தரமான கல்வியை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக நிகர்நிலை பல்கலைக்கழகம் காணப்படுகின்றது. இது தன்னாட்சி பெற்றதொரு நிறுவனமாகவே அமைந்து காணப்படுகின்றது.
Table of Contents
நிகர்நிலை பல்கலைக்கழகம் என்றால் என்ன
நிகர்நிலை பல்கலைக்கழகம் என்பது இந்தியாவில் உயர்தரத்தில் கல்வியினை வழங்குகின்ற கல்லூரி மற்றும் பல்வேறு பல்கலைக்கழக துறைகளுக்கு தன்னாட்சி வழங்கப்படுவதை குறிக்கின்றது இதுவே நிகர்நிலை பல்கலைக்கழகமாகும்.
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தம்முடைய கல்வித்திட்டம் மற்றும் பாடதிட்டம் போன்றவற்றை தீர்மானிக்க தன்னாட்சி பெற்று காணப்படுகின்றது. மேலும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர்களுக்கான கட்டணம், சட்டதிட்டங்கள் குறித்து விதிமுறைகளை செயற்படுத்தும் உரிமையினையும் பெற்று செயற்பட்டு வருகின்றது.
இந்தியாவில் நிகர்நிலை பல்கலைக்கழகம்
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்னர் சரியான உயர்கல்வி வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்தவும், வேலை செய்வதற்கும், வாழ்வாதரம் ஈட்டுவதற்கும் அவர்களுக்கு திறன் மற்றும் அறிவை புகுத்துவது அவசர தேவையாக காணப்பட்டது.
இக்காலப்பகுதில் ஆங்கிலேயர்களின் கீழ் நமது நாடு சுரண்டப்பட்டு மோதலில் ஈடுபட்டு வந்தது. இவ்வாறானதொரு சூழலில் மனித வளத்தை மேம்படுத்துவதே நாட்டின் நிலையை மேம்படுத்தும் என கருதினர். இதன் காரணமாக அரசு உயர்கல்விக்காக பல பல்கலைக்கழகங்களை நிறுவினர்.
மேலும் இதற்கான நிதியானது சர்வதேச தரத்தில் காணப்பட்டது. எவ்வாறயினும் அரசாங்கத்தினால் பல்கலைக்கழகங்களின் வளங்கள் பின் தங்கியே காணப்பட்டது. இதற்கிடையில் தனியார் நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடலாயினர்.
ஒரு பல்கலைக்கழகமானது யுஜிசி நிர்னயித்த அளவுகளை பூர்த்தி செய்து நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற நிலையினைப் பெற்றது. இது அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட நிறுவனமாக இல்லாவிட்டாலும் யுஜிசியிற்கு இணங்க சிறந்த கல்வியை இந்தியாவில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவம்
நிகர்நிலை பல்கலைக்கழகமானது சிறந்த கல்வியினை வழங்கி மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழியமைக்கின்றது. உயர்கல்வி துறையில் மதிப்புமிக்க, அங்கீகாரமிக்க மாணவர்களுக்கு அறிவு மற்றும் பட்டங்களை வழங்குகின்றது.
கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வதோடு நம்பகத்தன்மையை வாய்ந்ததொரு நிறுவனமாகவும் இது காணப்படுகின்றது.
கல்வி, நிர்வாகம் மற்றும் நிதி சார்ந்த விடயங்களில் உயர்மட்ட சுயாட்சி நிறுவனமாகவும் திறமையாகவும், திறம்பட கல்வி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள துணை புரிகின்றது. சிறந்த இலக்குகளை அடைய நிகர்நிலை பல்கலைக்கழகமானது துணை புரிகின்றது.
நிகர்நிலை பல்கலைக்கழகம் எதிர்நோக்கும் சவால்கள்
நிகர்நிலை பல்கலைக்கழகத்தினை சிறந்த முறையில் தாபித்து கல்வி ரீதியான செயற்படுகளை மேற்கொள்வதற்கு அதிகமான செலவுகள் காணப்படுவது இந்த நிறுவனம் எதிர்நோக்குகின்ற சவாலாகும்.
நிகர்நிலை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற பட்டமானது இந்தியாவிற்கு வெளியே அங்கீகரிக்கப்படாத நிலை காணப்படுகின்றமையினை சவாலாக கருதலாம். இதனுடாக பல்வேறு மாணவர்கள் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் கற்றலில் ஈடுபடுவதற்கு ஆர்வமில்லாது காணப்படுகின்றனர்.
நிகர்நிலை பல்கலைக்கழகமானது சிறந்த எதிர்காலத்தன்மையுடைய ஓர் பல்கலைக்கழகமாக காணப்பட்ட போதிலும் அவை சில நேரங்களில் சுயாதீனமான முடிவுகளையும், நியாமற்ற முடிவுகளையும் எடுக்கின்றது. மேலும் பல நடுத்தர குடும்பங்களை சோர்ந்தவர்களால் எதிர்பார்க்க முடியாத அளவு அதிக கட்டணத்திணையும் வசூலிக்கின்றது.
மேற்குறிப்பிட்ட வகையில் குறைபாடுகள் காணப்படினும் இன்று இந்தியாவில் வேலூர் தொழிநுட்ப பல்கலைக்கழகம், பிர்லா தொழிநுட்ப அறிவியல் கழகம் என பல்வேறு தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இயங்கிக் கொண்டேதான் வருகின்றது.
மேலும் இந்த பல்கலைக்கழகங்களானவை தனித்து இயங்கக் கூடியதாகவும் ஒரு சிறந்த கல்வி முறைமைக்கும் வழியமைத்து தருகின்றது.
Read More: இலக்கியம் என்றால் என்ன