திருட்டு என்பது தனக்கு சொந்தமில்லாத பொருள் ஒன்றை உரிமையாளரின் அனுமதி இன்றி உரிமையாளருக்கு தெரியாமல் எடுக்கும் செயலே திருட்டு எனப்படும். திருட்டு எனும் செயலை மேற்கொள்பவர் திருடர் ஆவார்.
திருடர்கள் திருட்டைச் செய்வதற்கு பல காரணங்கள் உண்டு. தன்னிடம் இல்லாத பொருள் ஒன்றை தனக்கு இலகு வழியில் சொந்தமாக்கிக் கொள்வதற்காகவே திருட்டை மேற்கொள்கின்றனர்.
இவ்வுலகில் பலவகையான திருட்டுக்கள் மேற்கொள்ளப்படுகின்றன திருட்டை செய்பவர் நேரடியாக குற்றவாளியாக சொல்லப்பட்டாலும் அவரின் சூழ்நிலையை பொறுத்து அவர் நிரபதாரியாகவும் காணப்படுவார்.
பொதுவாக ஒருவரின் வாழ்க்கைச் சூழல் ஒருவரை திருடராக மாற்றி இருக்கலாம்.
திருட்டு என்பது மானிடக் கண்ணோட்டத்தில் பார்க்கின் குற்றச் செயலாகவே கருதப்படுகின்றது. அவ்வாறான திருட்டுக்கு வேறு பெயர்கள் பல கூறப்படுகின்றன.
திருட்டு வேறு சொல்
- அணாப்பு
- களவு
- கொள்ளை
- சூறை
திருட்டு வகைகள் சில
- பொருள் திருட்டு
- கருத்து திருட்டு
- கதை திருட்டு
- அரசியல் திருட்டு
- உடமை திருட்டு
இவ்வாறான பல திருட்டுக்கள் காணப்படுகின்றன.
Read more: சித்திரை மாத சிறப்புகள்