மனித வாழ்க்கையானது சிறந்து விளங்குவதற்கு நெறிமுறை பற்றிய அறிவு அவசியமாகும். மனித வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு பகுதியாக நெறிமுறைகள் காணப்படுகின்றது. ஒரு சமூகத்தின் வாழ்க்கை மற்றும் அதன் வழிமுறைகளை உள்ளடக்கியதாக நெறிமுறைகள் அமைந்துள்ளது.
Table of Contents
நெறிமுறை என்றால் என்ன
நெறிமுறைகள் என்பது ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு நெறிமுறைகள் எனப்படும்.
அதாவது ஒரு சமூகத்தில் மனிதனானவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படும் விதிகள் நெறிமுறைகள் ஆகும்.
நெறிமுறையானது விழுமியம் மற்றும் கருத்தியலை அடிப்படையாக கொண்டமைந்து காணப்படுகின்றது. நெறிமுறையானது மனித நடத்தையில் தாக்கம் செலுத்தக் கூடியதாக காணப்படுகின்றது.
நெறிமுறைகளின் அவசியம்
நெறிமுறைகளானது ஒரு மனிதனுடைய வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தொன்றாக காணப்படுகின்றது எனலாம். அதாவது தவறான பாதையில் செல்லக் கூடிய ஒருவனை நெறிமுறைகளானது சரியான பாதையில் செல்ல துணை புரிகின்றது.
நன்நெறியுடன் வாழ்க்கையினை வாழ்வதற்கு நெறிமுறையானது அவசியமாகும். அதாவது ஒழுக்க போதனைகள் மற்றும் விதிமுறைகள் போன்றவற்றை பற்றியதாக நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக சிறந்த முறையில் நன்நெறியுடன் வாழ்க்கை வாழ அத்தியவசியமாகின்றது.
நெறிமுறைகளானது வாழ்க்கையின் இலட்சியங்கள் மற்றும் நடத்தை வடிவங்கள் மற்றும் சடங்குகள் சம்பிரதாயங்களை சரிவர புரிந்து கொள்வதற்கு நெறிமுறைகளானது அவசியமாகின்றது.
மனித குலத்தில் வாழ்க்கை மற்றும் விதிகளில் ஒரு சிறப்பு தாக்கத்தை நெறிமுறையானது ஏற்படுத்துகின்றது.
வாழ்வின் பல்வேறு விடயங்களில் நெறிமுறையானது தாக்கத்தினை செலுத்துகின்றது. அதாவது ஒழுக்கம், நன்நெறி, தொழில் மற்றும் போதனைகள் போன்ற பல்வேறு விடயங்களில் முக்கியத்துவம் பெற்றதாக நெறிமுறைகளானது காணப்படுகின்றது.
நெறிமுறைகளானது மனித ஒழுக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண துணைபுரிகின்றது. இதனூடாக வாழ்வில் பல்வேறு வகையில் நடத்தைகளை இனங்காண நெறிமுறைகள் துணை புரிகின்றது.
இன்றைய கால கட்டத்தில் நெறிமுறைகளின் செல்வாக்கு
இன்றைய கால கட்டத்தில் நெறிமுறையானது பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் ஆரம்ப கால மரபுகள் பெரும்பாலும் அளிக்கப்பட்டு சமூக மாற்றங்களுக்கேற்ப மாற்றமடைந்து பலமிழந்து காணப்படுகின்றமையினை குறிப்பிடலாம்.
இன்று நெறிமுறைகளின் செல்வாக்கு பலமிழந்து சமூக ஊடகங்களின் செல்வாக்கே அதிகளவு தாக்கம் செலுத்துவதனை அவதானிக்கலாம்.
அதாவது வாழ்க்கை வாழ்வதற்கான பல நன்நெறிகளை கடைபிடிக்காமல் சமூக ஊடகங்களுக்கேற்றாற் போல் மாறி வருகின்ற ஒரு நிலமையினையும் காண முடிகின்றது.
மனித உரிமைகள் சம்பந்தமான கருத்துக்களை உறுதிப்படுத்துவதில் நெறிமுறைகளானது செல்வாக்கு செலுத்துவதனை காணலாம்.
ஏனெனில் ஒருவரின் நடத்தையில் செல்வாக்கு செலுத்த கூடியதாகவே நெறிமுறைகள் காணப்படுகின்றன. இதனூடாக இன்று நெறிமுறைகளானது சில விடயங்களில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நெறிமுறைகளானவை வாழ்வின் பல்வேறு யதார்த்தமான சூழ்நிலைகளில் செல்வாக்கு செலுத்த கூடிய தொன்றாக காணப்படுகின்றமையினை நோக்கலாம்.
அதாவது குடும்பம், சமூகம் என பல்வேறுபட்ட விடயங்களில் ஒரு சிறந்த வழிகாட்டலாக நெறிமுறைகள் திகழ்வதனை காணலாம். மேலும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இவ் நெறிமுறைகள் துணை புரிகின்றன.
நெறிமுறைகளானவை இன்று பல்வேறுபட்ட கருத்துக்களை கூறுவதற்கும் ஒழுக்கம் சார்ந்த விழுமியப் பண்புகளை கொண்டமைந்ததொன்றாக நெறிமுறைகள் காணப்படுகின்றது.
பல்வேறு ஒழுக்கம் சார்ந்த விதிமுறைகளை உள்ளடக்கிய தொன்றாக நெறிமுறைகள் காணப்பட்டாலும் இன்று அந்த நெறிமுறைகளின் செல்வாக்கு பலமிழந்து காணப்பட்டதொன்றாகவே நோக்க முடிகின்றது.
Read More: ஆய்வு என்றால் என்ன