எல்லோரும் தமது வாழ்க்கையை ஏதோ ஒரு இலக்கை நோக்கிய வண்ணம் செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் குடும்பம், கல்வி, வேலை என தமது வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றனர்.
சிலருக்கு கவலைகள், துன்பங்கள் ஏற்படும் வேளைகளில் எல்லாம் நம் மீதான நம்பிக்கையை தளர விடுகின்றனர். அத்தகையவர்களுக்காக தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கான வழிகள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி
நம்மை பார்ப்பவர்களுக்கு நாம் தனித்துவமாக அடையாளப்படுத்தி தெரிய வேண்டும். எனவே நம்முடைய ஆடைகள், அணிகலன்கள், நகைகள் போன்றவற்றை சூழ்நிலைக்கு தகுந்தவாறு அணிய வேண்டும். எப்போதும் நம்மை நாம் கவனத்துடன் அக்கறையாக மாற்றுதல் நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
சில நேரங்களில் நம்முள் தோன்றும் எதிர்மறையான எண்ணங்களை தடுக்க வேண்டும். எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க வேண்டும். இது நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கச் செய்கிறது.
துரித உணவுகள் மற்று தினமும் கடைகளில் உணவுகள் உண்பதை இயலுமானவரை தவிர்த்து வீடுகளில் ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளினை உட்கொள்வது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமானது.
எந்தவொரு வேலையும் திட்டமிட்டு செயற்படுதல் நேரத்தை மீதப்படுத்தும். திட்டமிடல் எனும் பழக்கம் வாழ்க்கையில் பல நேரங்களில் நமக்கு நல்லதொரு இடத்தை பெற்றுக் கொடுப்பதோடு நம்முள் காணப்படும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்கிறது.
எப்பொழுதும் ஓய்வு நேரங்களைப் பயனுள்ளதாக மாற்றி அமைக்க வேண்டும். நூலகங்களுக்கு சென்று வாழ்விற்கு நன்மையைத் தரக்கூடிய அரிய பல நற்கருத்துக்களை வாசித்தல் நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.
எப்போதும் வழக்கமாக செயற்படும் விடயங்களில் இருந்து வேறுபட்டு சிறிது வித்தியாசமாக யோசித்து செயற்படுதல் நன்று. இது நம்முடைய கற்பனாசக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் நம்முடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கின்றது.
சில சமயங்களில் எங்களுடன் நாங்கள் பேச வேண்டும். எங்களை நாங்களே சுயமரியாதை செய்து கொள்ள வேண்டும். நம்மை நாமே பரிசீலினை செய்ய வேண்டும். இதனால் நம்மைப் பற்றிப் பிறர் விமர்சிக்கும் விமர்சனங்கள் குறையும். எனவே இவை நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
எந்த செயலைத் தொடங்கினாலும் தொடங்கும் போது இருக்கும் உத்வேகம் அந்த செயலை முடிக்கும் போதும் இருக்க வேண்டும். ஏனெனில் எந்த சூழ்நிலையிலும் முயற்சியை கைவிடக் கூடாது.
நமக்கு பிடித்த விடயங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயற்படுதல் வேண்டும். இதனால் நாம் பலரிடம் பல பாராட்டுக்களைப் பெற்றுக் கொள்வோம். இந்த பாராட்டுக்கள் நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்கின்றன.
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்னும் மற்றவர்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்த வேண்டும். நம்முடைய வாழ்க்கையை நாம் தான் வாழ வேண்டும் என்பதை நாம் எந்த சூழ்நிலையிலும் மறக்க கூடாது. அதே சமயம் நம்முடைய வாழ்க்கையை பிறரிடம் வாழவும் கொடுக்க கூடாது. இவை நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து வழிகளையும் பின்பற்றி நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.
You May Also Like :