உலகில் பழமையான உயிரினங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான உயிரினங்களில் நெருப்புக் கோழியும் ஒன்று. ஆபிரிக்காவை பூர்வீக இடமாக கொண்ட உயிரினம் இதுவாகும்.
இது 8 அடி உயரம் வரை பறக்க கூடியது. ஆனால் உலகில் வேகமாக ஓடக்கூடிய உயிரினங்களில் மூன்றாம் இடத்தில் நெருப்புக்கோழி காணப்படுகின்றது.
Table of Contents
நெருப்பு கோழி வேறு பெயர்கள்
- தீக்கோழி
தீக்கோழி ஆயுள் காலம் – 40- 45 ஆண்டுகள் வரை வாழும்.
தீக்கோழி வாழும் பகுதிகள் – இவை வரண்ட சூடான பகுதிகளில் வாழக்கூடியவை பொதுவாக பாலைவனங்களில் வாழக்கூடியவை.
தீக்கோழியின் முட்டை
பல பெண் கோழிகள் ஒரே இடத்தில் தன் முட்டையை இடும். பகலில் பெண் கோழியும் இரவில் ஆண் கோழியும் முட்டைகளை காக்கும். குஞ்சு வெளிவர 42 முதல் 46 நாட்கள் வரை எடுக்கும் அது வரை கோழிகள் முட்டையை பாதுகாக்கும்.
பறவையினங்களில் தீக்கோழியின் முட்டையே பெரிய முட்டை ஆகும். தீக்கோழியின் ஒவ்வொரு முட்டையும் 14 கிலோ எடையையும் 15 சென்றி மீற்றர் அளவும் கொண்டது.
தீக்கோழியின் உணவு
தீக்கோழிகளுக்கு பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து உண்பதற்காகவே கூடவே கற்களையும் விழுங்குகிறது.
தாவரங்கள், விலங்குகள், கிழங்குவகைகள், இலைகள், பழங்கள், கொட்டைகள்,வெட்டுக்கிளி, பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், ஊர்வன இனங்களை நெருப்புக்கோழி விரும்பி சாப்பிடும்.
தண்ணீர் தேவைப்படுவதில்லை தாவரங்களிலிருந்தே தண்ணீரை எடுத்துக்கொள்கிறது.
தீக்கோழி எனப் பெயர் வரக் காரணம்
நெருப்புக்கோழி என்ற பெயருக்கான காரணம் அக்கோழியின் அதிவேகத்தைக் குறித்து அமைந்ததாகும். நெருப்பு – என்பது இங்கு அக்கோழியின் செயல்பாட்டைக் குறித்து இடப்பட்ட காரணப் பெயர் ஆகும்.
நெருப்பு எவ்வாறு ஒரு பொருளை விரைந்து பற்றுமோ அவ்வாறே அதிவிரைவாக ஓடக்கூடியவை நெருப்புக்கோழி ஆகும்.
நெருப்புக் கோழியின் பயன்கள்
- இறைச்சிக்காக பயன்படும் பொதுவாக குளிர்ப்பிரதேசங்களில் இவ்விறைச்சி பெரிதும் பயன்படுத்தப்படும்.
- தோல் அலங்காரம் பொருட்கள் செய்யப் பயன்படும்.
- இதன் இறகுகள் தொப்பி போன்ற பொருட்கள் செய்யப் பயன்படும்.
Read more: பல்லி சொல்லும் பலன்