ஒரு பதாகை ஒரு நீண்ட துணியில் அல்லது மட்டையில் எழுதப்பட்ட வடிவில் இருக்கலாம். அதில் ஒரு முழக்கம், லோகோ, சின்னம், விளம்பரம் அல்லது பிற வகை செய்திகள் இருக்கும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் டிஜிட்டல் விளம்பரம் பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலகளாவிய சந்தைகளாக மாறியிருந்தாலும், ஆஃப்லைன் பிரச்சாரங்கள் இன்னும் முக்கியமானவை மற்றும் பல சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதனை இன்றும் காணமுடிகின்றது.
பதாகைகள் பெரும்பாலும் பலரால் பார்க்கக்கூடிய இடத்தில் வைக்கப்படுகிறது. பொதுவாகப் பதாகைகள் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் இணையம் மற்றும் மின்வணிகத்தின் வருகைக்குப் பிறகு பதாகை என்ற சொல்லானது இணையப் பக்கங்களில் வைக்கப்படும் செய்திகளையும், விளம்பரங்களையும் உள்ளடக்கியது.
Table of Contents
பதாகை என்றால் என்ன
பதாகை என்பதற்கு தமிழில் பல அர்த்தங்கள் உள்ளன. அவையாவன, பதாகை (Banner) என்பது தகவலை வெளிப்படுத்தும் ஓர் அட்டை அல்லது தாள் ஆகும்.
ஓர் அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகவும் பதாகை உள்ளது. ஒரு விருதின் அடையாளமாக உள்ள கொடியையும் இச்சொல் குறிக்கும்.
பரதநாட்டியத்தில் உள்ளங்கையையும், விரல்களையும் சேர்த்து உருவாக்கும் ஒரு நிலையைக் குறிக்கவும் பதாகை பயன்படுத்தப்படுகிறது.
பதாகையின் பயன்கள்
இணையத்தின் வருகையுடன், பதாகை விளம்பரங்களும் நிறைய உருவாகியுள்ளன. இன்று பதாகை விளம்பரங்கள் புதிய வடிவத்துடன் வணிகத்தின் விற்பனையை விரைவாக அதிகரிக்கும் வல்லமை பெற்றுள்ளன.
ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விளம்பரப்படுத்த பதாகை விளம்பரங்களைப் பயன்படுத்தும் பல நிறுவனங்கள் இன்று உள்ளன.
பதாகைகளை சந்தைப்படுத்தல், ஆர்ப்பாட்டங்கள், பொது நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களில் கூட மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.
பதாகை விளம்பரங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க உதவுகின்றது. பதாகைளின் ஊடாக மக்கள் மத்தியில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகின்றது.
விளையாட்டுப் போட்டிகளின் போது பேனர்களை அடிக்கடி பார்க்கின்றோம். ஒரு பெரிய தேசிய அல்லது சர்வதேச போட்டியில் ஒரு அணி வெற்றிபெறும் போது, அந்த அணியின் அமைப்பைப் பிரதிபலிப்பவையாக தெருக்களில் அல்லது விமான நிலையத்தில் வைத்து தங்கள் வீரர்களை வீட்டிற்கு வரவேற்கும் சந்தர்ப்பங்களையும் காண முடிகின்றது.
பதாகையின் சொற்பிறப்பியல்
சொற்பிறப்பியல் என்பது வார்த்தைகள் எங்கிருந்து வந்தன, அதாவது அவற்றின் தோற்றம், காலப்போக்கில் அவற்றின் அர்த்தங்கள் எப்படி, எப்போது மாறின என்பதைப் பற்றிய ஆய்வு ஆகும்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆங்கில மொழியில் பேனர் (Banner) என்ற வார்த்தை தோன்றியது. இது “துண்டு அல்லது கம்பத்தின் மேல் முனையில் இணைக்கப்பட்ட துணி” (“piece of cloth attached to the upper end of a pole or staff”) என்று அறியப்பட்டது.
இச்சொல்லானது பழைய பிரெஞ்சு வார்த்தையான “பனியர்” இலிருந்து வந்தது. பழைய பிரஞ்சு வார்த்தையானது லத்தீன் வார்த்தையான “பாண்டம்” Baniere இலிருந்து வந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்த வார்த்தை அதன் நவீன அர்த்தத்தை பெற்றது.
Read more: ஆயுள் காப்பீடு என்றால் என்ன