இந்த பதிவில் “நான் ஒரு தலைவரானால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம்.
எளியவர்களும் கடுமையாக முயற்சி செய்தால் நாட்டின் தலைவராக வரமுடியும் என்பதனை நான் தெரிந்து கொண்டேன்.
Table of Contents
நான் ஒரு தலைவரானால் கட்டுரை
ஒவ்வொருவரிற்கும் எதிர்காலத்தில் தாம் அடைவதற்கென பல்வேறு கனவுகளைக் கொண்டு வாழ்வர். அக்கனவுகள் அவர்களின் தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும்.
அவ்வாறே எதிர்காலத்தில் ஒரு தலைவராக வரவேண்டும் என்பதே எனது கனவாகும். எனக்குள் இக்கனவு வருவதற்கு காரணமாக இருந்தவர் டாக்ரர் அப்துல்கலாம் ஆவார்.
அவர் சிறுவயதில் அனுபவித்த கடினமான வாழ்க்கையையும், தனது சவால்களிற்கெல்லாம் வெற்றிகரமாக முகங்கொடுத்து அவர் எவ்வாறு இந்திய நாட்டின் குடியரசு தலைவர் ஆனார் என்பதனையும் தெரிந்து கொண்டபோது,
நானும் அவரைப்போல ஒரு தலைவராக வரவேண்டும் என உறுதிபூண்டேன். ஒரு மனிதர் சிறந்த தலைவராக வரவேண்டுமெனின் அவர் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, சிறந்த தலைமைத்துவம் போன்ற பண்புகளைக் கொண்டு காணப்பட வேண்டும்.
நான் ஒரு தலைவரனால் மேற்கூறிய பண்புகளை ஒருங்கிணைத்து சிறந்த தலைவராக விளங்குவேன். நாட்டிற்கும் நாட்டிலுள்ள மக்களிற்கும் தேவையான விடயங்களை தெரிந்துகொண்டு அதற்கேற்றாற் போல் தூரநோக்குடன் செயற்படுவேன்.
நாட்டில் வறுமையில் வாடுவோர்களிற்காக சமூக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவேன். ஏழை எளிய மாணவர்களிற்கு என்னால் இயன்ற சேவைகளை வழங்குவேன்.
சிறந்த இலவச கல்வி மற்றும் நல்ல சத்துள்ள உணவை அவர்களிற்கு வழங்குவேன். குறுகிய நோக்கில் சிந்திக்கின்ற மாணவ சமுதாயத்தை உருவாக்காமல், அவர்கள் பரந்த வகையில் சிந்திக்கும் ஆற்றலை உருவாக்கப்பாடுபடுவேன்.
வானியல், விண்வெளி, இயற்கை விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபாட்டுடன் கல்வி கற்க மாணவர்களிற்கு தேவையான ஊக்குவிப்புக்களை வழங்குவேன்.
நான் ஒரு தலைவரனால் சிறப்பானதொரு மாணவ சமுதாயத்தை உருவாக்க வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
நான் ஒரு தலைவரானால் கட்டுரை
உலகின் தலைசிறந்த தலைவர்களுள் டாக்டர் அப்துல்கலாம், ஆப்ரகாம் லிங்கன், மாட்டீன் லூதர் போன்றோரை குறிப்பிடலாம். ஒரு நாள் எனது தந்தை அமெரிக்க முன்னாள் ஐனாதிபதியான பராக் ஒபாமாவின் வாழ்க்கையை எனக்கு கதையாகக் கூறினார்.
எளியவர்களும் கடுமையாக முயற்சி செய்தால் நாட்டின் தலைவராக வரமுடியும் என்பதனை நான் தெரிந்து கொண்டேன். அன்றிலிருந்து நாட்டின் சிறந்ததொரு தலைவராக வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவாகியது.
நான் ஒரு தலைவரனால் நாட்டிற்கும் நாட்டு மக்களிற்கும் நன்மைகள் செய்யும் சிறந்த தலைவராக விளங்குவேன். மக்களிடையே பாராபட்சம் காட்டாமல் எளியவர்களையும், பணக்காரர்களையும் சமமாக நடத்துவேன்.
ஏழை மக்களும் விரும்பும் தலைவனாக அவர்களிற்கு வேண்டிய உதவிகளை செய்து தருவேன். மக்களிற்கு உணவினைத்தருவதில் விவசாயத்தின் பங்கு அளவிட முடியாதது. ஆகவே விவசாயிகளிற்கும், வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவோரிற்கும் முன்னுரிமை வழங்குவேன்.
நான் ஒரு தலைவரானால் அனைத்து திட்டங்களிலும் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து அனைவருக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை மட்டுமே உருவாக்குவேன். தூரநோக்குடன் செயற்பட்டு, இயற்கையை பாதுகாப்பதோடு, காடுகளையும் ஏனைய இயற்கை வளங்களையும் அழிப்போரிற்கு எதிராக கடுமையான சட்டக்கட்டுப்பாடுகளை உருவாக்குவேன்.
நான் ஒரு தலைவரானால் நகரங்களை மட்டும் அபிவிருத்தி செய்யாமல் கிராமங்களையும் கட்யெழுப்புவேன். கிராமங்களிற்கு தேவையான மின்சாரம், போக்குவரத்து, நீர்வழங்கல் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற கட்டுமானங்களை வழங்குவேன்.
அதுமட்டுமின்றி கிராமங்கள் தோறும் காணப்படுகின்ற பாடசாலை மாணவர்களது கல்வி வளர்ச்சியை மதிப்பீடு செய்ய குழுக்களை அமைப்பேன். நான் ஒரு தலைவரானால் இந்தியத் திருநாட்டை சமாதனமும் ஒற்றுமையும் நிறைந்த மகிழ்ச்சியான நாடாக உருவாக்குவேன்.
You May Also Like : |
---|
எனது பாடசாலை அழகானது கட்டுரை |
அப்துல் கலாம் சாதனைகள் கட்டுரை |