நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைவதற்கும், நாம் விரும்பும் தனிப்பட்ட முன்னேற்றத்தை அடைவதற்கும் சுயமரியாதை ஒரு சிறந்த வழியாகும்.
வாழ்க்கையில் வெற்றியை அடைவது ஆரோக்கியமான சுயமரியாதையுடன் இருப்பதோடு நேரடியாக தொடர்புடையது.
மனிதன் தன்னைத்தானே மதிப்பிடுவதை விட முக்கியமான மதிப்பு எதுவும் இல்லை. சுயமரியாதையை வலுப்படுத்த முடிந்தால், மன அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்க முடியும்.
சுயமரியாதை ஒரு மனிதனுக்கு எவ்வாறு உண்டாகின்றது எனில் அவரின் பழைய அனுபவங்களின் அடிப்படையில் ஏற்படுகின்றது. சுயமதிப்பு இல்லையெனில் வாழ்வில் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
சுய மதிப்பு குறைவாக இருப்பவர்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைத்து பயப்படுவார்கள், மன அழுத்தத்தினை ஏற்படுத்திக் கொள்வார்கள், பயத்தை அதிகம் வெளிப்படுத்துவார்கள், அதிகமாக தன்னைத் தானே விமர்சனம் செய்வார்கள்.
குறை சுயமரியாதை கொண்டவர்கள் வாழ்வில் நம்பிக்கையைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
Table of Contents
சுயமரியாதை என்றால் என்ன
சுயமரியாதை எம்மைப் பற்றிய உணர்வு பூர்வமாக நாம் என்ன மதிப்பீடு வைத்திருக்கின்றோமோ அதுவே சுயமரியாதை ஆகும். சுயமரியாதை எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அவ்வளவு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.
உளவியலில், சுயமரியாதை என்பது தன்னைப் பற்றிய ஒரு நபரின் கருத்துகளின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இது தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதன் அடிப்படையில் உருவானது.
அதாவது, அனைவருக்கும் சரியான சமமான உரிமை, வாய்ப்பு, மரியாதை மதிப்புமிக்க வாழ்வு இவையே சுயமரியாதை எனப்படும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சமம் அவன் யாரை விடவும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை.
சுயமரியாதையை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்
கடந்த காலங்களில் ஏற்பட்ட தோல்விகளை நாம் புரிந்து கொள்வதன் மூலம் சுயமரியாதையை அதிகரித்துக் கொள்ள தேவையான வழிமுறைகளை தேட முடியும்.
எது எமக்கு பலமானது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். நம்மை நாமே அவதானிப்பதன் மூலம் எமது பலத்தை கண்டு பிடிக்க முடியும்.
உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலம் சுயமரியாதையை கூட்டிக் கொள்ளலாம். எம்முடன் நாமே பேசும் எதிர்மறைப் பேச்சை நிறுத்த வேண்டும்.
வெற்றியின் அடையாளங்களை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது வாழ்வில் கிடைத்த வெற்றிப் பரிசுகளைப் பார்த்து நம்மை நாமே பெருமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
எதிர்மறை விளைவுகளை தவிர்ப்பதன் மூலமும் நேர்மறை விளைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் சுயமரியாதைக் கூட்டிக் கொள்வதற்கான சிறந்த வழியாகும்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். எனக்கென தனித்துவம் உண்டு என நம்பிக்கை கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள முடியும்.
நாம் செய்ய வேண்டிய காரியங்களை தள்ளிப்போடுதல், சுய குற்றம் காணுதல், மற்றவர்களின் நலனில் மட்டுமே அக்கறை காட்டுதல் போன்றவற்றின் மூலம் சுயமரியாதை இழக்கப்படுகின்றது.
சமூகத்தில் நாம் வகிக்கும் இடம் மற்றும் சமூக செயல்பாட்டின் அளவு ஆகியவை பெரும்பாலும் நமது தகுதிகள் நமது சொந்த மதிப்பீட்டின் அளவைப் பொறுத்தது ஆகும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத, அவசியம் தேவையான சுயமரியாதையை இழந்து இந்த உலகத்தில் வாழ்வதென்பது மோசமான வாழ்க்கையாக இருக்கும்.
பிற மக்களால் எள்ளி நகையாடக்கூடிய, கேலி கிண்டலுக்கு உள்ளாகக்கூடிய வாழ்க்கையாக மாறிவிடும்.
ஒரு மனிதன் சுயமரியாதையோடு வாழ்கின்ற காரணத்தினால் மட்டும் தான், வெட்க உணர்வோடும், தன்மானத்தோடும், மரியாதையோடும் வாழ முடியும் என்பதனை உணர்ந்து சுயமரியாதையை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
Read more: சமூக நீதி என்றால் என்ன