சுவரொட்டிகள் அனைத்து வகையான செய்திகளையும் மக்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
1796 ஆம் ஆண்டில், பவேரிய இசைக்கலைஞரும் நாடக ஆசிரியருமான “அலோயிஸ் செனெஃபெல்டர்” லித்தோகிராஃபியைக் கண்டுபிடித்தார். இது நவீன சுவரொட்டி வடிவமைப்பிற்கான முக்கிய தொழில்நுட்ப முன்னோடியாகும்.
பிரெஞ்சு கலைஞர் ஜூல்ஸ் செரெட் (Jules Cheret) நவீன போஸ்டரின் தந்தை என்று அறியப்பட்டார். இவர் 1866 இல் தனது சொந்த லித்தோகிராஃபி பட்டறையை நிறுவினார் மற்றும் 40 ஆண்டுகளில் சுமார் 1,200 சுவரொட்டிகளை உருவாக்கினார்.
1920ஆம் ஆண்டு காலப்பகுதியின் பின்னர் சுவரொட்டிகளின் நோக்கம் விளம்பரமாக இருந்தது.
சுவரொட்டிகள் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டும் வடிவமைக்கப்படவில்லை. அரசியல் செய்திகள் அதாவது அக்காலத்தில் நாஜிக்கள் சுவரொட்டிகளை பிரச்சார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர்.
அதே போல் கிழக்குப் பகுதியின் 1960களில் இளைஞர்கள் (மற்றும் பிற்கால தலைமுறையினர்) புரட்சியாளர் சேகுவேராவின் சுவரொட்டிகளை தங்கள் சுவர்களில் தொங்கவிட்டனர்.
அந்தக் காலத்தின் பிற பிரபலமான சுவரொட்டிகள் அணு ஆயுதங்கள், வியட்நாம் போர், மாசுபாடு மற்றும் அதிக மக்கள் தொகைக்கு எதிராக குரல் கொடுத்தன.
நவீன சுவரொட்டிகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி, உலகம் முழுவதும் விளம்பர முறையை மாற்றி அமைத்தது.
கலைஞர்களின் விரிவான வடிவமைப்புகளுடன் கூடிய சுவரொட்டிகள் அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகளுக்காக இன்றும் உருவாக்கப்படுகின்றன.
Table of Contents
சுவரொட்டி என்றால் என்ன
சுவரொட்டி என்பது ஏதேனும் ஒரு தகவலை நேரடியாக விளம்பரப்படுத்துவது ஆகும். அல்லது மக்களை விழிப்பூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் அச்சு ஊடகமாகும்.
மேலும் சுவரொட்டி (Poster) என்பது மதில் அல்லது செங்குத்துச் சுவர்களில் ஒட்டப்படும் விதத்தில் வடிவமைக்கப்படும் அச்சிடப்படும் தாள் ஆகும்.
சுவரொட்டிகளில் அமைப்பு
பொதுவாக சுவரொட்டிகள் அழகானதாகவும், சிறிய வடிவமுடையதாகவும் காணப்படும். அத்துடன் எழுத்தின் அளவு பெரிதாக இருக்கும்.
பார்ப்பவர்களின் கண்ணை கவரும் தன்மையுடையதாகவும் இருக்கும். மிகவும் குறைந்த அளவிலான சொற்களைக் கொண்டு கூறவந்த விடயம் அல்லது கருத்து மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
பார்ப்பவர்களை கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மிகவும் சுருக்கமான அதேவேளை அறிவூட்டும் வார்த்தைகளும் பயன்படுத்தப்படும்.
யாரால் சுவரொட்டி அச்சிடப்படுகின்றதோ அல்லது எந்த நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றதோ அவர்களின் பெயர் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
சுவரொட்டிகளின் பயன்கள்
சுவரொட்டிகள் விநியோகிக்க எளிதானவை. ஒரு கடிதம் அளவிலான வடிவத்தில் ஒரு சுவரொட்டியை அச்சிட்டால், அதைச் சென்றடைய வேண்டிய நபர்களுக்கு நேரடியாக அஞ்சல் மூலம் அனுப்பலாம். ஒரு பெரிய வடிவமைப்புடன் இருந்தால் சுவரொட்டிகளை தொங்கவிட முடியும்.
வணிக நிறுவனங்கள் தங்கள் விளம்பர சுவரொட்டிகளை வைக்க விரும்பும் பகுதிகளின் உரிமையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்குவதுண்டு.
சுவரொட்டிகள் மிகவும் மலிவானவை. சுவரொட்டிகளானவை அளவு, வண்ணங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. இருப்பினும், சுவரொட்டிகள் குறைந்த விலை முதலீட்டில் அதிக வருமானத்தை வழங்குகின்றன.
இதற்கு முக்கிய காரணம், பிற விளம்பரங்கள் அடிக்கடி முதலீடு செய்ய வேண்டியவை ஆகும் ஆனால் சுவரொட்டிகள் அவ்வாறில்லை.
சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்துவது நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்யத் தேவையில்லை.
சுவரொட்டிகளை பல்வேறு விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம். ஒரு நிகழ்வையோ, வணிக பொருட்களையோ அல்லது அரசியல் ரீதியான செய்திகளை வெளிப்படுத்தவோ சுவரொட்டிகளை பயன்படுத்தலாம்.
Read more: ஊடகம் என்றால் என்ன