இந்த பதிவில் “கூட்டுறவு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
தனிமனிதனுக்காக சமுதாயமும்⸴ சமுதாயத்திற்காக தனிமனிதனும் பாடுபடுவதே கூட்டுறவுக் கொள்கையாகும்.
Table of Contents
கூட்டுறவு பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தோற்றம்
- கூட்டுறவுச் சங்கம் உருவாகுவதற்கான காரணங்கள்
- செயன்முறை
- நன்மைகள்
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவின் வளர்ச்சிக்குக் கூட்டுறவு துறையானது முக்கிய காரணமாக விளங்குகிறது தனிமனிதனுக்காக சமுதாயமும்⸴ சமுதாயத்திற்காக தனிமனிதனும் பாடுபடுவதே கூட்டுறவுக் கொள்கையாகும்.
மக்கள் சமத்துவ நிலையை அடைய பயன்படுத்தப்படும் முதல் படியே கூட்டுறவு ஆகும். ஜனநாயகத்தின் அச்சாணியாக உள்ளூராட்சி அமைப்புக்களும்⸴ கூட்டுறவு அமைப்புகளும் இருக்கின்றன.
எனவே கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தரும் கூட்டுறவின் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தோற்றம்
இந்தியா சுதந்திரம் அடைய முன்பே அதாவது 1904 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் தோன்றின. தற்போது உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர் எனும் கிராமத்தில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் கூட்டுறவுச் சங்கம் துவக்கப்பட்டது.
சர்.டி.ராஜகோபாலாச்சாரியார் என்பவர் இச்சங்கத்தின் உடைய முதல் பதிவாளராகப் பொறுப்பேற்றார்.
கூட்டுறவுச் சங்கம் உருவாகுவதற்கான காரணங்கள்
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
- ஊர் கூடித் தேர் இழுத்தால் தேர் நகரும்
- உளியால் தான் சிற்பம் செதுக்கப்படுகின்றது
- சிறு துளி பெரு வெள்ளம்
இதன் அடிப்படையில் தான் கூட்டுறவு இயக்கங்கள் பிறந்தன. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார். இவரே கூட்டுறவுத் தந்தை என அழைக்கப்படுகின்றார்.
ஏழைகளால் தன்னந்தனியாக தமது நலனுக்கான காரியத்தைச் செய்ய இயலாது. அவர்கள் கூட்டு முயற்சி செய்தால் தான் வெற்றி பெற முடியும். எனவே கூட்டுறவு என்ற உறவு முறை வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
செயன்முறை
கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக குறிப்பிட்டளவு பங்குத் தொகை செலுத்தப்பட வேண்டும். எனினும் இதில் சேர ஒருவரையும் கட்டாயப்படுத்த முடியாது.
எப்போது வேண்டுமானாலும் சேரலாம். அவரின் விருப்பப்படி அதிலிருந்து விலகலாம். சங்க உறுப்பினர்கள் அனைவரும் சமமான உரிமை உடையவர்கள் ஆவர்.
ஆண்டு தோறும் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெறும். ஆகக் குறைந்தது 25 உறுப்பினர்களைக் கொண்டதாகவும்⸴ அதற்கு மேல் எத்தனை உறுப்பினர்களும் அங்கத்துவம் வகிக்கலாம்.
நன்மைகள்
சேவை புரிவதே முதன்மை நோக்கமாகும். குறைந்த வட்டியில் கடன் கொடுக்கப்படுகிறது. இதனால் வேளாண்மைத் தொழில்⸴ கைத்தொழில் போன்றன வளர்ச்சி அடைந்து வருகின்றன.
கூட்டுறவுச் சங்கங்களால் நல்ல உரம்⸴ நல்ல உழவுக்கருவிகள்⸴ தரமான விதை⸴ தூய பால்⸴ மலிவான தட்டுமுட்டுப் பொருட்கள் போன்றன கிடைக்கின்றன. இதனால் ஏழைகள் பெரிதும் நன்மை அடைகின்றனர்.
முடிவுரை
சிறந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பானது தற்போது ஆரம்ப கட்டத்தில் செயற்பட்டதைப் போல் செயல்படுவது மிக அரிதாக உள்ளது. சுய விருப்பில் பலர் உயர் பொறுப்புக்கு வந்து கட்டமைப்பின் அடிப்படை நோக்கத்தைச் சீரழிகின்றனர்.
லஞ்சம்⸴ ஊழல் சம்பவங்கள் இங்கு இடம் பெறுகின்றன. பிற தலையீடுகள் இன்றி ஜனநாயக தன்மையுடன் இயக்கங்கள் செயற்பட வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு அமைப்பு மட்டுமல்லாது ஏழைகளின் துயர் போக்கும் அமைப்பு என்பதனையும் உணர்ந்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் செயற்படுதல் அவசியமாகும்.
You May Also Like: