பல்லுயிர் என்றால் என்ன

palluyir enral enna in tamil

அறிமுகம்

உலகில் உயிர்கள் உருவானது தொடக்கம் பரிணாமத்தின் பல கட்டங்களைக் கடந்து வந்த நீண்ட பயணத்தில் பன்முகத்தன்மை கொண்ட தாவரங்களையும், விலங்குகளையும் கண்டுள்ளோம்.

பூமியில் வாழும் உயிரினங்களுக்கும் – உயிரினங்களுக்கும் இடையிலும், உயிரினங்களுக்கும் – ஜடப்பொருள்களுக்கிடையிலும், ஜடப்பொருள்களுக்கும் – ஜடப்பொருள்களுக்குமிடையளிலும் பல செயற்பாடுகள் இடம் பெறுவதை அறிகின்றோம்.

இதன் காரணமாக இன்று அதிகளவில் உலகில் உருவாகிய பரந்த பன்முகத்தன்மை மீது கவனம் செலுத்துவதனைக் காணலாம்.

பல்லுயிர் என்றால் என்ன

பல்லுயிர் என்றால் என்ன

பல்லுயிர் என்பது பல்லுயிர் என்பது பூமியில் உள்ள பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிக்கிறது. இதில் மிகப்பெரிய நீல திமிங்கலம் முதல் மிகச்சிறிய பாக்டீரியா வரையிலான அனைத்து உயிரினங்களும் அவற்றின் மரபணு (மூலக்கூறு) வேறுபாடுகளும் அடங்கும்.

பூமியிலுள்ள உயிரினங்கள்

பூமியில் நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்ற போதிலும் அவற்றில் இனங்கானப்பட்டிருப்பது 1.7 மில்லியன் மாத்திரமே ஆகும்.

இவற்றில் பாதி உயிரினங்கள் கிருமிகள். கால்நடைகளில் 4000 வகைகள் உள்ளன. 9000 வகைகளுக்கு மேலான பறவைகளும், 4000 வகைகளுக்கு மேலான ஈருடவாளிகளும், 6000 வகைகளைத் தாண்டிய ஊர்வனவும், 19000 வகைகளுக்கு மேலான கடல் வாழ் உயிரினங்களும் இருப்பதாக அறியப்படுகின்றன.

பல்லுயிர் பாதுகாப்பு முக்கியத்துவம்

பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை அன்றே நம் முன்னோர்கள் உணர்ந்தால் தான், “பார்க்கும் உயிர்களனைத்துமே அந்த பரம்பொருளின் அம்சம் தான்” என்றனர்.

பல்லுயிர்கள் பாதுகாப்பு முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணர்ந்து “பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு” எனும் ‘Biodiversity Conservation’ தொடர்பான விவாதங்கள், விழிப்புணர்வு கருத்தரங்குகள் தற்போது உலகம் முழுமையிலும் பரவலாக நடைபெற்று வருகின்றன.

மனிதனுக்கு இந்த உலகில் வாழ உரிமையுள்ளதோ அந்தளவிற்கு மற்றைய உயிரினங்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுண்டு. ஆனால் இந்தப் பூமி நமக்கு மட்டுமே சொந்தம் என்ற நினைப்பில் வாழ்வது மனித இனம் மட்டுமே.

மற்றைய எந்த உயிரினமும் இங்கு நாம் மட்டுமே வாழ வேண்டுமென நினைப்பதில்லை. பார்க்கும் இடமெல்லாம் நம்முடையதாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் மனிதனிடம் மட்டுமே உண்டு.

ஆனால் பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனது தலையாய கடமையாகும் என்பதனை மறந்துவிடலாகாது.

மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் வாழ அதன் இனப்பெருக்கம் அதிகரிக்கும் விழிப்புணர்வு நாளான 2000 ற்கு முன்புவரை உலக பல்லுயிர் பெருக்க தினமாக டிசெம்பர் 29 ஆம் திகதி உலக நாடுகள் கடைப்பிடித்து வந்தன.

2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ.நா வின் உலகப் புவி வெப்பமயமாதல் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி மே 22 ஆம் திகதி உலகப் பல்லுயிர்ப் பெருக்க தினமாக உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் கொண்டாடி வருகின்றன.

உலகில் தற்போது 1000ற்கும் அதிகமான உயிரினங்கள் மிக வேகமாக அழிந்து வருவதுடன், இருப்பவை வாழ முடியாமல் தவிக்கின்றன. இந்தியாவில் அழியும் விளிம்பில் உள்ள உயிர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும்.

உலக நாடுகளில் பல்லுயிர்ப் பெருக்கத்தில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது.

விவசாயி விதைப்பதால் மட்டும் பயிர்கள் விளைந்துவிடுவதில்லை. அந்தப் பயிருக்குத் தேவையான சத்துக்களை நுண்ணுயிர்கள் கொடுக்கின்றன.

மனித குலத்திற்குப் பல நன்மைகளைப் பெற்றுத்தருவதில் பிற உயிரினங்களும் பங்களிப்புச் செய்கின்றன என்பதை மனித குலம் என்றும் மறந்து விடக்கூடாது.

You May Also Like :
முதலுதவி பற்றிய கட்டுரை
முதலுதவி என்றால் என்ன