உலகில் மனிதன் தோன்றி குழுவாக வாழ்ந்து சமூகமான போது சமயங்கள் தோன்றின. அவ்வாறு தோன்றிய பல்வேறு சமயங்களில் முக்கியமானவையாக இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை முப்பெரும் சமயங்களாகும்.
இன்று உலகில் பன்னிரண்டுக்கும் மேலான பெரிய சமயங்களும், நூற்றுக்கணக்கான சிறிய சமயங்களும் உள்ளன. உலகின் 740 கோடி மக்கள் தொகையில், 600 கோடி மக்கள் ஏதாவது ஒரு சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.
உலகிலுள்ள பெரிய சமயங்களில் இந்து சமயம், ஜைன சமயம், புத்தசமயம், சீக்கிய சமயம் ஆகியவை கிழக்கத்திய நாடுகளில் தோன்றிய சமயங்கள் ஆகும்.
ஜுடாயிசம், ஜொரொஸ்ட்ரியனிசம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதமும் மேற்கு நாடுகளில் தோன்றியவை ஆகும். ஒவ்வொரு சமயமும் வழிபாட்டுத் தலங்களையும், சமய குருமார்களையும் சமய சடங்குகளையும் கொண்டிருக்கின்றன.
Table of Contents
சமயம் என்றால் என்ன
சமயம் (சமம்+இயம்) என்றால் எல்லோரும் சமம் என்ற எண்ணத்தோடு ஒத்தும், உதவியும் வாழ வேண்டும் என்பதாகும்.
மேலும், சமயம் என்பது இறை உயிர் உலகம் பற்றிய ஒரு நம்பிக்கை முறை எனலாம். கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் எழுந்தருளி இருப்பதை ஏற்கின்ற அமைப்புகளை சமயம் எனலாம்.
அதாவது, சமயம் அல்லது மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும். ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயற்பாடுகளையும், சமயச் சடங்குகளையும் மதம் குறிக்கிறது.
இந்து சமயமும் அறிவியலும்
இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள், சம்பிரதாயங்கள் நம்பிக்கையின் பின்புலமாக அமைந்துள்ளன.
நம்மில் பலர் பல சடங்குகளை மூட நம்பிக்கை என ஒதுக்கி வைத்து விடுகின்றோம். ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். இந்து சமயத்தில் ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் பல அறிவியல் காரணங்கள் உள்ளன.
நமஸ்காரம் செய்வது இந்துக்களின் உன்னத செய்கையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் செயலாகப் பார்க்கின்றனர்.
ஆனால் நமஸ்காரம் செய்யும் போது இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும் அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.
திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமல்ல பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள்.
இந்த விரல்களில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.
இந்திய நாட்டில் சமயங்கள் பரிணாம வரிசையை அடிப்படையாகக் கொண்டு சமயம் ஆறு பிரிவுகளாக உருவாயின. அவை சைவம், சாக்தம், வைணவம், செயரம், காணபத்தியம், கௌமாரம் ஆகும்.
வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும் நான்கு வளங்களையும் உள்ளடக்கிய இறைநிலையை உணர்ந்த ஞானிகள் அது அசைவற்றிருப்பதால் சிவம் எனக் கூறி சைவ சமயத்தை உருவாக்கினர்.
இறைநிலையிலிருந்து தோன்றிய சக்திதான் தெய்வம் என்ற பெரியவர்கள் சாக்த சமயத்தை உருவாக்கினர்.
விண் தற்சுழற்சியின் போது சத்தத்துடன் சுழல்வதை உணர்ந்தவர்கள் இறைவனுக்கு சங்கையும், சக்கரத்தையும் கொடுத்து வைணவ சமயத்தை உருவாக்கினர்.
அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற பஞ்ச தன்மாத்திரைகளை உணர்ந்தவர்கள் இவை இயற்கையின் ஐந்து கரங்கள் என விநாயகனை படைத்து காணபத்தியம் என்ற சமயத்தை உருவாக்கினர்.
பஞ்ச தன்மாத்திரைகளோடு உயிரின் அலையான மனத்தையும் சேர்த்து இயற்கைக்கு ஆறு முகங்கள் என அறிந்தவர்கள் கௌமார சமயம் எனக் கூறி வழிபட்டனர்.
Read more: கலாச்சாரம் என்றால் என்ன