சோபகிருது என்றால் என்ன

subakiruthu varudam in tamil

ஒவ்வொரு ஆண்டும் பல புதிய விடயங்களை கொண்டமைந்த ஆண்டாகவே அமைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் சோபகிருது ஆண்டும் ஒரு புத்தாண்டாகவே காணப்படுகின்றது. இது அனைவரது வாழ்விலும் மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு தமிழ் புத்தாண்டாகும்.

சோபகிருது என்றால் என்ன

சோபகிருது ஆண்டு என்பது தமிழ் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் 37ம் ஆண்டாகும்.

சோப என்றால் மங்கலத்தினையும் கிருது என்பது நற்செயல், செய்கை எனும் பொருள்களை கொண்டுள்ளது. அதன் காரணமாக மங்கலம் நிறைந்த நற்செயல்கள் நடைபெறக் கூடிய தமிழ் புத்தாண்டே சோபகிருது எனலாம். இந்த ஆண்டை செந்தமிழில் “மங்கலம்” எனவும் கூறலாம்.

சோபகிருது புத்தாண்டின் பூஜை வழிமுறை

இப்புத்தாண்டு நாளில் காலையில் எழுந்து எண்ணெயில் குளித்து புதிய ஆடைகளை அணிந்து பூஜைகளில் ஈடுபடல் வேண்டும். புத்தாண்டு நாளில் விரும்பியவர்கள் விரதத்தினையும் கடைப்பிடிக்க முடியும்.

இப்புத்தாண்டு நாளில் சாமிக்கு பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது கட்டாயமாகும். அதாவது சைவ உணவுகளான வடை, பாயாசம் போன்றவற்றினை சாமிக்கு படைக்க வேண்டும்.

இந்நாளில் தான, தருமங்களை மேற்கொள்வது மிகவும் சிறந்ததாகும். மேலும் மங்கல பொருட்களாகிய குங்குமம், மஞ்சல் போன்ற மங்கலான பொருட்களை தரிசிப்பதும் சிறப்பிற்குரியதாகும்.

இந்நாளில் அருகில் உள்ள கோயிலிற்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல் என்பது சிறப்பிற்குரியதாகும். இதனூடாக அந்நாள் மங்கலகரமான ஓர் சிறப்புமிக்க புத்தாண்டாக சோபகிருது புத்தாண்டு திகழ்கின்றது எனலாம்.

சோபகிருது புத்தாண்டில் வீடு முழுவதையும் சுத்தம் செய்து பூஜை பொருட்களையும் சுத்தம் செய்து பூஜைக்கு ஆயத்தமாகுதல் சிறப்பிற்குரியதாகும். இதனூடாக பூஜையானது சிறந்த முறையில் இடம் பெறும் எனலாம்.

சோபகிருது புத்தாண்டு நாளில் வாசனைப் பொருட்களை வாங்கி வைப்பது சிறப்பிற்குரியதாகும். அதாவது மகாலக்ஷ்மிக்கு விருப்பமான வாசனை திரவியங்களை வாங்கி வைத்தல் சிறப்பானதாகும்.

சோபகிருது புத்தாண்டின் மூலம் இந்துக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்

சோபகிருது நாளில் ஒவ்வொரு தனிமனிதனுடைய வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறுவதை காணலாம். அந்த வகையில் சோபகிருது நாளில் பண வருமானம் அதிகரித்து ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு சோபகிருது புத்தாண்டானது துணைபுரிகின்றது எனலாம்.

இந்நாளில் பல்வேறு சுப காரியங்கள் நடந்தேறும் அதாவது திருமண யோகம் கூடி வருவதோடு திருமண தம்பதிகள் சிறந்த முறையில் வாழ்க்கை வாழ வழி அமைக்கின்றது. மேலும் சோபகிருது புத்தாண்டு நாளில் பல நற்காரியங்களும் இடம் பெறுவதனை காண முடிகின்றது.

இந்நாளில் பல்வேறு தோஷங்கள் நீங்கி சிறப்புற வாழ்க்கையை வாழ்வதற்கு துணைபுரிகின்றது. அதாவது கெட்ட தீவினைகள் மற்றும் துஷ்டமான காரியங்களிலிருந்து விலகி நடந்து கொள்வதற்கு சோபகிருது புத்தாண்டானது வழியமைத்து தருகின்றது எனலாம்.

இந்நாளில் மேச ராசியில் பிறந்தவர்களுக்கு பல்வேறு அதிஸ்டங்கள் காத்திருப்பதோடு அவர்களுடைய வாழ்வில் பல்வேறு சுப காரியங்களும் நடைபெறும் என்பதனையும் குறிப்பிடலாம்.

சோபகிருது வருடத்தில் பிறப்பவர்கள் சகல விதமான மேன்மைகளையும் பெற்று ஒரு சாமர்த்திய சாலியாக அவர்களுடைய வாழ்வை எதிர்கொள்வார்கள்.

Read more: தமிழ் புத்தாண்டு கட்டுரை

சித்திரை மாத சிறப்புகள்