உலகில் வாழும் ஒவ்வொருவரும் தவறு என்ற ஒன்றை செய்யாமல் இருப்பதில்லை. எவரும் இங்கு தவறு செய்யாத ஞானி கிடையாது தவறு என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
மனிதன் தற்செயலாக தீய வாய்ப்பு ஏற்படக்கூடிய ஒன்றை செய்து விடுகின்றான். அவ்வாறான செயல்கள் தவறு என கணிக்கப்படுகின்றன.
தவறு என்ற சொல்லின் பொருளை நோக்கும் போது தவறு என்பது எதிர்பாராமல் இடம்பெறும் விடயம் எனலாம்.
அதாவது மனிதன் அறிந்தும் அறியாமலும் செய்கின்ற பிழை தவறு எனப்படும். உதாரணமாக ஒருவன் தன் கையில் உள்ள பொருளை தவறி கீழே போட்டு விட்டான் என்பதை கூறலாம்.
சிலர் தவறு என்று அறிந்து பல தவறுகளை செய்கின்றனர். எனவே, மானிடராகிய நாம் அறிந்தும் அறியாமலும் தவறு செய்யாமல் வாழ்வில் வாழ முயற்சி செய்ய வேண்டும் என்பது ஆண்டோர் வாக்கு.
தமிழில் தவறு என்ற சொல்லுக்கு பல வேறு பெயர்கள் உள்ளன.
Table of Contents
தவறு வேறு பெயர்கள்
- பிழை
- பிசகு
- குற்றம்
- குறை
- கோளாறு
- பிழக்கு
தவறு பற்றிய பொன்மொழிகள்
- எந்த மனிதனும் தவறு செய்யக்கூடும்; ஆனால், முட்டாளை, தவிர வேறு எவனும் அதைத் தொடர்ந்து செய்ய மாட்டான்.
- எந்த மனிதனும் பல தவறுகளையும். பெரிய தவறுகளையும் செய்யாமல் பெருமையுடையவனாகவோ, நல்லவனாகவே ஆனதில்லை.
- குற்றமே செய்யாமல் இருப்பவர்கள் இறந்து போனவர்களே.
- விஞ்ஞானம் முழுவதிலும் தவறுதான் உண்மைக்கு முன்னால் செல்லும். உண்மைக்குப் பின்னால் கடைசியாக நிற்காமல், அது முன்னால் போவதே நலம்.
- கீழே விழாமல் இருத்தல் நமக்குப் பெரிய பெருமையன்று ஆனால், விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருத்தலே பெருமை.
- தெரியாமல் செய்த பிழைக்கு நாம் அனுதாபம் காட்ட வேண்டும். ஏளனம் செய்யக்கூடாது.
இவ்வாறான பல மேற்கோள்கள் தவறைப் பற்றி எடுத்து காட்டப்பட்டுள்ளன. எனவே தவறு என்பதை செய்யாமல் செய்த தவறை திருத்திக் கொண்டு தன்மையுடன் வாழ வேண்டும்.
தவறு செய்யும் சந்தர்ப்பங்கள்
- தன்னலமாக செயற்படும் போது தவறுகள் ஏற்படும்.
- மனது குழப்பத்தில் இருக்கும் பொழுது பல தவறுகள் செய்யப்படும்.
- அதிக கோபம் வரும் சந்தர்ப்பங்களில் தவறிழைக்க நேரிடும்.
- கவன குறைபாடு காரணமாக பல தவறுகள் ஏற்படலாம்.
இவை மட்டுமல்ல இவ்வாறான பல செயல்களினால் தவறுகள் ஏற்படுகின்றன.
தவறு செய்வதனால் ஏற்படும் விளைவுகள்
- தவறு இழைப்பதால் சமூகத்தில் உள்ள நல்ல பெயர் அழிந்து போகக்கூடும்.
- சில தவறுகள் செய்யும் பொழுது தண்டனைகளும் கிடைக்க நேரிடும்.
- சிறு தவறுகளின் மூலம் செல்வத்தை கூட இழக்க நேரிடும்.
- மேலும் சில தவறுகளின் மூலம் உறவுகளையும் இழந்து விடிக்கூடும்.
- மேலும் தவறுகள் செய்வதனால் எதிர்பாராத விதமாக உயிரைக் கூட இழக்க நேரிடலாம்.
இவ்வாறு பல விளைவுகள் தவறுகள் செய்வதனால் ஏற்படுகின்றன. எனவே, தவறு என்பது தவிர்க்கப்பட வேண்டியது முடிந்தவரை அதனைத் தவிர்ப்போம்.
Read more: ரிஷப ராசி குணங்கள்