ஞானம் என்ற சொல்லானது இலக்கிய ரீதியிலும் சமய ரீதியிலும் பயன்பட்டு வரும் ஒரு சொல்லாகக் காணப்படுகின்றது.
இலக்கிய ரீதியில் பார்க்கும் போது ஞானம் என்பது அறிவு என்று பொருள்படும். இது எல்லோருக்கும் இருக்கக்கூடியது.
சமய ரீதியில் பார்க்கும் போது ஞானம் என்பது அறிவாக காணப்பட்டாலும் அதை எல்லோராலும் பெற முடியாது.
ஆணவத்தை இழந்தவன் ஞானத்தைப் பெறுவான் ஞானம் பெற்றவன் இறைவனை அடைவான் என கூறப்படுகின்றது.
அதனாலேயே ஞானம் என்பது நாற்பாதங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இவ்வாறு சிறப்புடைய ஞானத்திற்கு பல பெயர்கள் காணப்படுகின்றன.
ஞானம் வேறு பெயர்கள்
- விவேகம்
- ஆற்றல்
- அறிவு
- மதி
- புத்தி
- வித்தை
ஞானம் பற்றிய விளக்கங்கள்
ஞானம் என்பது அறிவில் தெளிவு, அறிவையறிந்த தெளிவு.
- விண் ஞானத்தை அறிந்தவர்கள் விஞ்ஞானிகள்.
- மெய்ஞானத்தை அறிந்தவர்கள் மெய்ஞானிகள்.
விஞ்ஞானிகள் நுண்நோக்கி மூலம் ஆராய்ந்து ஆராய்ச்சிகளின் முடிவுகளை அறிவிப்பார்கள்
மெய்ஞானிகள் தியானத்தில் அமர்ந்து பிரபஞ்சம் முழுவதும் விரிந்து அநாதி என்ற பேராற்றலுடன் கலந்து தான் “அவனாகி” அவன் “தானாகி” இயங்கும் இயக்கத்தை உணர்ந்து இறைஞான அத்வைத ஞானங்களை கூறுவார்கள்.
இறைஞானம் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமையும். ஞானம் அடைந்தவர்களிடம் ஞானம் பெற்று வாழ்தல் சிறப்பாகும்.
Read more: வீடு குடி போக உகந்த மாதங்கள்