திருமண் என்றால் என்ன

வைணவர்களின் சமயநெறிகளில் மிகவும் சிறப்பாகவும், முக்கியமானதாகவும் பார்க்கப்படுவது திருமண் அணிதலாகும். திருநாமம், திருமண், காப்புத்தரித்தல் என வைணவர்கள் அழைக்கின்றனர். அதுமட்டுமின்றி திருமண்ணை “ஸ்ரீ சூரணம்” என்றும் அழைக்கின்றனர். இது மகாலட்சுமி அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.

இது நம் உடல் ஒருநாள் மண்ணோடு மண்ணாகிப் போகும் என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் விதமாக அணியப்படுகின்றது.

திருமாலின் உடைய 12 பெயர்களான கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமேதர போன்ற பெயர்களைக் குறிக்கும் பொருட்டு நம் உடலில் பன்னிரண்டு இடங்களில் (நெற்றி, நடுவயிறு, நடுமார்பு, நடுக்கழுத்து, வலது மார்பு, வலது கை, வலது தோள், இடது மார்பு, இடது கை, இடது தோள், பின்புறம் அடி முதுகு, பின்புறம் பிடரி) இட்டுக் கொள்ளப்படுகின்றது.

இந்தத் திருநாமம் இட்டுக் கொள்வதில் இரண்டு போக முறைகள் உள்ளன. அவையாவன,

தென்கலைத் திருமண் – தென்கலைத் திருமண் என்பது திருமாலின் பாதம் வைத்து போடப்படுவது ஆகும்.

வடகலைத் திருமணம் – வடகலைத் திருமண் என்பது பாதம் இல்லாமல் வளைவாக போடப்படுவது. நெற்றியில் நேர்கோடு போடுவது போல் அமையப்பெறும்.

அறிவியலின்படி நெற்றியில் தான் நாடிகளின் சங்கமம் உள்ளது. ஆக்யா சக்கரம் எனப்படும் புருவமத்தியிலிருந்து தலையின் உச்சி வரை இடை, பிங்கலை, சுஷும்னா எனப்படும் மூன்று நாடிகள் சங்கமிக்கின்றன. திருமண் என்னும் நாமம் தரிப்பதால் மூன்று நாடிகளில் குளிர்ச்சி மற்றும் சுத்தம் ஏற்படுகின்றது.

இது உடலினுடைய ஆரோக்கியத்திற்கும், ஆயுள் வளர்ச்சிக்கும் முக்கியம் என நாடி சாஸ்திரம் கூறுகின்றது. இதனால் தான் கூறுவர் “நீறில்லா நெற்றி பாழ்” என்று.

நாராயணன் ஒருவரே பரம புருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவரது தேவிமார்கள் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆதார கருத்து ஆகும்.

திருமண் என்றால் என்ன

இயற்கையாகவே கிடைக்கக்கூடிய ஒரு மண் வகை சார்ந்த சுண்ணாம்பு பாறை போல் அமைந்திருக்கும் மண் வகை ஆகும். அந்தத் திருமண் புனிதமான தளங்களில் விளையக்கூடியது. இதனை எடுத்துக் கொண்டு வந்து அதனைத் திருமண்ணாகத் தயார் செய்து கொள்வர்.

திருமண்ணின் சிறப்புக்கள்

எம்பெருமானுடைய திருப்பாதங்களின் அடையாளமாக நாம் நெத்தியிலே இட்டுக் கொள்ளக் கூடியதாகும். உடலின் பாகங்களில் நாம் இட்டுக் கொள்வதன் மூலம் எம்பெருமானின் பாதங்களில் நாம் சுமந்து கொள்கின்றோம்.

தண்ணீரில் குழைத்து அதனை நெற்றியில் இட்டுக் கொள்ளும் ஸ்ரீ சூரணம் என்னும் பொருளினைத் தாயாரின் அடையாளமாகவும், திருமண் சுவாமியின் அடையாளமாகவும் இட்டுக் கொள்கின்றோம். உவர்மண் நம் உடலில் உள்ள அழுக்கை போக்குவது போல், நம் உள்ளத்தில் உள்ள அழுக்கை திருமணம் தூய்மையாக்குகின்றது.

முற்காலத்தில் குழந்தைகள் விழுந்தாலோ அல்லது அடிபட்டு விட்டாலோ அதன் மூலம் வீக்கம் ஏற்படும். அவ்வாறு வீக்கம் ஏற்படும் போது அந்த இடத்தில் நாமக் கட்டியை உரசி வீங்கிய இடத்தில் தடவி விடுவர். நாமக்கட்டியில் சுண்ணாம்புத் தன்மை அதிகமாக இருப்பதால் தேவையற்ற நீர் சேர்ந்திருக்கும் இடங்களில் பூசும் போது அந்த நீரை இழுத்து வீக்கத்தை சரி செய்து விடும்.

Read More: பாவங்கள் போக்கும் நதி

சித்ரா பௌர்ணமி என்றால் என்ன