கோவை வெட் கிரைண்டர்
  • கோவை தொல்பொருட்கள்
  • நீலகிரி தேயிலை
  • பழனி பஞ்சாமிர்தம்
  • சேலம் மாம்பழம்
  • தூத்துக்குடி மக்ரூன்
  • திருநெல்வேலி அல்வா
  • திண்டுக்கல் பூட்டு
  • காரைக்குடி கண்டாங்கி சேலை
  • ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா

போன்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like :
துத்தி இலையின் பயன்கள்
பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும்