சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு | கிட்கிந்தை |
இராமாயணத்தில் இடம் பெறும் இந்து காவியத்தின் ஒரு கதை மாந்தரே சுக்ரீவன். சுக்ரீவனும் வாலியும் சகோதரர்கள் ஆவர். அந்த வகையில் சுக்ரீவன் கிட்கிந்தையில் ஆட்சி செய்தான். இந்திய காவியமான இராமாயாணத்தில் வாலியை தொடர்ந்து கிட்கிந்தையை ஆட்சி செய்தவன் சுக்ரீவன் ஆவான்.
Table of Contents
கிட்கிந்தை
இராவணனின் கோந்த் இனக்குழு வசித்த தண்டகாரன்யம் பகுதியின் சற்று வட பகுதியில் வசித்த கொருக் இனக்குழுவைச் சார்ந்த வாலி, சுக்ரீவன், அனுமன் ஆகியோர் வாழ்ந்த நாடாக கிட்கிந்தை காணப்படுகின்றது. இராமாயாணத்தில் கதை மாந்தர்களாக குறிப்பிடப்பட்டவர்களான சுக்ரீவன், வாலி ஆட்சி செய்த நாடாகும்.
சுக்ரீவனுக்கும் அவனது சகோதரனான வாலிக்குமிடையில் பகை நிலவியது. அச்சந்தர்ப்பத்தில் சுக்ரீவனுக்கும் இராமனுக்குமிடையில் நட்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இராமணானவன் சுக்ரீவனின் கொடிய அண்ணணான வாலியிடமிருந்து கிட்கிந்தை நாட்டை மீட்டுக் கொடுத்து சுக்ரீவனை கிட்கிந்தையின் அரசனாக்கினான். மேலும் சுக்ரீவனும் இராமணின் மனைவி சீதையை தேடுவதற்கு துணைபுரிந்தான்.
சுக்ரீவனுக்கும் வாலிக்கும் இடையிலான போர்
சுக்ரீவன் மற்றும் வாலி இருவரும் சகோதரர்கள் ஆவார். வாலி என்பவர் வானர குல அரசனாகவும், சுக்ரீவன் இளவரசனாகவும் இருந்து கிட்கிந்தை எனும் நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.
ஒரு அரக்கனுடன் வாலி யுத்தம் செய்ய நேரிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் வாலி மற்றும் சுக்ரீவன் இருவரும் போரிற்கு சென்றனர். இதனை அறிந்த அரக்கன் ஒரு குகையினில் சென்று ஒழிந்து கொண்டான்.
இந்த சந்தர்ப்பத்தில் சுக்ரீவனை குகைக்கு வெளியே நிறுத்தி விட்டு வாலி அரக்கனை கொல்வதற்கு குகைக்குள் சென்று விட்டான். இவ்வாறு காத்திருந்த சுக்ரீவனானவன் பல மாதங்களாகவே குகைக்கு வெளியே காத்திருந்தான்.
இந்த சமயத்தில் ஒரு நாள் குகை வாயிலில் இரத்தப் பெருக்கு ஆறாக ஓடியது. இதனை கண்ட சுக்ரீவனானவன் குகைக்குள் செல்ல முற்பட்ட போது அங்கு நின்ற வானர சேனைகளும், அனுமானும் சுக்ரீவனை தடுத்து நிறுத்தினர்.
மேலும் அரசற்ற நாடு அழிந்து போகும் என்று கூறி சுக்ரீவரனை கிட்கிந்தை நாட்டிற்கு முடி சூட வைத்தனர். காலங்கள் சென்றதன் பின்னர் வாலி அந்த அரக்கனை கொன்றதன் பின்னர் தம் நாட்டிற்கு திரும்பினான்.
இச்சந்தர்ப்பத்தில் நாட்டை ஆழ்பவர் சுக்ரீவன் என்பதனை அறிந்ததும் சினம் கொண்டு சுக்ரீவனை தாக்கினான். சுக்ரீவனானவன் வாலியிடமிருந்து தப்பித்து சென்றான்.
இச்சந்தர்ப்பத்திலேயே இராமனின் நட்பு சுக்ரீவனுக்கு கிடைத்தது. இராமனின் துணையால் சுக்ரீவனானவன் போரில் வாலியை வீழ்த்தி கிட்கிந்தை நாட்டை ஆட்சி செய்தான்.
சுக்ரீவனுக்கும் இராமனுக்கும் இடையேயான நட்பு
சுக்ரீவனுக்கும் வாலிக்குமிடையில் சண்டை ஏற்பட்ட போது சுக்ரீவன் தன் அரச பதவியை துறந்து வாலியை விட்டு பிறிதொரு இடத்திற்கு சென்றான். இந்த சந்தர்ப்பத்திலேயே இராமனின் துணையானது சுக்ரீவனுக்கு கிடைத்தது.
இராமனானவன் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு தொடுத்து அவனை கொன்று சுக்ரீவனுக்கு உதவி புரிந்தான். மேலும் இதற்கு நன்றிக் கடனாக சுக்ரீவனானவன் தன்னுடைய சேனைகளை ராமனுக்கு வழங்கி ராவண யுத்தத்திற்கு துணையாக நின்றான். சுக்ரீவனும் இராமனும் சிறந்த நட்பினை பேணி வந்தனர்.
இதன் காரணமாக சுக்ரீவனானவன் தனது வானர இராச்சியத்தை மீட்டெடுத்தார். பின்னர் தனது மனைவி ரூமாவை திரும்ப பெற்று கொண்டதோடு வாலியின் மனைவி தாரையையும் சுக்ரீவனானவன் தனது மனைவியாக்கிக் கொண்டான். மேலும் அவளது மகனான அங்கதனுக்கு இளவரசன் எனும் பட்டத்தினையும் சூட்டினான்.
Read More: கருங்காலி மாலை யார் அணியலாம்