நடனம் வேறு பெயர்கள்

நடனம் வேறு சொல்

முக்கலைகளான இயல், இசை, நாடகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும்  ஒரு கலையை நடனக்கலையாகும். நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம் ஆகும்.

நடனம் ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடிவமாகவோ, சமூகத் தொடர்பாடலாகவோ இருக்கலாம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும்.

மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும் நடனங்களைக் கருதுவது உண்டு. இவ்வாறான நடனம் என்ற சொல்லுக்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

நடனம் வேறு பெயர்கள்

  1. நாட்டியம்
  2. கூத்து
  3. சதிர்
  4. ஆட்டம்
  5. ஆடல்
  6. தாண்டவம்

நடனத்தை தொழிலாக மேற்கொள்பவர்

நடனம் ஆடுபவர் கலைஞன் எனவும் நடனத்தை கற்றுத்தருபவர் நடன ஆசிரியர் எனவும் கூறப்படுகின்றனர். இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவையில் நடனக் காட்சிகள் திரைப்படப் பாடல்களுடன் ஆடப்படுவது வழக்கமாகும்.

நடனத்தின் வகைகள்

  • பரத நாட்டியம்-தமிழ்நாடு
  • கதகளி-கேரளம் (ஆண்களுக்கானது)
  • குச்சிப்புடி-ஆந்திர பிரதேசம்
  • மோகினி ஆட்டம்-கேரளம் (பெண்களுக்கானது)
  • ஒடிசி- ஒடிசா
  • மணிப்புரி-மணிப்பூர்
  • கதக்-வட இந்திய மாநிலங்கள்
  • சத்ரியா-அசாம்

நடனம் பற்றி உரைக்கும் சான்றாதாரங்கள்

தமிழ் மொழியில் நடன வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் அடிப்படைச் சான்றாதாரங்கள் பின்வருமாறு:

  • அகழ்வாராய்ச்சிகள
  • இலக்கண நூல்கள்
  • இலக்கியங்கள்
  • கோயில்கள்
  • கல்வெட்டுகள்
  •  நடன ஆசிரியர் வரலாறுகள்

Read more: தமிழ்நாட்டின் பெருமைகள் கட்டுரை

கணினியின் பயன்கள்