ஞானஸ்நானம் என்றால் என்ன

ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவத்தில் நீரைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு சடங்கு முறையாகும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியாக வந்த யோவான் என்பவர் மனம் திரும்பியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

இவர் ஞானஸ்நானம் கொடுத்ததாலேயே யோவான் ஸ்நானகன் என்று அழைக்கப்பட்டார். 30 வயதை அடைந்த போது ஆண்டவராகிய இயேசு யோர்தான் நதியில் யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றார்.

மேலும் திருச்சபை தோன்றிய காலத்தில் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவை விசுவசித்து பின்பற்றியவர்கள் யாவரும் ஞானஸ்நானம் பெற்றனர்.

ஞானஸ்நானம் என்றால் என்ன

ஞானம் வந்த பின்பு தண்ணீரில் மூழ்கி எடுப்பதே ஞானஸ்நானம் ஆகும். இரட்சிக்கப்பட்ட அனைத்து கிறிஸ்தவர்களும் கட்டாயம் எடுக்க வேண்டிய கட்டளையே ஞானஸ்தானம் ஆகும்.

இந்த ஞானஸ்தானம் என்கின்ற வார்த்தையை இரண்டாகப் பிரிக்க முடியும். ஞானம் + ஸ்நானம். ஞானம் என்பது பற்றி தேவ வசனம் அழகாய் சொல்கின்றது.

அதாவது, “கர்த்தருக்கு பயப்படுதலையே ஞானத்தின் ஆரம்பம்”. கர்த்தருக்கு பயப்படுதல் என்பது (நீதிமொழிகள் 3:7) தீமையை விட்டு விடுதலே கர்த்தருக்கு பயப்படுகின்ற பயம்.

ஞானம் என்பது தண்ணீரில் மூழ்குவதாகும். நாம் இந்த உலகத்திற்கு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு நீதிக்குள் உயிர் பிழைத்திருக்கின்றோம். இதுவே தண்ணீருக்குள் மூழ்கி எடுப்பதற்கான அர்த்தமாகும்.

அனேகமான சபைகளில் சிறுபிள்ளைகளாக இருக்கும் போதே தலையை தண்ணீரால் துடைத்து ஞானஸ்நானம் கொடுத்து விடுவார்கள். இது வேதத்தில் சொல்லப்பட்ட ஞானஸ்நானம் அல்ல. ஞானம் வந்த பின்பு தண்ணீரில் மூழ்கி எடுப்பதே வேதத்தில் சொல்லப்பட்ட ஞானஸ்தானம் ஆகும்.

மேலும் ஞானஸ்நானம் என்னும் சொல்லானது பாப்டிஸோ (Baptizo) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும். அதற்கு கழுவுதல், குளிப்பாட்டுதல், நீராடல் என்னும் பல அர்த்தங்கள் உள்ளன.

ஞானஸ்நானம் ஏன் எடுக்க வேண்டும்

1. ஒருவர் ஜலத்தினாலும், ஆவியினாலும். பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான். இந்த ஞானஸ்நானம் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க ஒரு அடையாளமாக ஒரு முத்திரையாக உள்ளது. எனவே ஞானஸ்தானம் என்பதை மிகவும் முக்கியமான ஒரு கட்டளையாகும்.

2. இயேசுவினுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்.

“நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீசராக்கி பிதா, குமாரன், பரிசுத்த ஆவி நாமத்தினாலேயே அவர்களுக்கு ஞானஸ்தானம் கொடுங்கள்” என்று இயேசு (மத்தேயு 28:19 இல்) கூறியுளார்.

3. தேவனோடு உடன்படிக்கை செய்வதற்கு ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்.

“அதற்கு ஒப்பனையான ஞானஸ்தானம் ஆனது மாம்ஸ்ஷ அழுக்கை நீக்குதலாக அல்லாது தேவனை பெற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாகவும் இருக்கின்றது” என்று 1 பேதுரு 3:21 கூறுகின்றது.

4. நம்மை சுத்திகரிக்கவும், பரிசுத்தமாக்கவும்.

5. எல்லா நீதியையும் நிறைவேற்றுவதற்காக

6. பரலோக குடும்பத்தில் சேர்வதற்காக.

7. தேவனுடைய ராஜ்ஜியம் செல்வதற்காக.

ஞானஸ்நானம் எடுக்க தேவையான தகுதிகள்

  • தேவ வார்த்தையை சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • இயேசுவை விசுவாசிக்க வேண்டும்.
  • மனம் திரும்ப வேண்டும்.
  • இயேசுவிற்குச் சீஷ்யனாக இருக்க வேண்டும்.
  • ஓய்வு நாள் ஆசரிப்பு இருக்க வேண்டும்.

Read More: பெரிய வியாழன் என்றால் என்ன

ஊழியம் என்றால் என்ன