தைராய்டு அறிகுறிகள் – Thyroid Symptoms

Thyroid Symptoms In Tamil

தைராய்டு நோய் வகைகள் மற்றும் தைராய்டு அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

பொதுவாக அயோடின் குறைபாட்டால் ஏற்படும் தைராய்டு நோயினால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கபடுகிறார்கள்.

அயோடின் குறைபாட்டாலே பொதுவாக தைராய்டு வருகின்றது. இருந்தாலும் வேறு சில காரணிகளும் இந்த நோய்க்கு சிறு காரணியாக இருக்கிறது என்னெவென்று பார்க்கலாம்.

  • அதிக மன அழுத்தம்.
  • ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்.
  • உடல் பயிற்சி இன்மை.
  • மரபு ரீதியான காரணங்கள்.

தைராய்டு இரண்டு வகைகள் உண்டு.

  1. Hypothyroidism
  2. Hyperthyroidism

Hypothyroidism தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் கார்மோனின் அளவு குறைவாக சுரப்பதால் இந்த வகை Hypothyroidism நோய் ஏற்படுகின்றது.

Hyperthyroidism தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் கார்மோனின் அளவு அதிகமாக சுரப்பதால் இந்த வகை Hyperthyroidism நோய் ஏற்படுகின்றது.

Hypothyroidism அறிகுறிகள்

அதிக உடல் எடை. எவ்வளவு தான் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் உடல் எடையை குறைப்பது மிக கடினமாக இருக்கும்.

இதய துடிப்பு குறைவாக இருப்பது. சாதாரணமாக இதயம் துடிக்கும் எண்ணிக்கையை விட குறைவாகவே இதயதுடிப்பு இருக்கும்.

அதிக உடல் சோர்வு. எந்த வேலையும் செய்வதற்கு மனமின்மை. எப்போதும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

முறையற்ற மாதவிடாய் பிரச்சனை.

வழக்கத்துக்கு மாறான அதிக முடி உதிர்வு பிரச்சனை.

மலச்சிக்கல் மற்றும் மலம் கட்டியாக இறுக்கி வெளியாகுதல்.

வறண்ட சருமம் மற்றும் அதிக குளிர் உணர்வு.

அதிக ஞாபக மறதி.

Hyperthyroidism தைராய்டு அறிகுறிகள்

உடல் எடை மெலிந்து காணப்படுதல். அதிக பசி உணர்வு இருக்கும் ஆனால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.

இதய துடிப்பு அதிகமாக இருப்பது. சாதாரணமாக இதயம் துடிக்கும் எண்ணிக்கையை விட அதிகமாக இதயதுடிப்பு இருக்கும்.

பயம், பதட்டம், கை கால் நடுக்கம் போன்ற பிரச்சனைகள் மற்றும் அதிக கோப உணர்வு.

குறிப்பிட்ட தினத்தில் மாதவிடாய் வராமல் நாட்கள் தள்ளிப்போதல் அல்லது முந்துதல் போன்ற மாதவிடாய் கோளாறுகள்.

அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழித்தல்.

சரியான தூக்கம் வராமை, செரிமான பிரச்சனை மற்றும் உடல் வெப்பம் அதிகமாக இருத்தல்.

உடல் சூட்டை குறைக்க வழிகள்