காலணி வேறு பெயர்கள்

காலணி வேறு சொல்

காலணி என்பது மனிதனின் தேவைக்காக காலில் அணியப்படும் கால் காப்புடை ஆகும்.

மனிதன் நடக்கும் போதும், ஓடும் போதும் கால்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் அதாவது கல், முள்ளு, கண்ணாடி போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் காலில் குத்தாமல் இருப்பதற்கும், சுடும் வெயில்களில் இருந்து பாதங்களை பாதுகாப்பதற்கும், பனியில் இருந்து காக்கவும், அழகு உள்ளிட்ட பல தேவைகளுக்காகவும் காலில் அணியப்படுகின்றது.

மனிதர்களின் பாதங்களில் அளவுக்கேற்ப மற்றும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப பல வகைகளிலும் பல வண்ணங்களிலும் அணியப்படுகின்றது.

காலணி வேறு பெயர்கள்

  • சப்பாத்து
  • செப்பல்
  • மிதியடி
  • செருப்பு
  • அடையல்
  • கழல்
  • தோற்பரம்
  • பாதக்காப்பு
  • பாத அரண்
  • அடிபுனைதோல்
  • குறட்டுச் செருப்பு
  • குத்திச் செருப்பு
  • தொடுதோல்
  • நடையன்
You May Also Like:
ஊழிக்காலம் என்றால் என்ன
தனம் என்றால் என்ன