சென்னா மசாலா செய்வது எப்படி

Channa Masala Seivathu Eppadi

இந்த பதிவில் சென்னா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சென்னா மசாலா சப்பாத்தி⸴ பூரி⸴ பிரைட்ரைஸ் போன்றவற்றிற்கு தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கொண்டைக்கடலையில் அதிக புரோட்டின் உள்ளது. இதனால் கொண்டக்கடலை உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

குழந்தைகள் கொண்டைக்கடலை சாப்பிடவில்லை என்றால் அதற்கு பதிலாக கிரேவியாக கொடுத்தால் சூப்பராக சாப்பிடுவார்கள். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சென்னா மசாலா செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க!

சென்னா மசாலா செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

தேங்காய்1/2 கப்
முந்திரிப்பருப்பு6
பச்சை மிளகாய்2
கொண்டகடலை250 கிராம்
தக்காளி2
எண்ணெய்தேவையான அளவு
பெரிய வெங்காயம்2
இஞ்சிப்பூண்டு விழுது1 ½ டீஸ்பூன்
மஞ்சள்தூள்1/2 டீஸ்பூன்
மல்லித்தூள்1 டீஸ்பூன்
சீரகத்தூள்1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்1 டீஸ்பூன்

சென்னா மசாலா செய்முறை

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 5 விசில் வைத்து அவித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸியில் தேங்காய்⸴ முந்திரிப்பருப்பு⸴ பச்சைமிளகாய் சேர்த்து நீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அவித்து வைத்த கொண்டைக் கடலையில் ½ கப் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு சேர்த்து கூடவே மஞ்சள் தூள்⸴ கரம் மசாலா⸴ மல்லித்தூள்⸴ சீரகத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பச்சை வாசனை நீங்கியதும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு ஏற்கனவே அரைத்து வைத்த தேங்காய்⸴ முந்திரிப்பருப்பு⸴ பச்சைமிளகாய் பேஸ்டை அதில் சேர்த்து கலந்துவிடவும்.

அடுத்து பேஸ்டாக அரைத்த தக்காளி பழத்தையும் சேர்த்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

ஐந்து நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.

பின்பு அரைத்த கொண்டைக் கடலையையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து மீதமுள்ள கொண்டை கடலையையும் சேர்த்து கலந்துவிடவும்.

இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி கலந்து விடவும். வேறெரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.

இப்போது மிகவும் ருசியான சென்னா மசாலா ரெடி!!!

You May Also Like:

வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி

வெண் பொங்கல் செய்வது எப்படி