பண்டைய காலத்தில் பல படைகள் ஒன்றினைந்த சேனையாகும். அக்கால தமிழர்கள் பலவகை போர்ப்படைகளைக் கொண்டிருந்தனர். அவற்றுள் நான்கு வகைகள் முக்கியமானவையாகும். அத்துடன் அவை பல உட்பிரிவுகளையும் கொண்டிருந்தன.
அவற்றுள் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என்பனவாகும். காலாட்படை என்பது மனிதர்களை மட்டும் கொண்ட படைப்பிரிவாகும், குதிரைப்படை என்பது குதிரைகளின் மீது அமர்ந்து போரிடும் மனிதர்களை கொண்ட படைப்பிரிவாகும், யானைப்படை என்பது யானைகளையும் அதன் மீது அமர்ந்து போரிடும் மனிதர்களை கொண்ட படைப்பிரிவாகும்.
தேர்ப்படை என்பது தேர்களின் மீது அமர்ந்து போரிடும் மனிதர்களை கொண்ட படைப்பிரிவாகும். இவற்றை தவிர ஒரு படை மட்டும் நேரடியாக போரில் பங்கு கொள்ளாது. அது ஒற்றர் படையாகும்.
படைகளின் ஆயுதத்தை பொறுத்து அவை நான்கு வகைப்படும். அவையாவன விற்படை, வேற்படை, மற்படை, வாட்படை என்பனவாகும்.
படை வேறு சொல்
- சேனை
- திரள்
- சுற்றம்
- தானை
Read More: அபரிமிதம் வேறு சொல்