நாதம் என்றால் என்ன

naatham in tamil

இசையோடு தொடர்புபட்டதொன்றாகவே நாதமானது காணப்படுவதோடு இசைக்கு இனிமையை அள்ளித்தருவதாகவும் நாதமானது காணப்படுகின்றது.

நாதம் என்றால் என்ன

நாதம் என்பது செவிக்கு இனிமை தரும் ஒலியே ஆகும். இசைக்கு மிக முக்கியமானதொன்றாகவும் இசைக்கு இனிமை தரும் த்வனி, நாதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

நாதத்திலிருந்தே சுருதிகளும் சுருதிகளில் இருந்து ஸ்வரங்களும் ஸ்வரங்களிருந்து இராகங்களும் உற்பத்தியாகின்றன.

நாதத்தின் வகைகள்

நாதமானது இரு வகையாக காணப்படுகின்றது. அதாவது ஆகத நாதம் மற்றும் அனாகத நாதம் போன்றனவாகும்.

#1. ஆகத நாதம்

ஆகத நாதம் என்பது மனித முயற்சியால் உற்பத்தி செய்யப்படும் நாதமே ஆகத நாதமாகும். அதாவது நாம் கேட்கும் சங்கீதம், பாடும் சங்கீதம் வாத்தியங்களில் வாசிக்கப்படும் சங்கீதம் போன்றவை ஆகத நாதத்தை சேர்ந்தவையாகும். ஆகத நாதமானது 03 வகையாக காணப்படுகின்றது.

ப்ராணி சம்பவநாதம்

இந்த ப்ராணி சம்பவநாதம் என்பது உயிருள்ள தேகத்திலிருந்து உற்பத்தியாகும் நாதமாகும். உதாரணம் வாய்ப்பாட்டு ஆகும்.

அப்ராணி சம்பவநாதம்

இது வஸ்துக்களாகிய வீணை போன்ற தந்தி வாத்தியங்களினின்று உற்பத்தியாகும் நாதமாகும்.

உபய சம்பவநாதம்

உபய சம்பவநாதம் என்பது உயிருள்ள பிரணிகளின் ஸஹாயத்தை கொண்டு மூங்கிலை போன்ற வஸ்துக்களில் உற்பத்தியாக்கப்படும் நாதமாகும். உதாரணமாக கட்டைகளை கொண்டு செய்யப்பட்ட குழல், நாதஸ்வரம் போன்ற கருவியில் இருந்து உண்டாக்கப்படும் நாதமாகும்.

#2. அனாகத நாதம்

அனாகத நாதம் என்பது மனிதனின் முயற்சி இல்லாமல் இயற்கையிலேயே கேட்கப்படும் நாதமாகும். இந்த அனாகத நாதமானது சித்தர்களால் மட்டுமே அறியக் கூடியதாகும். தியாகராஜ சுவாமிகள் ஒரு சிறந்த நாத யோகியாக காணப்படுகிறார். அனாகத நாதத்தை இவர் உணர்ந்து தனது அனுபவங்களை ஸ்வர ராக ஸுதாரஸ போன்ற கிருதிகளில் வெளியிட்டிருக்கிறார்.

நாதமும் சுருதியும்

இசையை தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலியே சுருதி ஆகும். இது நாதத்திலிருந்து உற்பத்தியாகின்றது. சங்கீதத்திற்கு பிரதானமான ஒன்றாகவே சுருதி காணப்படுகின்றது.

சுருதியானது இரண்டு வகைகளாக காணப்படுகின்றது.

பஞ்சம சுருதி

பஞ்சம சுருதியானது மத்திமத்தாயி சட்சத்தை ஆதாரமாக கொண்டு பாடப்படுவது பஞ்சம சுருதி எனப்படும். அதாவது சபசு எனப்படுவதாகும்.

மத்திம சுருதி

மத்திமத்தாயி மத்திமத்தை ஆதாரமாக கொண்டு பாடப்படுவதாகும். இதுவே மத்திம சுருதி எனப்படும். இது சமசு என பாடப்படுவதாகும். சாதாரண உருப்படிகள் யாவும் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிசாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்கள் மத்திம சுருதியிலேயே பாடப்படுகின்றன.

மேலும் அனேகமான நாட்டார் பாடல்கள் மத்திம சுருதியிலேயே பாடப்படுகின்றது. நாதமும் சுருதியும் ஒன்றோடொன்று தெடர்புபட்டதாகவே காணப்படுகின்றன எனலாம்.

நாதத்தின் முக்கியத்துவம்

நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. அதாவது காதிற்கு இனிமையை தர கூடியதொன்றாக நாதமானது காணப்படுகின்றது. இசையில் மிக முக்கியமானதொன்றாகவே நாதமானது காணப்படுகின்றது அதாவது தந்தி வாத்தியங்களிலிருந்து உற்பத்தியாக கூடியதாகவே காணப்படுகின்றது.

நாதத்தின் மூலமாக இனிமையான இசையினை அறிந்து கொள்வதற்கு இதுவே துணைபுரிகின்றது. நாதம் இல்லையெனில் சுருதி இல்லை என்றளவிற்கு நாதத்திலிருந்தே சுருதியானது உண்டாகின்றது.

இதன் மூலமாகவே இன்று ஒரு பாடலானது இயற்றப்படுகின்றது. ஒரு பாடல் சிறப்புற அமைவதற்கு இசையே மிக முக்கியமானதொன்றாக திகழ்கின்றது. எனவேதான் ஓர் இசை சிறப்புற அமைவதற்கு நாதமே மிக முக்கியமானதொன்றாகும்.

Read More: தென்னை மரத்தின் பயன்கள்

சமூக நீதி என்றால் என்ன