கொரோனா கால கதா நாயகர்கள் கட்டுரை (Corona Kala Katha Nayakarkal Katturai) : கொரோனா பேரிடர் காலத்தில் மற்றவர்களின் நலனுக்காகவும் சேர்த்து செய்யப்பட்ட அனைவருமே கதாநாயகர்கள் தான்.
கொரோனா கால கதா நாயகர்கள் கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- மருத்துவ பணியாளர்கள்
- துப்பவரவு பணியாளர்கள்
- காவல்துறையினர்
- தன்னார்வளர்கள்
- ஊடகவியலாளர்கள்
- விவசாயிகள்
- முடிவுரை
முன்னுரை
“ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்” என்கிறார் வள்ளலார். இதை மனதில் கொண்டு இந்த கோரோனோ நோய்த்தொற்று பேரிடர் காலத்தில் தங்கள் உயிரை அடகு வைத்து தன்னலமின்றி உதவியவர்கள் அனைவருமே கதாநாயகர்கள் தான்.
மருத்துவ பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தன்னார்வளர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள் என பலரும் மக்களின் நலனிற்காக தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
அதனால் தான் நாங்கள் எந்தவித அச்சமும் இன்றி வீட்டில் இருந்து நம்மை காத்துக்கொள்ள கூடியதாக இருந்தது.
இந்த கட்டுரையில் அவர்களையும் அவர்களின் போற்றத்தக்க பணியையும் சிறிது பார்ப்போம்.
மருத்துவ பணியாளர்கள்
கொரோனோ பேரிடர் காலத்தில் மருத்துவ பணியாளர்களின் பணி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. கொரோனா நோயாளிகளின் அருகில் செல்லவே மற்றவர்கள் அஞ்சிய போது தங்கள் உயிரை அடகு இவர்கள் செய்த பணி என்றுமே மறக்க முடியாதது ஆகும்.
தங்கள் குடும்பங்களை உறவுகளை பிரிந்து நோயாளர்களை தங்கள் குடும்பங்களாக எண்ணி இவர்கள் செய்த சேவை அளப்பெரியதாகும். கொரோனா தொற்றுக்கு உள்ளவர்களை அதிலிருந்து இருந்து மீட்டு அவர்களை மீண்டும் வாழ வைத்தவர்கள் இவர்கள் தான்.
துப்பவரவு பணியாளர்கள்
“சுத்தம் சுகம் தரும்” என்பதற்கமைய நாம் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் சுத்தமான சூழலில் வாழவும் நமக்கு உதவுபவர்கள் இவர்கள் தான்.
இந்த கொரோனா பேரிடரில் கொரோனா பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு கிருமிநாசினி தெளித்தல், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ கழிவுகள் மற்றும் உடல்களை அப்புறப்படுத்தல் போன்ற பல சவாலான பணிகளை செய்தனர்.
கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்களுக்கு இணையாக ஓய்வின்றி பணி செய்தார்கள்.
காவல்துறையினர்
கொரோனா பேரிடரில் காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக பொது இடங்களில் சமூக இடைவெளியை கவனித்தல். மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல். ஊரடங்கினை நடைமுறைப்படுத்தல் என பல்வேறு பணிகளையும் மக்களிடையே விழிப்புர்ணர்வை ஏற்படுத்துவதையும் வெயில் மழை என்று பாராமல் சிறப்பாக பணி செய்தார்கள்.
இவர்களால் தான் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தன்னார்வளர்கள்
கொரோனா பேரிடர் காலத்தில் தன்னார்வளர்களின் பணி மிக முக்கியமானதாகும். சமூகத்தில் மிகவும் அக்கறை கொண்ட இவர்கள் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்குதல், முகக்கவசங்கள் வழங்குதல் இயலாதவர்களுக்கு இயன்றளவு உதவிகளை செய்தல் என்று மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
அதுமட்டுமின்றி மக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தவறவில்லை. இவர்களும் கொரோனா கால கதா நாயகர்கள்தான்.
ஊடகவியலாளர்கள்
கொரோனா காலத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு இன்றியமையாதது. மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு ஊடகங்களுக்கு உண்டு.
அதுமட்டுமின்றி கொரோனா பற்றிய செய்திகள், ஊரடங்கு அமுலாக்கம், ஊரடங்கு தளர்வு போன்றவற்றை உடனுக்குடன் மக்களிடையே கொண்டுசென்று மக்களை பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க உதவி செய்தனர்.
விவசாயிகள்
உணவில்லாமல் நம்மால் வாழ முடியாது. நாம் உயிர் வாழ காரணமாக இருக்கும் விவசாயிகள் என்றும் நமக்கு கடவுள் தான்.
இந்த கொரோனா பேரிடர் காலத்தில் உணவுகள் தட்டுப்பாடு இன்றி நமக்கு கிடைக்க உழைத்த விவசாயிகள் எப்போதும் ஒப்பற்ற கதாநாயகர்களே.
முடிவுரை
இந்த சுயநலமான உலகத்தில் தங்களுக்காக மட்டும் வாழாமல். சமூகத்தையும் நேசித்து மற்றவர்களின் நலனுக்காவும் வாழும் இவர்கள் போன்றவர்கள் தான் உண்மையான கதாநாயகர்கள்.
இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நம்மோடு துணைநின்று நமக்கு உதவி செய்த அனைவருமே கதாநாயகர்கள் தான். அவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.
நமது சமூகப் பொறுப்புகளை உணர்ந்து சுகாதாரம், முகக்கவசம், தனிமனித இடைவெளி, ஊட்ட சத்தான உணவுகளை உண்ணுதல் மூலம் கொரோனாவை வென்று காட்டுவோம்.
You May Also Like :