தூக்கம் வர எளிய வழிகள்

ஆரோக்கியமான தூக்கம் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. தூக்கம் வர எளிய வழிகள் சிலவற்றை பார்க்கலாம்.

மனிதனின் அன்றாட வாழ்வில் மிகவும் இன்றியமையாதது தூக்கம். உணவு இல்லமல் கூட ஒரு சில நாட்கள் உயிர் வாழலாம் ஆனால் தூக்கம் இல்லமால் உயிர் வாழ்வது கடினமான ஒன்று.

ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தூங்கி எழுந்தால் மட்டுமே உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமும் 6 தொடக்கம் 8 மணிநேர தூக்கம் அனைவருக்கும் அவசியம். 10 மணிக்கு முதல் வெளிச்சம் இல்லாமல் இருட்டில் தூங்குவது சிறந்தது.

தூக்கத்தின் நன்மைகள்

ஆழ் நிலை தூக்கத்தில் தான் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்கின்றது.

நாம் தூங்கும் போது தான் மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்கின்றது. நல்ல தூக்கம் மூளை நன்றாக தொழிற்பட உதவுகின்றது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலைகள் தூக்கத்தில் தான் நடக்கின்றது.

இருட்டில் சரியான நேரத்துக்கு தூங்கும் போது மெலோடினின் என்ற சுரப்பி சுரக்கின்றது. மெலோடினின் என்ற சுரப்பி சுரப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

  • உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
  • இளமைத் தோற்றத்தை பாதுகாக்கிறது.
  • இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • உடல் வளர்சிக்கு தேவையான கோர்மோன்கள் சுரப்பதற்கு மெலோடினின் உதவுகின்றது.

மெலோடின் சுரப்பி சுரப்பது தடைப்படும் காரணிகள்.

  • வெளிச்சத்தில் உறங்குவது.
  • புகைபிடிக்கும் பழக்கம்.
  • அதிக மன அழுத்தம்.
  • சூரிய ஒளி உடலுக்கு படாமல் இருத்தல்.

உடல் ஆரோக்கியத்திற்கு மெலோடினின் மிகவும் முக்கியமானது. மெலடோனின் அளவு உடலில் குறையும் போது பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் உடலில் ஏற்படும்.

இரவு தூக்கம் இன்மையால் ஏற்படும் பிரச்சனைகள்

சரியான அளவு தூக்கமின்மை. மற்றும் சரியான நேரத்திற்கு தூங்கவில்லை என்றால் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல பாதிப்புக்கள் ஏற்படும்.

  • நரம்புத் தளர்ச்சி.
  • ஆண்மை குறைபாடு.
  • பெண்களுக்கு கருச்சிதைவு.
  • கரு உருவாவதில் தாமதம் ஏற்படுதல்.
  • உடல் உஷ்ணமாதல்.
  • மலச்சிக்கல் ஏற்படுதல்.
  • கண் எரிச்சல்.
  • தலை வலி, தலை சுற்று, தலை இடி.
  • ஞாபக மறதி.
  • சோம்பல்.
  • உடல் வலி.
  • பசியின்மை மற்றும் சாப்பிட இயலாமை.
  • வயிற்றுப்பொருமல் மற்றும் வாந்தி.

ஒரு மனிதன் 10 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கவில்லை என்றால் ஒன்று இறப்பு ஏற்படும் இல்லையென்றால் மனநிலை பாதிப்பு ஏற்படும்.

சரியான தூக்கம் வராமைக்கான காரணங்கள்

  • அதிக மன அழுத்தம்.
  • அதிக வேலைப் பளு.
  • தவறான வேலைப்பளு.
  • போதைப்பழக்கம்.

நன்றாக தூக்கம் வர உணவுகள்

பால்

இரவு உணவுக்கு பின் இளஞ்சூடானபாலில் சிறிது ஏலக்காய் கலந்து குடித்து வர இரவில் நல்ல தூக்கம் வரும். அதே போல பாலில் சிறிது மிளகு மற்றும் மஞ்சள் கலந்து குடித்து வர நன்கு தூக்கம் வரும்.

பாதம்

நட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாமை இரவில் சாப்பிட்டு தூங்கினால் நல்ல தூக்கம் வரும்.

அது மட்டுமில்லாமல் சிலருக்கு இரவில் பசி எடுக்கும் அவர்கள் சாப்பிட்ட பின் சிறிது பாதம் சாப்பிட்டு தூங்கினால் இரவு உறக்கத்தில் பசி எடுக்காது இதனால் எந்தவித தொந்தரவும் இன்றி உறங்கலாம்.

பச்சைக் காய்கறிகள்

இரவு உணவுகளில் பச்சைக் காய்கறிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளில் நல்ல ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

பழங்கள்

பழங்களில் வாழைப்பழம், செரி பழம் மற்றும் கிவி போன்ற பழங்கள் நல்ல தூக்கத்தை தரக்கூடியது. இரவு உணவுகளில் இவற்றை சேர்த்துக் கொள்ளுவது சிறந்தது.

நன்றாக தூக்கம் வர சில எளிய வழிகள்

  • இரவு தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை சாப்பிட்ட வேண்டும்.
  • சாப்பிட்டு சிறிது நேரம் நடைப் பயிற்சி செய்வது சிறந்த தூக்கத்தை தரும்.
  • இளம் சுடு தண்ணீரில் குளித்து விட்டு தூங்கச் செல்வது.
  • தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது. 10 மணிக்கு முன்னதாக தூங்குதல் சிறந்தது.
  • அதிகமாக தண்ணீர் அருந்தாதீர்கள் இது தூக்கத்தில் சிறுநீர் கழிக்க எழுப்ப நேரிடும்.

நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி