கோகுலாஷ்டமி என்றால் என்ன

gokulashtami enral enna in tamil

விஷ்ணு பகவானுக்குரிய சிறப்பான பிறந்த நாட்களில் கோகுலாஷ்டமியும் ஒன்றாகும். இது அதிகப்படியாக விஷ்ணுவை மூலமாக கடவுளாக கொண்டு வழிபடும் வைஷ்ணவ மக்களால் பரவலாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

கோகுலாஷ்டமி என்றால் என்ன

ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி  கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இது கண்ணபிரான் அவதரித்த மகத்தான நாள் ஆகும்.

சின்னக்கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது.

கோலாஷ்டமி புராண கதை

கிருஷ்ண பரமாத்மா உலகில் அவதரித்த திருநாளாகும். மதுராவில் காணப்படும் சிறைச்சாலையிலே அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்திரத்தில் வாசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக அவதரித்தார்.

அதுவரை பிறந்த ஏழு குழந்தைகளையும் தேவகியின் சகோதரனான கம்சர் அழித்துவிட்டார். எட்டாவதாக பிறந்த இக்குழந்தையை எவ்வாறாவது காத்தருள வேண்டும் என எண்ணுகிறார் வாசுதேவர்.

“ஆயர்பாடிக்கு அழைத்து செல்வீராக” என்ற அசரிரீ ஒலி கேட்க வாசுதேவரும்  குழந்தையை ஒரு கூடையில் வைத்து தலையிலே சுமந்து கொண்டு சிறைச்சாலைகள் இருந்து வெளியே செல்கிறார். சிறையில் கதவுகள் அனைத்தும் தானே திறந்து வழி விடுகிறது.

சிறிது தூரம் செல்லும் பொழுது அடைமழை பெய்கிறது. அப்போது பகவான் நனைந்து விடக்கூடாது என ஐந்து தலைகளைக் கொண்ட நாகம் ஒன்று குடைப்பிடித்து செல்கின்றது.

அசரிரீ கேட்டது போல வாசுதேவர் குழந்தையை ஆயர்பாடிக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகிறார். அங்கு அவர் யசோதையின் வளர்ப்பு மகனாக வளர்கிறார். துவாரகையை தலைநகராகக் கொண்டு சிறந்த முறையில் ஆட்சி செய்தார்.

பஞ்சபாண்டவர்களுக்கு குருஷேத்திரப் போரில் உதவியதுடன் அர்ஜுனனுக்கு தேர் சாரதியாகவும் இருந்து, பகவத் கீதை எனும் அரும்பெரும் பொக்கிஷத்தை வழங்கி அருளியுள்ளார்.

இவ்வாறு பல அற்புதங்களின் நிகழ்த்திய கிருஷ்ணபிரான் அவதரித்த நன்னாளே கோகுலாஷ்டமி என அழைக்கப்பட்டு வைஷ்ணவ சமய மக்களால் பெரும்பான்மையாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விரதம் அனுஷ்டிக்கும் முறை

விரதத்திற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து கழுவி மறுநாள் அதிகாலை எழுந்து நீராடி விட்டு கணவனும் மனைவியும் அல்லது கணவனால் இயலாத சந்தர்ப்பத்தில் மனைவி மாத்திரம் அல்லது மனைவியால் இயலாத நேரத்தில் கணவன் மாத்திரம் விஷ்ணுவை நோக்கி விரதம் இருப்பர்.

இந்நாளில் வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும்.

பின்னர், கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு நிவேதனங்கள்  வைக்க வேண்டும்.

முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00 மணிக்குள் செய்தால் சிறப்பு வாய்ந்ததாக அமையும்.

இந்நாளில் ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். அவையாவன,

1. சந்தான கோபால கிருஷ்ணன் : யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

2. பாலகிருஷ்ணன் : தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.

3. காளிய கிருஷ்ணன் : காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

4. கோவர்த்தனதாரி :  கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்) : வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

6. முரளீதரன் : கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

7. மதனகோபாலன் :  அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.

8. பார்த்தசாரதி : அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

கிருஷ்ண வழிபாட்டிற்கு வைக்கவேண்டிய   உணவு பொருட்கள்

கிருஷ்ணருக்கு வெண்ணெய். இனிப்பு பலகாரங்கள் தான் அதிகமாக பிடிக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவு இனிப்புகளை செய்து வழிபடுவதோடு வெண்ணை பூஜையில் இடம் பெறுவது முக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் குசேலனின் அன்பை அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார். அதனால் எந்த ஒரு பலகாரங்களையும் செய்ய முடியாத நிலை இருந்தாலும் கவலைப்படாமல் பூஜையில் அவல் மற்றும் வெண்ணெய் வைத்தாலே கிருஷ்ணரின் அருளைப் பெறலாம்.

அன்றைய தினத்தில் கிருஷ்ணரை நினைத்து உண்ணாமல் விரதம் இருந்து, அவரது நாமங்களை சொல்வதும் கிருஷ்ணரை குறித்த பாடல்களை பாடி வழிபட்டு வந்தால் கிருஷ்ணரின் முழு அருளையும் பெறலாம்.

கோகுலாஷ்டமி அனுஷ்டிப்பதன் பலன்கள்

  • குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • சிறந்த அறிவாற்றல் பெறலாம்
  • நற்புத்தி உண்டாகும்.
  • சமயோகித புத்தி ஏற்படும்.
  • நேர்மைத் தன்மை அதிகரிக்கும்.

Read more: விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன

ஜென்ம சனி என்றால் என்ன